nalaeram_logo.jpg
(1934)

ஆர்மலி யாழி சங்கொடு பற்றி ஆற்றலை யாற்றல் மிகுத்துக்,

கார்முகில் வண்ணா. கன்சனை முன்னம் கடந்தநின் கடுந்திறல் தானோ,

நேரிழை மாதை நித்திலத் தொத்தை நெடுங்கடல் அமுதனை யாளை,

ஆரெழில் வண்ணா அங்கையில் வட்டாம் இவளெனக் கருதுகின் றாயே.

பதவுரை

கார் முகில் வண்ணா

-

காளமேகநிறத்தனே!

ஆர் எழில் வண்ணா

-

மிக்க அழகுடையவடிவு படைத்தவனே!,

நேர் இழை

-

நேர்மையான ஆபரணங்களை யுடையவளாய்

நித்திலம் தொத்தை

-

முத்துமாலை போன்றவளான

நெடு கடல்

-

பெரிய கடலில் தோன்றிய அம்ருதம் போன்றவளான

மாதை

-

இப்பெண்பிள்ளை விஷயத்திலே

இவள் அங்கையில் வட்டு ஆம் என கருதுகின்றாய்

-

‘உள்ளங்கையிலுள்ள கருப்புக்கட்டிபோன்ற வளாமிவள்’ என்று நினைத்திருக்கிறாய்,

(இப்படி நினைத்திருப்பதானது)

முன்னம்

-

முன்பு

ஆர் மலி

-

கூர்மை மிக்க

ஆழி

-

திருவாழியையும்

சங்கொடு

-

திருச்சங்கையும்

பற்றி

-

கையிலேந்தி, (அவதரித்து)

ஆற்றலை

-

மிடுக்கை

ஆற்றல் மிகுத்து

-

ஆறுதல் மிகும்படியாக்கி (யடக்கி)

கஞ்சனை

-

கம்ஸனை

கடந்த

-

தொலைப்பதற் குறுப்பாயிருந்த

நின் கடு திறல் தானோ

-

உன்னுடைய வலியதான பராக்ரமத்தை நினைத்தோ?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- விலக்ஷணமான ஆபரணங்களை யணிந்துள்ளவளும், அணைத்தால் தாபமெல்லாம் ஆறும்படியாக முத்துக்கொத்து போல் குளிர்ந்த வடிவுடையவளும், கடலில் தோன்றி அமுதம்போல இனியளுமான இப்பரகால நாயகியை ஒரு சரக்காகவே மதிக்கின்றாயில்லையே!, இஃது என்? நாம் சங்கு சக்கரங்களைக் கையிலேந்தியுள்ளோம் என்கிற பெருமையைப் பாராட்டியோ? கம்ஸனை முடித்த மிடுக்குடைய நமக்கு இவள் ஒரு சரக்கோ! என்று நினைத்தோ? சொல்லாய் பிரானே! என்கிறாள்.

ஆர்மலியாழி -ஆர் -கூர்மை. இனி, ஆர் என்று அரங்களுக்கும் பெயருண்டாதலால் அரங்கள் நிரம்பிய சக்கரம் என்றுமாம். (ஆற்றலை ஆற்றல் மிகுத்து) முதலிலுள்ள ‘ஆற்றல்’ என்பதற்குப் பராக்ரம்மென்று பொருள். அதற்குமேல், ஆற்றலாவது - ஆறுதல். ஆற்றல் மிகுத்து -ஆறுதல் மிகும்படியாகச் செய்து, பராக்ரமத்தை ஆறுதல் மிகும்படியாகச் செய்தலாவது - உலகத்தை யெல்லாம் ஸம்ஹரிக்கவல்லதான பராக்ரமத்தை ஒரு புழுவான கம்ஸனளவிலே அடக்கி உபயோகப்படுத்தின படியைச் சொன்னவாறு. தனக்குள்ள பராக்ரமத்தை முழுவதும் செலுத்தாமல் அதில் ஸ்வல்ப பாகங்கொண்டே கம்ஸனைக் கடிந்தமை கூறியவாறு. இங்கே வியாக்கியான வாக்கியங் காண்மின், - “(ஆற்றல் மிகுத்து) ஒரு ஜகதுபஸம்ஹாரத்துக்குப் போந்திருக்கச் செய்தே கம்ஸனளவிலேயாம்படி அமைத்து.“

(அங்கையில்வட்டாம் இவளெனக் கருதுகின்றாய்) “கையிலிருந்த கருப்புக் கட்டி தின்னவுமாய்ப் பொகடவுமாயிருக்குமிறே, அப்படியே நினைத்திருக்கிறாயோ இவளையும்“ என்பது வியாக்கியானம். உலகத்தில் எல்லார்க்கும் கைப்படாத பொருள்களில் விருப்பம் பெருகிச் செல்லுமேயன்றி, அப்பொருள்தானே கைப்பட்டுவிட்டால்பிறகு அதில் உபேக்ஷையே உண்டாகும். அதுபோல இப்பரகால நாயகியும் கைப்பட்ட சரக்காதலால் இவளை அலக்ஷியம் செய்கிறாய் போலும் என்கை.

English Translation

O Dark-cloud Lord! O beautiful Lard! Then in the yore you wielded a conch and discus, This jewelled girl, this garland of pearls, is sweet as ambrosia, You destroyed the mighty kamsa with ease! Is it that power of your that you take her to be as easy as the proverbial candy in her hands?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain