(1933)

மன்றில் மலிந்து கூத்துவந் தாடி மால்விடை யேழும டர்த்து, ஆயர்

அன்று நடுங்க ஆனிரை காத்த ஆண்மைகொ லோவறி யேன் நான்,

நின்ற பிரானே நீள்கடல் வண்ணா. நீயிவள் தன்னை நின் கோயில்,

முன்றி லெழுந்த முருங்கையில் தேனா முன்கை வளைகவர்ந் தாயே.

 

பதவுரை

நின்ற பிரானே

-

திருமலையில நின்றருளும் பிரானே!

நீள் கடல் வண்ணா

-

பெரிய கடல்போன்ற வடிவையுடையவனே!

நீ

-

நீ

நீன் கோயில் மூன்றில் எழுந்த முருங்கையில் தேன் ஆ

-

தன் கோயில் முற்றத்திலுண்டான முருங்கை மரத்தின் தேனை எளிதாகக் கவருமாபோலே

இவள் தன்னை

-

இப்பெண்மகளினுடைய

முன் கைவளை

-

முன்கையிலுள்ளவளைகளை

கவர்ந்தாயே

-

கைக்கொண்டாயே,

(இது)

மன்றில் மலிந்து

-

நாறசந்தியிலே பொருந்தி நின்று.

உவந்து

-

திருவுள்ளமுகந்து

கூத்து ஆடி

-

(குடக்கூத்து முதலிய கூத்துகளை யாடியும்)

மால் விடை ஏழும் அடர்த்து

-

கரிய காளைகளேழையும் வலியடக்கியும்,

அன்று

-

(இந்திரன் கல்மாரி பொழிந்த) அக்காலத்தில்

ஆயர் நடுங்க

-

இடையர்கள் நடுங்கிநிற்க

ஆநிரை

-

பசுக்கூட்டங்களை

காத்த

-

ரக்ஷித்தோமென்கிற

ஆண்மை கொலோ

-

மேனாணிப்பினாலோ?

நான் அறியேன்

-

என்ன காரணமென்று நான் அறிகின்றிலேன்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நாற்சந்திகளிலே பெண்கள் கண்குளிர நின்று குடக்கூத்தாடி ஸ்திரீரத்னங்கள் பலவற்றையும் மயக்கியாண்டுகொண்ட நமக்கு இந்தப் பரகால நாயகி யொருத்தி ஒரு சரக்கோ? என்று நினைக்கிறாய் போலும், கொழுத்துச் செருக்கியிருந்த ஏழு ரிஷபங்களையும் வலியடக்கி நப்பின்னைப் பிராட்டியை மணந்துகொண்ட நமக்கு இவள் ஈடோ? என்று நினைக்கிறாய் போலும். கோவர்த்தன மலையைக் குடையாக ஏந்தி நின்று கோவலரையும் கோநிரையையும் காத்தருளின பெருமை வாய்ந்த நமக்கு இவளொருத்தியை உபேக்ஷிக்குமளவால் என்ன குணக்கேடு வந்திடப்போகிறது! என்று நினைக்கிறாய் போலும் என்றாள் முன்னடிகளில் திருத்தாய், அதைக்கேட்ட எம்பெருமான் ‘இவளை நான் உபேக்ஷித்ததாகச் சொல்லுதற்கு யாதுகாரணம்? எதைக் கொண்டு நான் இவளை உபேக்ஷித்தேனாகச் சொல்லுகிறாய்? என்று கேட்க, இவள் தன்னை முன்கைவளை கவர்ந்தாயே!’ என்கிறாள். கையில் வளை நிற்கமாட்டாதபடி. இவளை ஒரு துரும்புபோலே இளைக்க செய்துவிட்டாயே! இது கொண்டு சொல்லுகிறேனென்றபடி.

நின்கோயில் முன்றிலெழுந்த முருங்கையில் தேனா -நெடுந்தூரத்திலிருப்பதன்றியே ஸமீபத்தில் வாசதிலே உள்ளதான ஒரு மரத்தில் தேன் இருந்தால் அதனை எப்படி எளிதாகக் கவரலாகுமோ, அப்படி எளிதாக இவளது கைவளைகளைக் கவர்ந்து கொண்டாயே! என்றவாறு.

மன்றில் மலிந்து கூத்தாடின ஆண்மையை நினைத்தோ, மால்விடை யேழுமடர்ந்த ஆண்மையை நினைத்தோ, ஆநிரை காத்த ஆண்மையை நினைத்தோ நீ இவ் தன்னை முன் கைவளை கவர்ந்தாய்? என விரிக்க.

 

English Translation

O Venkatam Lord! O Lord of deep-ocean hue! You stood at the cross roads and danced in joy, subdued seven dark buls, and saved the cows in distress! Was it a show of manliness that you stole the bangles from this girl;s hands -as deftly as the proverbial honey from the home garden;s Murugai tree? I do now know

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain