nalaeram_logo.jpg
(1932)

புள்ளுரு வாகி நள்ளிருள் வந்த பூதனை மாள, இலங்கை

ஒள்ளெரி மண்டி யுண்ணப் பணித்த ஊக்க மதனை நினைந்தோ,

கள்ளவிழ் கோதை காதலு மெங்கள் காரிகை மாதர் கருத்தும்,

பிள்ளைதன் கையில் கிண்ணமே யொக்கப் பேசுவ தெந்தை பிரானே.

பதவுரை

எந்தை பிரானே

-

எம்பெருமானே!

எங்கள் கள அவிழ்கோதை காதலும்

-

தேனொழுகுகின்ற மயிர் முடியையுடையளான என்மகளின் ஆசையையும்

காரிகை மாதர் கருத்தும்

-

(அவ்வாசையைப் பழிக்கின்ற) அழகியாருடைய கருத்தையும்

பிள்ளை தன் கையில் கிண்ணமே ஒக்க பேசுவது

-

சிறுபிள்ளையின் கையிலுள்ள கிண்ணத்தை உபேக்ஷித்திருக்குமா போலே உபேக்ஷித்திருப்பதானது,

புள் உரு ஆகி

-

(சிறுகுழந்தைகளை அனுங்கச் செய்யவல்ல)பறவையினுருவத்தையுடையவளாகி

நள் இருள்

-

நடுநிசியிலே

வந்த

-

(முலைகொடுத்துக் கொல்ல) வந்த

பூதனை

-

பூதனை

மாள

-

மாளும்படியாகவும்

இலங்கை

-

லங்காபுரியை

ஒள் எரி மண்டி உண்ண

-

ஜ்வலிக்கிற அச்நிவியாபித்து புஜிக்கும்படியாகவும்

பணித்த

-

செய்தற்குறுப்பான

ஊக்கம் அதனை

-

நிடுக்கை

நினைந்தோ

-

திருவுள்ளம்பற்றியோ?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “பிள்ளை கையிற் கிண்ணம் மெள்ளவே கொள்ளலாம்“ என்ற பழமொழி இப்பாசுரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மிக்க வலிமையுள்ளவர்கள் பொற்கிண்ணமொன்றைக் கவர்ந்தால் அதை மீட்டுக் கைப்பற்றுவதற்கு ப்ரயாலங் கொள்ளவேணும், அங்ஙனல்லாமல் சிறுபிள்ளை கவர்ந்த கிண்ணத்தைக் கைப்பற்றிக் கொள்ளவேணுமானால் அதற்காக ப்ரயாஸப்படவேண்டுவதில்லை, நினைத்தபோது எளிதாக வாங்கிக் கொள்ளுகிறோமென்று ஆறியிருக்கும்படியாக இருக்குமே யன்றிப் பதறவேண்டியிராது, அதுபோல இப்பரகாலநாயகி விஷயத்தில் நீ நினைத்திருக்கிற யென்றது, இவளை அவ்விதமாக அலக்ஷியம் செய்திருக்கிறா யென்றபடி.

எங்கள் கள்ளவிழ்கோதை காதலையும் அலக்ஷியம் செய்கிறாய், காரிகை மாதர் கருத்தையும் அலக்ஷியம் செய்கிறாய் என்று பின்னடிகளிற் கூறப்படுகின்றது. அதாவது, இவளுடைய கரைபுரண்ட காதனை நோக்கி நீ பதறியோடி வந்து இவளை கைப்பற்றவேணும், அது செய்கின்றிலை, வகுத்த விஷயத்தில் காதல் கொண்டவிது நன்றே என்று உகந்திடாமல் இதனைப் பழிக்கின்ற ஊரவர் ழிச்சொற்களை நோக்கியாகிலும் பதறியோடிவந்து இவளைக் கைப்பற்றி, பழிப்பவர்களின் முகத்தைப் பங்கம் செய்திடவேணும், அதுவும் செய்கின்றிலை, இரண்டையும் அலக்ஷியம் செய்திருக்கிறாய் என்றவாறு.

இப்படி இவளை உபேக்ஷித்திருப்பதற்குக் காரணம் யாது? 1. “நல்லவென்தோழீ! நாகணை மிசை நம்பரர், செல்வர் பெரியர், சிறுமானிடவர் நாம் செய்வதென்?“ என்னும்படியான உன்னுடைய பெருமைகளைப் பாராட்டியோ இவளை இங்ஙனே அலக்ஷியஞ் செய்திருக்கிறது? என்கிறாள் முன்னடிகளில் பூதனையை முலையுண்டு முடித்த பெருமிடுக்குடைய நமக்கு இவள் ஈடோ? இராவணனை முடித்த மஹாவீரனான எனக்கு இவள் ஏற்றிருப்பளோ? என்று திருவுள்ளம்பற்றியிருக்கிறாய் போலும். க்ருஷ்ணாவதாரத்திலும் ராமாவதாரத்திலும் காட்டின பராக்கிரமங்களை நினைத்துச் செருக்கியிருக்கிறாய் போலும் என்றவாறு.

புள்ளுருவாகிவந்த பூதனை - பூதனையானவன் பகாஸுரனைப்போலே பறவையினுருவங் கொண்டு வந்தாளென்று சொல்லுகிறதன்று, மேலே ஸஞசரித்துக் குழந்தைகளை அனுங்கப்பண்ணும் சில பறவைகளுண்டு, அப்படிப்பட்டவளாய் வந்தாளென்று இவளுடைய கொடுமையைக் குறிப்பிட்டவாறு.

புள்ளுருவாகி நள்ளிருள் வந்த பூதனை மாளப்பணித்த ஊக்கமதனை நினைந்தோ? இலங்கை யொள்ளெரி மண்டியுண்ணப் பணித்த ஊக்கமதனை நினைந்தோ? என்று இரண்டு வாக்யார்த்தமாக விவக்ஷிதம். இனி, ;புள்ளுருவாகி; என்பதைப் பூதனைக்கு விசேஷணமாக்காதே எம்பெருமானுக்கே விசேஷணமாக்கி, புள்ளுருவாகிப் பணித்த ஊக்கமதனை நினைந்தோ? நள்ளிருள்வந்த பூதனை மாளப்பணித்த ஊக்கமதனை நினைந்தோ? இலங்கை யொள்ளெரி மண்டியுண்ணப்பணித்த ஊக்கமதனை நினைந்தோ? என்று மூன்று வாக்கியார்த்தமாக செய்தருளினபடியைச் சொல்லுகிறது. ஹம்ஸாவதாரமும் க்ருஷ்ணாவதாரமும் ராமாவதாரமும் செய்தோ மென்கிற செருக்குக் கொண்டோ இவளை உபேக்ஷிக்கிறாய் என்றதாயிற்று.

ஊக்கம் -பரத்வம், அஹங்காரம், மிடுக்கு.

ஈற்றடியில் பேசுவது என்றது, வாய்விட்டுச் சொல்லுகிறபடியைக் கூறுவதன்று, நெஞ்சில் நினைக்கிறபடியைக் கூறுவதாமத்தனை, இலக்கணையால்.

English Translation

O Lord! You speak lightly of our coiffured daughter;s love for your and the slander of the ladies, as if it were easy to retrieve her heart, like the proverbial cup from a child;s hands. Is it because you could destroy the ogrees Putana and burn the city of Lanka with ease?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain