nalaeram_logo.jpg
(1902)

நீண்டான் குறளாய் நெடுவா னளவும்  அடியார் படுமாழ் துயராய வெல்லாம்,

தீண்டா மைநினைந் திமையோ ரளவும் செலவைத் தபிரான் அதுவன் றியும்முன்,

வேண்டா மைநமன் றமரென் தமரை வினவப் பெறுவார் அலர்,என்று, உலகேழ்

ஆண்டா னவன்காண்மின் இன்றாய்ச் சியரால் அளைவெண்ணெ யுண்டாப் புண்டிருந்தவனே.

பதவுரை

அடியார் படும்

-

பக்தர்கள் அநுபவிக்கிற

ஆழ் தயராய் எல்லாம்

-

கொடிய பாப பலன்களெல்லாம்

தீண்டாமை

-

அவர்களை ஸ்பர்சியாதபடி

நினைந்து

-

திருவுள்ளம்பற்றி

குறள் ஆய்

-

வாமணமூர்த்தியாகி

நெடு வான் அளவும்

-

பரம்பிய ஆகாசமெங்கும்

நீண்டான்

-

வளர்ந்தவனாய்,

இமையோர் அளவும்

-

நித்யஸூரிகள்ளவும்

செல

-

செல்லும்படியாக

வைத்த

-

திருவடிகளை உயர்த்தி வைத்தருளின

பிரான்

-

உபகாரகனாய்

அது அன்றியும் முன்;

வேண்டாமை

-

(‘எல்லாரையும் யமபடர்கள் ஆராயக்கடவர்கள்’ என்று தானே யிட்ட கட்டளையை) வேண்டாமையினாலே

நமன் தமர் என் தமரை வினவப்பெறுவார் அலர் என்று

-

;யமபடர்கள் எம்மடியாரை ஆராயக்கடவர்களல்லார் என்று நியமித்தருளி

உலகு ஏழ் ஆண்டான் அவன் காண்மின்

-

உலகங்களையெல்லாம் ரக்ஷித்தருளினவனன்றோ

இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய்உண்டு ஆப்புண்டு இருந்தவன்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இப்பாட்டின் முன்னடிகளை இரண்டுபடியாக நிர்வஹிக்கலாம், எங்ஙனெ யென்னில், குறளாய் நெடுவானளவும் நீண்டான் என்று ஒரு வாக்கியமாகவும், “அடியார்படும்“ என்று தொடங்கி “இமையோரளவும் செலவைத்த பிரான்“ என்றளவளவும் வேறொரு வாக்கியமாகவும் யோஜித்தல் ஒருவகை, இந்த யோஜநையில், ‘நீண்டான் குறளாய் நெடுவானளவும்’ என்ற மட்டுமே த்ஜீவிக்ரமாவதார விஷயம் சொல்லுகிறது, அடியார்படுமென்று தொடங்கி மேல் வாக்கியத்தின் கருத்தாவது - தனக்கு அடிமைப்பட்டவர்கள் கீழ்க்காலங்களில் செய்த பாபங்களின் பலன்கைள அநுபவித்துத் தீர்க்க வேண்டாமல் “வாயினாற்பாடி மனத்தினாற் சிந்திக்கப் போயபிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்“ என்கிறபடியே அவை தன்னடையே கழிந்தொழியுமாறு திருவுள்ளம் பற்றி அவர்களுக்கு ஞானபக்தி விரக்திகளை வளரச் செய்துகொண்டு போந்து அவர்களை நித்யஸூரி துல்யராக ஆக்கி வைக்கும் பெருமான் என்கை. (இமையோரளவும் செல) நித்ய ஸூரித்வ ப்ராப்தி பர்யந்தமாக -நித்ய ஸூரிகளாகவும் அய்விடும்படியாக என்றவாறு. வைத்த பிரானென்றது வைக்கும் பிரானென்றபடி. இனி மற்றொரு யோஜனை பதவுரையிற் காணத்தக்கது. மஹாபலியின் செருக்கினால் அடியார்கள் துயறற்றிருந்ததனால் அத்துயர் நீங்குமாறு வாமநமூர்தியாய் மாவலி வேள்வியிற் சென்று நெடுவானளவும் நீண்டவனாகி இமையோரளவும் செல்லும்படியாகத் திருவடிகளை நீட்டிவைத்த பிரான் என்றவாறு.

தன்னடியார் திறத்தில் யமபடர்கள் ஒன்றும் ஆராய வொண்ணாதபடி எம்பெருமான் தனது அடியார்களைப் பாதுகாக்குந்திறம் மூன்றாமடியிற் கூறப்பட்டது. ஸ்ரீ விஷ்ணுபுராணத்தில் “ஸ்வபுருஷமபிவீக்ஷய பாசறஸ்தம் வத்தி ய கில தஸ்ய கர்ணமூலே பரிஹா மதுஸூதந ப்ரபந்நாந் ப்ரபுர ஹமந்யந்ருணாம் ந வைஷ்ணவாநாம்“ என்றதும், திருமழிசைப்பிரான் நான் முகன் திருவந்தாதியில் “திறம்பேன்மின் கண்டீர் திருவடி தன் நாமம், மறந்தும் புறந்தொழாமாந்தர் - இறைஞ்சியும், சாதுவராய்ப் போதுமின்களென்றான் நமனும் தன், தூதுவரைக் கூவிச் செவிக்கு.“ என்றருளிச் செய்த்தும் இங்கு அறியத்தக்கன.

(வேண்டாமை) “உயிரும் தருமனையே நோக்கும்“ என்ற பொதுவான ரீதியின்படி பாகவதர்களின் உயிரும் யமனுக்கு வசப்படவேண்டிய தாயிருக்கச் செய்தேயும் பொதுவிதியைப் பாகவதர் திறத்திலும் உபயோகப்படுத்த வேண்டாமையினாலென்றபடி. (என் தமரை நமன்தமர் வினவப்பெறுவாரலர்) வினவுதல் - தண்டனை செய்தலுக்குப் பரியாயம். ‘என்னுடைய பக்தர்கள் எவ்வகைப்பட்ட பிழைகளைச் செய்தவராயினும் அவர்களை யமபடர்கள் தண்டிக்க வுரியாரல்லர்’ என்று எம்பெருமான் கட்டளையிட்டு வைத்து ஜகத்பரிபாலனம் பண்ணுகிறானென்கிறது.

இப்படி பிறர்க்கு நோக்கூடிய பாசங்களையும் தவிர்த்தருளவல்ல பெருமை வாய்ந்தவன் இன்று ஆய்ச்சியர் பாசங்களால் கட்டுண்டிருக்கு மெளிவரவு என்னே! என்றாராயிற்று.

English Translation

The manikin came and grew, then took his foot up into the sky, that his devotees may never face despair. He is also the one who broke the law of karma and ruled, "Yama;s agents shall not touch our devotees", and thus established a reign over the seven worlds, And look, now he is leashed to a mortar for stealing the cowherd-dame;s butter!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain