nalaeram_logo.jpg
(1858)

இரக்க மின்றியெங் கோன்செய்த தீமை இம்மை யேயெமக் கெய்திற்றுக் காணீர்

பரக்க யாமின் றுரைத்தென் இரவணன் பட்ட னனினி யவர்க்கு ரைக்கோம்

குரக்கு நாயகர் காள் இளங் கோவேகோல வல்வி லிராம பிரானே

அரக்க ராடழைப் பாரில்லை நாங்கள் அஞ்சி னோந்தடம் பொங்கத்தம் பொங்கோ.

பதவுரை

எம் கோன்

-

எங்களுக்குத் தலைவனான இராவணன்

இரக்கம் இன்றி

-

ஈரநெஞ்சு இல்லாமல்

செய்த

-

பண்ணின

தீமை

-

அபசாரமானது

இம்மையே

-

இப்பிறப்பிலேயே

எமக்கு

-

எங்களுக்கு

எய்திற்று காணீர்

-

பலித்துவிட்டது பாருங்கோள்

இன்று

-

இப்போது

யாம்

-

நாங்கள்

பார்க்க

-

விரிவாக

உரைத்து என்

-

சொல்லுவதனால் என்ன பயன்?

இராவணன் பட்டனன்

-

ராவண்ன் மாண்டு போனான்,

இனி

-

இனிமேல்

யாவர்க்கு உரைக்கோம்

-

யாருக்குச் சொல்லுவோம்

குரங்கு நாயகர்காள்

-

வாநரஸேநாபதிகளே!

இளங்கோவே

-

இளைய பெருமாளே!

கோல் வல்வில் இராமபிரானே

-

அழகிய திண்ணிதான சார்ங்கவில்லைக்கொண்ட ஸ்ரீராமபிரானே!

அரக்கர்

-

ராக்ஷஸஜாதியில்

ஆடு அழைப்பார் இல்லை

-

வெற்றியைச் சொல்லிக் கூவுவாரில்லை

நாங்கள்

-

(தோற்றொழிந்த) நாங்கள்

அஞ்சினோம்

-

பயப்படுகின்றோம்

தடம் பொங்கத்தம் பொங்கோ

-

தோற்ற தோல்விக்கு நாங்கள் ஆடுகிற ஆட்டங்காண்மின் என்றவாறு.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- வாநர வீரர்களையும் இளைய பெருமாளையும் ஸ்ரீராமபிரானையும் விளித்து இலங்கையரக்கர்கள் தங்கள் தோல்வியும் இவர்களின் வெற்றியும் தோற்றச் சொல்லிக் கூத்தாடுகின்றனர்.

“அத்யுத்கடை - புண்யபாபை இஹைவ பலமச்நுதே.“ என்பது சாஸ்த்ரம். புண்யமோ பாபமோ எல்லைகடந்து செய்யப்படின் அவற்றின் பலன் அந்த ஜன்மத்திலேயே அநுபவிக்கக் கூடியதாகும் என்பது இதன்கருத்து. இந்த சாஸ்த்ரம் தங்கள் திறத்தில் பலித்துவிட்ட தென்கிறார்கள். (எங்கோன் இரக்கமின்றிச் செய்த தீமை இம்மையே எமக்கு எய்திற்று.) பாவம் செய்தவன் அவன், அந்தப் பாவத்தின் பலன் அவனளவோடு நில்லாமல் எங்களளவும் பலித்துவிட்டது, (அதாவது) நாங்கள் உயிர்க்கு மன்றாடும்படியான நிலைமை நேர்ந்துவிட்டது என்கிறார்கள். பெருமாளும் பிராட்டியுமான சேர்த்தியைக்கண்டால் “மல்லாண்ட திண்டோள் மணிவண்ணா! உன் சேவடி செவ்வி திருக்காப்பு வடிவாய்நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு“ என்று மங்களாசாஸநம் பண்ண ப்ராப்தமாயிருக்க அது செய்யப்பெறாதே மிதுநத்தைப் பிரித்த கொடுமையை நினைத்து ‘இரக்கமின்றி’ என்றது. அன்றியே, ;நாம் செய்யும் பெரும் பிழை நம்மோடு போய்விடாது, இதன்பலனை நம்முடைய ஸம்பந்தி ஸம்பந்திகளும் அநுபவிக்கவேண்டியதாகும், அந்தோ! நம்மால் நம்முடையவர்கட்கும் பெருந்துன்பம் விளையுமே!; என்று மனமிரங்காமல் என்று முரைக்கலாம். இராவணன் செய்த கொடுமையைத் தங்கள் வாயாலே விவரித்துச் சொல்லக் கூசிப் பொதுப்படையாக ;எங்கோன் செய்ததீமை; என்கிறார்கள்.

இராவணன்பட்டனன் -மேல் ஏழாம் பாட்டில் “ஏழையை யிலங்கைக் கிறைதன்னை எங்களை யொழியக் கொலையவனை“ என்று -குற்றஞ்செய்யாத எங்களைவிட்டு விட்டு குற்றவாளியான இராவணனை மாத்திரம் கொல்லவேணுமென்பதாக வேண்டிக் கொள்கின்றமையால் இராவணன் இன்னமும் முடிந்திலன் என்பது தெரிகின்றதே, அப்படியிருக்க ‘இராவணன்பட்டனன்’ என்று இங்குச் சொல்லுகிறபடி எங்ஙனே? என்று சங்கிக்கக்கூடும், “இனி இவனுக்கு மரணம் ஸித்தம், பிழைப்பது கிடையாது; என்கிற நிச்சயம் தங்கட்கு தோன்றிவிட்டதனால் ‘ஜீவச்சவம்’ என்னுங்கருத்தாலே பட்டனன் என்கிறார்களென்க.

குரங்கு நாயகர், குரங்குநாயகர், மென்றொடர் வன்றொடராயிற்று. ஸுக்ரீவன், ஹநுமான், அங்கதன், ஜாம்பவான் முதலானவர்களை உளப்படுத்திக் குரக்குநாயகர்கள்! என்றது.

அரக்கராடழைப்பாரில்லை – ‘ராக்ஷஸரில் இனி ஆடுபோலே கூப்பிடக்கடவாரில்லை’ என்று நஞ்சீயர் நம்பிள்ளைக்குப் பொருள் பணிக்க, அதனை நம்பிள்ளை கேட்டு, ‘ஆடு என்று வெற்றிக்கும் வாசகமாதலால், இந்தராக்ஷஸஜாதியில் வெற்றி சொல்லுவாரில்லை, (அதாவது) தோற்றோம் தோற்றோம் என்று தோல்வியைச் சொல்லவல்லாருள்ளோ மத்தனையொழிய வென்றோமென்று விஜயத்தைச் சொல்லிக்கொள்ள வல்லாரில்லை. என்று பொருள்கூறலாகாதோ? என்ன, நஞ்சீயரும் இதைக்கேட்டருளி ‘இதுவெபொருந்தும்பொருள், இப்படியே சொல்லிக்கொள்ள அமையும்’ என்று நியமித்தருளினராம்.

நாங்கள் அஞ்சினோம் - குற்றவாளியான இராவணன்கீழ்க் குடிவாழ்ந்தவர்களென்னுங்காரணத்தினால் எங்களையுங் கொன்றொழித்து விடுகிறீர்களோ வென்று பயப்படுகின்றோ மென்கை. (தடம் பொங்கத்தம் பொங்கோ) எங்களுடைய தோல்வியையும் உங்களுடைய விஜயத்தையும் தெஜீவிக்குமாறு நாங்கள் ஒரு கூத்தாடுகிறோங் காண்மின் என்றவாறு.

English Translation

Masters! Heartlessly our king did many wrongs, here and now they are rebounding upon us, what is the use in our delving on all this, -Ravana has been killed, -whom to tell this? kings of the big monkey clant O, Prince Lakshmana! O Bow-wielder Rama, Alas, no one here to plead mercy for us fiends! We dance in fear to the sound of the wardrum pongottam Pongo!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain