nalaeram_logo.jpg
(1839)

எவ்வநோய் தவிர்ப்பான் எமக்கிறை இன்னகைத் துவர்வாய், நிலமகள்

செவ்வி தோய வல்லான் திருமா மகட்கினியான்,

மௌவல் மாலைவண்டாடும் மல்லிகை மாலையொடு மணந்துமாருதம்

தெய்வம் நாற வரும்திருக் கோட்டி யூரானே.

பதவுரை

எவ்வம் நோய் தவிர்ப்பான்

-

துக்கஹேதுவான வியாதிகளை நீக்கியருள்பவனும்

எமக்கு இறை

-

எமக்குவகுத்த ஸ்வாமியும்

இன் நகை துவர் வாய் நிலம் மகள்

-

இனிய புன்சிரிப்பையும் சிவந்த அதரத்தையுமுடையளான பூமிப்பிராட்டியினுடைய

செல்வி

-

அழகை

தோய வல்லான்

-

அநுபவிக்கவல்லவனும்

திரு மா மகட்கு இனியான்

-

பெரிய பிராட்டியார்க்கு போக்யனுமான எம்பெருமான்

வண்டு ஆடும்

-

வண்டுகள் சுழலமிடாநிற்கப் பெற்ற

மௌவல் மாலையோடும்

-

சாதிமல்லிகைப் பூக்களோடும்

மல்லிகை மாலையோடும்

-

மல்லிகைப் பூக்களோடும்

அணைந்த

-

ஸம்பந்தித்த

மாருதம்

-

காற்றானது

தெய்வம் நாற

-

திவ்யமான பரிமளத்தை வீசிக்கொண்டு

வரும்

-

வந்து உலாவப்பெற்ற

திருக்கோட்டியூரான்

-

திருக்கோட்டியூரிலுள்ளான்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நம்முடைய துன்பங்களை யெல்லாம் தீர்த்தருள்வதற்காகத் திருமகளும் நிலமகளுமாகிற பிராட்டிமாருடனே திருக்கோட்டியூரிலே ஸந்நிஹிதனென்கிறார். எவ்வநோய் தவிர்ப்பான் - எவ்வமாவது துக்கம், துக்கங்களைத் தருகின்ற நோய் என்ற ஸம்ஸாரமாகிற வியாதியைச் சொல்லுவதாகவுங் கொள்ளலாம். “எருத்துக்கொடியுடையானும் பிரமனு மிந்திரனும், மற்று மொருத்தரும் இப்பிறவியென்னும் நோய்க்கு மருந்தறிவாருமில்லை“ என்கிறபடி ஸம்ஸார நோய்க்கு அத்விதீய வைத்யனிறே எம்பெருமான். எமக்கிறையாகை யாலே எவ்வநோய் தவிர்ப்பான் என்று கார்ய காரணபாவந்தோற்று யோஜிப்பது.

இன்னகைத் துவர்வாய் நிலமகள் செவ்விதோயவல்லான் - அடியார்களின் குற்றங்களைக் கணக்கிட்டு எம்பெருமான் தகுந்த சிஷை நடத்துவதாக இருக்கையில், அருகேயிருக்கும் பூமிப்பிராட்டியானவள் அவனுடைய ப்ரபுத்வத்தைப் பரிஹஸிப்பது தோற்றப் புன்சிரிப்பாகச் சிரிப்பள், ‘நீர் செய்ய நினைத்தது மிகவும் நன்றாயிருந்தது. இச்சேதனுடைய குற்றங்களைக் கணக்கிட்டு நீர் இப்படி இவனைப் படுகுழியிலே தள்ளப்பார்த்தால் இவனுக்கு வேறொரு போக்கிட முண்டோ? இவனுக்கும் உமக்குமுள்ள ஸம்பந்தம் ஒழிக்க வொழியாத்தன்றோ? இவனைப் பெறுகை உம்முடையலாபமன்றோ?’ ‘நம் வலையில் ஆர் அகப்படுவார்?“ என்று தேடித்திரிகிற உமக்கு நான் சொல்லவேணுமோ? நீர் ஸர்வஜ்ஞராயிருந்து வைத்து நன்று செய்யப் பார்த்தீர்!’ என்பதான உட்கருத்துத் தோன்றப் புன்சிரிப்புச் செய்வளாம், அதிலேயீடுபட்டு மயங்கிப்போவன் எம்பெருமான் என்க.

திருமாமகட்கு இனியான் -நிலமகள் செவ்விதோயவல்லனாகையாலே அதுவே ஹேதுவாகப் பெரியபிராட்டியார்க்கு இனியனா யிருப்பனென்று சுவைமிக்க பொருளருளிச் செய்வர் பெரியவாச்சான்பிள்ளை. பூமிப்பிராட்டி முதலான தேவிமார்களுக்கு எம்பெருமான் விதேயனாக இருக்குமிருப்பைப் பெரியபிராட்டியார் தம் முலைகளோடும் தோளோடும் அணைந்திருக்குமிருப்பாக உகந்து வர்த்திக்கக் கடவராதலால் நிலமகள் செவ்வியிலே எம்பெருமான் தோய்ந்திருப்பது திருமகட்கு இனிமையாகக் குறையில்லை யென்க.

மூன்றாமடியில் ;அணைந்து; என்றும்பாடமுண்டு. ‘மணந்து’ என்பது சிலருடைய பாடமாம்.

English Translation

Our Lord rids us of the miseries of sickness. He enjoys the smile of red-lipped Dame Earth, and is ever-sweet to the lady of the lotus Lakshmi. The breeze blowing over his bee-humming garlands of Jasmine and Jaji spreads a heavenly fragrance in Tirukkottiyur

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain