(1837)

தேடற் கரியவ னைத்திரு மாலிருஞ் சோலை நின்ற,

ஆடல் பறவை யனை அணி யாயிழை காணுமென்று,

மாடக் கொடிமதிள் சூழ்மங்கை யார்கலி கன்றிசொன்ன

பாடல் பனுவல்பத் தும்பயில் வார்க்கில்லை பாவங்களே.

 

பதவுரை

தேடற்கு அரயவனை

-

(ஒருவற்கும் தன்முயற்சியாலே) தேடிப்பிடிக்க முடியாதவனும்

திருமாலிருஞ்சோலை நின்ற

-

திருமாலிருஞ்சோலை மலையில் எழுந்தருளியிருப்பவனும்

ஆடல் பறவையனை

-

(ஸந்தோஷத்திற்குப் போக்குவிடன) ஆட்டத்திற்சிறந்த பெரிய திருவடியை ஊர்தியாகவுடையனுமான ஸுந்தரபாஹுவை.

அணி ஆய் இழை காணும் என்று

-

அழகிய ஆபரணங்களையுடைய என்மகள் காணப்பெறுவளென்று.

மாடம் கொடி மதிள் சூழ் மங்கையார் கலிகன்றி சொன்ன

-

மாடங்களில் நாட்டின் கொடிகளோடு கூடின திருமதிள்களாலே சூழப்பட்ட திருமங்கை நாட்லுள்ளர்க்கு தலைவரான ஆழிவார்ருளிச்செய்த

பாடல்

-

பாடலாகிய

பனுவல் பத்தும்

-

இப்பத்துப்பாசுரங்களையும்

பயில்பார்க்கு

-

கற்பவர்களுக்கு

பாவங்கள் இல்லை

-

பாவமொன்று மில்லையாகும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இத்திருமொழியின் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான அவதாரிகையில் “இவளாற்றாமை யிருந்தபடியால் அவனோடே அணைந்த்தல்லது தரிக்கமாட்டாள் போலே யிருந்தது, அணைத்துவிட வல்லளோ? அன்றிக்கே இங்ஙனே நோவுபடுமித்தனையோ? என்று சங்கித்துப் பின்னையும் அவனைக் கிட்டியேவிடுவளென்று அறுதியிட்டுத் தரிக்கிறாளாயிருக்கிறது“ என்றருளிச் செய்திருக்கக் காண்கை யாலே இப்பாட்டில் “அணியாயிழை காணுமென்று“ என்றதை நிச்சயபரமாகவே உரையிடவேண்டும். ஆனால், கீழ் ஒன்பது பாசுரங்களிலும் (சொன்ன விஷயத்தையே யன்றோ நிகமனப் பாரசுரத்தில் எடுத்துறைக்க வேண்டும், கீழெல்லாம் நிச்சமினறி ஸந்தேஹிப்பதாக் தானே உள்ளது, நிச்சயித்ததாக எங்குக் கிடைத்தது? என்று சிலர் சங்கிப்பர், இப்பாசுரத்தில்

 

English Translation

This is a garland often sweet songs by Kalikanri, king of pennon-fluttering-mansions-Mangai tract, on a mother;s desire to unite her jewelled daughter to the Garuda-riding Lord of Tirumalirumsolai, who is hard to attain by seekers.  Those who master it will have no karmas

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain