(1835)

பார்த்தனுக் கன்றரு ளிப்பார தத்தொரு தேர்முன்னின்று,

காத்தவன் றன்னைவிண் ணோர்கரு மாணிக்க மாமலையை,

தீர்த்தனைப் பூம்பொழில் சூழ்திரு மாலிருஞ் சோலைநின்ற,

மூர்த்தியைக் கைதொழ வும்முடி யுங்கொலென் மொய்குழற்கே.

 

பதவுரை

அன்று

-

முன்பொருகாலத்தில்

பார்த்தனுக்கு

-

அர்ஜுநன்பக்கலிலே

அருளி

-

அருள்கூர்ந்து

பாரத்தது

-

பாரதயுத்தத்திலே

ஒரு தேர் முன் நின்று

-

ஸாரதியாயிருந்து

காத்தவன் தன்னை

-

ரக்ஷித்தருளினவனும்,

விண்ணோர்

-

நித்யஸூரிகள் அநுபவிக்கவுரிய

கரு மாணிக்கம் மா மலையை

-

கரிய பெரிய மாணிக்கமலை போன்றவடிவு படைத்தவனும்

தீர்த்தனை

-

பரமபவித்திரனும்

பூம்பொழில் சூழ்

-

திருமாலிருஞ்சோலையில்

நின்ற

-

நிற்பவனுமான

மூர்த்தியை

 

ஸ்வாமியை

கை தொழவும் என் மொய் குழற்கு முடியும் சொல்

 

ஸேவிப்பதற்கு அடர்ந்தகூந்தலை யுடையளான் என் மக்களுக்கு வாய்க்குமோ?

 

English Translation

The Lord is the dark mountain gem of the celestials who drove the charriot for Arjuna in the great Bharata war in the yore. He is the sacred icon in Tirumalirumsolai amid flower groves.  Will my well-coiffured girl at least be able to join her hands in worship today? I wonder!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain