(1834)

புள்ளினை வாய்பிளந் துபொரு மாகரி கொம்பொசித்து,

கள்ளச் சகடுதைத் தகரு மாணிக்க மாமலையை,

தெள்ளரு விகொழிக் கும்திரு மாலிருஞ் சோலைநின்ற,

வள்ளலை வாணுத லாள்வணங் கித்தொழ வல்லள்கொலோ.

 

பதவுரை

புள்ளினை வாய் பிளந்து

-

பகாஸுரனுடைய வாயைக் கிழித்தவனும்

பொரு மா கரி கொம்பு ஒசித்து

-

போர்செய்ய முயன்றி (குவலயாபீடமென்னும்) மதகரியின் கொம்பை முறித்தவனும்

கள்ளம் சகடு உதைத்த

-

திருட்டெண்ணங்கொண்ட சகடாஸுரனை (த் திருவடிகளால்) உழைத்தொழித்தவனும்

கரு மாணிக்கம் மா மலையை

-

பெரியகரிய மாணிக்கமலை போன்ற வடிவையுடையவனும்

தெள் அருளி கொழிக்கும்

-

தெளிந்த அருவிகள் பிரவஹிக்கப்பெற்ற

திருமாலிருஞ்சோலையில்

நின்ற

-

நிற்பவனும்

வள்ளலை

-

உதாரனுமான பெருமானை

வாள் நுதலாள்

-

ஒளிபொருந்திய நெற்றியை யுடையளான என்மகள்

வணங்கி தொழ வல்லள் கொலோ

-

ஸேவிக்கப்பெறுவளோ?

 

English Translation

The Lord is our dark mountain gem krishna who tore apart the beak of the Asura-bird Baka, then plucked the tusk of the rutted elephant kuvalayapida. He smote the bedevilled can with his foot.  He is our benevolent one residing in Tirumalirumsolai. Will my bright-forehead-girl be able to worship him today? I wonder!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain