(1830)

உண்டுல கேழினை யும் ஒரு பாலகன் ஆலிலைமேல்,

கண்டுயில் கொண்டுகந் தகரு மாணிக்க மாமலையை,

திண்டிறல் மாகரி சேர்திரு மாலிருஞ் சோலைநின்ற,

அண்டர்தம் கோவினை யின்றணு குங்கொலென் ஆயிழையே.

 

பதவுரை

உலகு எழினையும்

-

ஸப்தலோகங்களையும்

உண்டு

-

(பிரளயகாலத்தில்) திருவயிற்றினுள் அடக்கி

ஒரு பாலகன்

-

ஒரு சிறுகுழவியாய்

ஆல் இலை மேல்

-

ஓராலிலையின்மீது

கண் துயில் கொண்டு

-

திருக்கண்வளர்ந்தருளி

உகந்த

-

திருவுள்ள முவந்த

கரு மாணிக்கம்

-

பெரிய கருமாணிக்கமலை போன்ற வடிவையுடைய

திண் திறல் மா கரி சேர்

-

மிக்க வலிமை வாய்ந்த மதயானைகள் சேரப்பெற்ற

திருமாலிருஞ்சோலை

-

திருமாலிருஞ்சோலை மலையில்

நின்ற

-

நிற்பவனுமான

அண்டர் தம் கோவினை

-

தேவாதிதேவனை

என் ஆய் இழை

-

சுத்தமான ஆபரணங்களை யணிந்துள்ள என்மகள்

இன்று

-

இப்போது

அணுகும் கொல்

-

கிட்டப்பெறுவளோ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கருமாணிக்க மாமலையை - மாணிக்கம் கரிய நிறத்தன்றாதலால் இதனை இல்பொருளுவமை -(அபூதோபமை) யாகக் கொள்க.

“அண்டர்“ என்று இடையர்க்கும் தேவர்க்கும் பெயர். ஆயிழை - ஆய்தல் - ஆராய்தல், நல்லதாகப் பார்த்தெடுத்த அணியப்பட்ட ஆபரணங்களையுடையவள் என்கை, வினைத்தொகையன்மொழி.

 

English Translation

The Lord who swallowed the seven worlds and slept as a child on a fig leaf is the Lord of the celestials.  He is a dark mountain gem, residing in Tirumalirumsolai amid strong wild elephants. Will my tastefully jewelled daughter reach him today? I wonder!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain