(1829)

புனைவளர் பூம்பொழி லார் பொன்னி சூழரங் கநகருள்

முனைவனை, மூவுல கும்படைத் த முதல் மூர்த்திதன்னை,

சினைவளர் பூம்பொழில் சூழ் திரு மாலிருஞ் சோலைநின்றான்

கனைகழல் காணுங்கொ லோகயல் கண்ணியெம் காரிகையே.

 

பதவுரை

புனை வளர்

-

புன்னைமரங்கள் வளரப்பெற்ற

பூ பொழில் ஆர்

-

பூஞ்சோலைகளை யுடையதும்

பொன்னி சூழ்

-

திருக்காவேரியாலே சூழப்பட்டதுமான

அரங்கம் நகருள்

-

திருவரங்கம் பெரியகோயிலில்

(திருக்கண்வளர்ந்தருளுகிற)

முனைவனை

-

பிரதாநனும்

மூ உலகும் படைத்த

-

மூன்று லோகங்களையும் ஸ்ருஷ்டித்த

முதல் மூர்த்தி தன்னை

-

முக்கிய மூர்த்தியானவனும்

சினை வளர் பூ பொழில் சூழ்

-

பணைகள்மிக்க பூஞ்சோலைகளால் சூழப்பட்ட

திருமாலிருஞ்சோலை நின்றான்

-

திருமாலிருஞ்சோலையில் நிற்பவனுமான எம்பெருமானுடைய

கனை கழல்

-

(வீரக்கழலின்) ஒலியை யுடைத்தான திருவடிகளை

கயல் கண்ணி

-

கயல்போன்ற கண்களை யுடையளான

எம் காரிகை

-

எமது அழகியமகள்

காணும் கொலோ

-

ஸேவிக்கப்பெறுவளோ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஸ்ரீரங்கத்தில் திருப்புன்னை மரத்திற்கு ஸம்பிரதாய முறையில் ஒரு விசேஷமுண்டாதலாள் இங்குப் புன்னையையிட்டு விசேஷிக்கப்பட்டது.

 

English Translation

The resident Lord of Arangam surrounded by the kaveri river that flows through cool groves of Punnai trees, the first cause Lord who made the three worlds, resides in Tirumalirumsolai amid. dense fragrant groves.  Will my fish-eyed daughter see his tinkling feet today? I wonder!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain