(1828)

மூவ ரில்முன்மு தல்வன் முழங் கார்கட லுள்கிடந்து,

பூவுல ருந்திதன் னுள் புவனம் படைத் துண்டுமிழ்ந்த,

தேவர் கள்நா யகனைத் திருமா லிருஞ்சோலை நின்ற,

கோவ லர்கோவிந் தனைக் கொடி யேரிடை கூடுங்கொலோ.

 

பதவுரை

மூவரில்

-

த்ரிமூர்த்திகளுள்

முன் முதல்வன்

-

முக்கியனும்

முழங்கு ஆர்

-

(திரைக்கிளப்பத்தாலே கோஷித்தல் பொருந்திய

கடலுள்

-

திருப்பாற்கடலிலே

கிடந்து

-

திருக்கண்வளர்ந்தருளி

உந்தி

-

திருநாபியில்

அலர்

-

மலர்கின்ற

பூ தன்னுள்

-

(தாமரைப்) பூவிலே

புவனம்

-

உலகத்தை

படைத்து

-

ஸ்ருஷ்டித்து

உண்டு

-

(பிரளயகாலத்தில்) திருவயிற்றில்வைத்து நோக்கி

உமிழ்ந்த

-

பிறகு வெளிப்படுத்திவனும்

தேவர்கள் நாயகனை

-

நித்யஸூரிகளுக்கு நாதனும்

திருமாலிருஞ் சோலை நின்ற

-

திருமாலிருஞ்சோலை மலையில் நிற்பவனுமான

கோவலர் கோவிந்தனை

-

கோபாலக்ருஷ்ணனான எம்பெருமானை

கொடி எர் இடை

-

கொடிபோன்ற இடையை யுடையளான என் மகள்

கூடும் கொலோ

-

அணையப்டபெறுவளோ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- திருமாலிருஞ்சோலையழகரோடே கூடும்படியான பாக்கியம் எனக்குக் கிடைக்குமோ கிடைக்காதோவென்று ஆழ்வார் கவலைப்படுதல் இத்திருமொழிக்குப் பரமதாற்பரியம்.

மூவரில் முன் முதல்வன் - இந்திரனைக்கூட்டி மூவராக்கி, அம்மூவர்களிற் காட்டிலும் முபுமுதற் கடவுளாயிருப்பவன் என்றும் பொருள் கூறுவர். இரண்டாமடியில் “பூ வளருந்தி“ என்றும் பாடமுண்டு. புவனம் - வடசொல்.

 

English Translation

The first-cause Lord of the tri-murti, the Lord who reclines in the ocean, the Lord who made the universe on his lotus navel, then swallowed it, and remade it, the Lord of the celestials, the cowherd-Lord Govinda, resides in Tirumalirumsolai. Will my creeper-thin-waisted daughter blend with him today? I wonder!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain