nalaeram_logo.jpg
(1788)

தவள இளம்பிறை துள்ளுமுந்நீர்த் தண்மலர்த் தென்றலோ டன்றிலொன்றித்

துவள என் னெஞ்சகம் சோரவீரும் சூழ்பனி நாள்துயி லாதிருப்பேன்

இவளுமோர் பெண்கொடி யென்றிரங்கார் என்னல மைந்துமுன் கொண்டுபோன

குவளை மலர்நிற வண்ணர்மன்னு குறுங்குடிக் கேயென்னை யுய்த்திடுமின்.

பதவுரை

தவளம் இளபிறை

-

வெண்ணிறமுள்ள பாலசந்திரனும்

துள்ளும் முந்நீர்

-

அலையெறிகின்ற கடலும்

தண் மலர்தென்றலோடு

-

குளிர்ந்து பூக்களில்படிந்து வீசுகின்ற தென்றற் காற்றும்

அன்றில்

-

அன்றிற் பறவையும்

ஒன்றி

-

ஒன்று சேர்ந்து

என் நெஞ்சகம்

-

என்மனமானது

துவள

-

துர்ப்பலமாம்படியாகவும்

சோர

-

சிதிலம்படியாகவும்

ஈரும்

-

நோவுபடுத்துகின்றன;

சூழ் பனி நாள்

-

எங்கும் பனிபரவியிருக்கு மிக் காலத்தில்

துயிலாது இருப்பேன்

-

கண்ணுறங்காதேகிடக்கிறேன்;

இவளும் ஓர் பெண் கொடி என்று இரங்கார்

-

இவள் ஒரு இளம்பெண் ணன்றோ? என்று மனமிரங்காதவராய்

என்கலம் ஐந்தும்

-

எனது பஞ்சேந்திரிய வுணர்ச்சியையும்

முன்கொண்டு

-

முன்பு கொள்ளை கொண்டு பிரிந்து போன

குவளை மலர்நிறம் வண்ணர்

-

கருநெய்தற்பூவின் நிறம் போன்ற நிறமுடையரான பெருமாள்

மண்ணு

-

நித்யவாஸம்பண்ணுகிற

குறுங் குடிக்கே

-

திருக்குறுங்குடியிலேயே

என்னை உய்த்திடு மின்

-

என்னைக் கொண்டு சேர்த்திடுங்கள்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இத்திருமொழியில் பாசுரங்களெல்லாம் ;குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்; என்றே முடிகின்றன; ;உய்த்திடுமின்; என்ற முன்னிலை யேவற்பன்மை வினைமுற்றுக்கு ஏற்ப, பாசுரந் தோறும் ;அன்னைமீர்!; என்றோ ;தோழிமீர் என்றோ விளி வருவித்துக்கொள்க.

நிர்மலமாய்ப் பருவம் நிரம்பாத சந்திரன் உதித்தவாறே அனைவரும் ஆநந்தமாகக் கண்டு கொண்டிருக்க, பாவியேனுக்குமாத்திரம் அவன் நெருப்பயிருப்பதே!; அனைவரும் கடற்கரையிலே போய் உலாவி ஆநந்தத்திற்குப் போக்குவிடாநிற்க, அதுவும் பாவியேனுக்கு விஷமாயிருப்பதே!; எல்லோரும் தென்றல் வீசுகிறவழியே எதிர்பார்த்து நின்று அது மேலேபட இன்பம் நுகராநிற்க, அது பாவியேனுக்கு மாத்திரம் தீக்கதுவினாற்போல் ஆவதே!: அன்றிற் பறவைகளின் தொனி அனைவர்க்கும் காணாம்ருதமாயிருக்க, வல்வினையேனுக்கு மாத்திரம் கொன்னவிலுமொஃகிற கொடிதாவதே!; கீழ்ச்சொன்னவை யெல்லாம் தனித்தனியே என்னுயிரை மாய்க்கப் போதுமானவை; அராஜகமான தேசத்தில் எதிரிகளடங்கலும் ஸங்கேதம் செய்துகொண்டு உள்ளே புகுந்து நாலு வாசலையும் பற்றிக் குறும்பு செய்யுமாபோலே இவை நான்கும் கூடித் திரண்டு ஒருமுகஞ்செய்து பண்ணுகிற ஹிம்ஸை பேச்சுக்கு நிலமன்று; ஏற்கனவே நாயகனைப் பிரிந்த ஆற்றாமையினால் தரைபற்றி யிருக்கிற என் நெஞ்சு துவளும்படியாகவும் சோரும்படியாகவும் ஈர்க்கின்றன. இக்காலமோ பனிகாலம்; “ஒழுகு நுண்பனிக் கொடுங்கிய பேடையை யடங்க அஞ்சிறை கோலித் தழுவு நள்ளிருள்” என்னும்படியே, அணைத்த நாயகனுடைய கைக்குள்ளே அடக்க வேண்டுமிக்காலத்திலே அவனைப் பிரிந்து பாதகவஸ்துக்களின் கையிலே அகப்பட்டுக் கண்ணுறங்காதே துடிக்கின்றேன்: ;சிறுமியான இவள் இவற்றுக்கெல்லாம் ஆடல்கொடுக்க வல்லளோ? நாம் இவளை இத்தனை கொலைபாதகர் கையில் காட்டிக்கொடுத்து வருத்துவது தருமமன்று; என்று அப்பெரியவருக்குத் தன்னடையே, திருவுள்ளத்தில் இரக்கம் பிறக்கவேணும்; என்னுடைய தெளர்ப்பாக்யத்தாலே அவர் இரக்கமற்றொழிந்தார் தம்மைப் பிரிந்து பத்துமாஸம் தரித்திருந்த பிராட்டியைப்போலே என்னையும் நினைத்தாரேயன்றி என்னுடைய வைலக்ஷண்ய மறிந்து இரங்குகின்றிலர் ஆயினுமாகுக; என்னுடைய நினைத்தாரேயன்றி என்னுடைய வைலக்ஷண்ய மறிந்து இரங்குகின்றிலர் ஆயினுமாகுக;  என்னுடைய பஞ்சேந்திரியங்களின் வ்ருத்திகளையும் கொள்ளைகொண்டு அவர் சென்று வாழுமிடமான திருக்குறுங்குடியிலே என்னைக்கொண்டு சேர்த்து விடுங்கோள் என்றாளாயிற்று.

என் நலமைந்தும் கொண்டுபோன = இதற்கு இரண்டு வகையான நிர்வாஹமுண்டு; -செவி வாய் கண் மூக்கு உடல் என்னும் ஐந்து உறுப்புகளின் அறிவையும் வேறு விஷயங்களுக்கு ஆக வொண்ணாதபடி செய்து. தனக்கே ஆக்கிக்கொண்டுபோன; (அதாவது) பகவத் விஷய வார்த்தைகள் தவிர வேறு எந்த வார்த்தையையும் காது க்ரஹிக்க வொண்ணாமலும், வேறு எந்த விஷயத்தையும் வாய்பேச வொண்ணாமலும், வேறு எதையும் கண் காண வொண்ணாமலும், அவனுடைய திருத்துழாய்ப் பரிமளந் தவிர வேறு எந்த மணத்தையும் மூக்கு க்ரஹிக்க வொண்ணாமலும், உடல் வேறு எந்த வஸ்துவையும் அணைய விரும்பாதபடியும் செய்துபோன என்றபடி, இனி இரண்டாவது நிர்வாஹமாவது-திருநெடுந்தாண்டகத்தில் “மின்னிலங்கு திருவுருவம் பெரியதோளும்” (25) என்கிற பாட்டில் “என் நலனும் என்நிறையும் என்சிந்தையும் என்வளையுங் கொண்டு என்னையாளுங் கொண்டு” என்று ஐந்து வஸ்த்துக்களைக் கொண்டதாகச் சொல்லிற்றே; அவை ஐந்து - என்று அமுதனார் நிர்வஹிப்பராம்.

கொள்ளை கொள்பவர்கள் மயக்கிவிட்டன்றோ கொள்வது இங்கே நலமைந்துங் கொள்ளை கொள்ளும்போது; எதையிட்டு மயக்கிற்றென்ன, வடிவைக் காட்டி மயக்கிக்கொண்டுபோனா னென்பது தோன்றச் சொல்லுகிறாள் ;குவளைமலர் நிறவண்ணர் என்று.

குறுங்குடிக்கே என்னை உய்த்துமின் =  கீழ்ச்சொன்ன வஸ்துக்களெல்லாம் எனக்குப் பாதகமாவது இத்தனியிருப்பிலன்றோ; நாயகனுள்ள விடத்தே நான் சென்று சேரப்பெறில் இவையெல்லாம் எனக்கு ஆஹ்லாதகரமாகுமன்றோ; ஆகையால் அங்ஙனமாகும்படி பாருங்கள் என்றாளாயிற்று.

English Translation

The spotless crescent Moon, the wave-ridden ocean, the blossom-fragrant breeze, and the shrill cry of Anril birds, -all have joined hands to break and wrench my heart.  Through mist-filled days, I lie sleepless.  Long ago the lotus-hued Lord stole my senses and my well being.  Alas!  He does not pity me considering, "After all, she is frail maiden", Carry me now to his abode in kurungudi

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain