nalaeram_logo.jpg
(1762)

கோழியும் கூடலும் கோயில் கொண்ட கோவல ரேயொப்பர் குன்றமன்ன

பாழியும் தோளுமோர் நான்கு டையர் பண்டிவர் தம்மையும் கண்டறியோம்

வாழிய ரோவிவர் வண்ண மெண்ணில்மாகடல் போன்றுளர் கையில்வெய்ய,

ஆழியொன் றேந்தியோர் சங்கு பற்றி அச்சோவொருவரழகியவா.

பதவுரை

கோழியும்

-

உறையூரையும்

கூடலும்

-

தென் மதுரையையும்

கோயில் கொண்ட

-

இருப்பிடமாகவுடைய

கோவலரே ஒப்பர்

-

கோபாலக்ருஷ்ணன் போன்றிருக்கின்றார் இவர்;

குன்றம் அன்ன

-

மலை போன்ற

பாழி

-

வலிமை பொருந்திய

அம்

-

அழகிய

ஓர் நான்கு தோளும்

-

விலக்ஷணமான நான்கு திருத்தோள்களையும்

உடையர்

-

உடையராயிருக்கின்றார்;

இவர்தம்மை

-

இவரை

பண்டும்

-

முன்பொருகாலும்

கண்டு அறியோம்

-

நாம் பார்த்ததில்லை;

வாழியரோ

-

பல்லாண்டு பல்லாண்டு; (இவர் வாழ்ந்திடுக.)

இவர் வண்ணம் எண்ணில்

-

இவருடைய வடிவிருக்கும் படியை நினைக்கப்புக்கால்

மா கடல் போன்று உளர்

-

பெரிய கடல்போலே யிருக்கின்றாரிவர்;

கையில்

-

ஒரு திருக்கையில்

வெய்ய

-

தீக்ஷ்ணமான

ஆழி ஒன்று ஏந்தி

-

ஒரு திருவாழியை ஏந்தியும் (மற்றொரு திருக்கையிலே)

ஓர் சங்கு பற்றி

-

ஒரு சங்கத்தைத் தரித்துக் கொண்டும்.

அச்சோ ஒருவர் அழகிய ஆ-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தோழீ! இப்பெரியவர் உறையூரிலும் தென் மதுரையிலும் கோயில்கொண்டிருந்து காட்சிதந்த பெரியவர்போலே யிருக்கின்றார்; மலை போன்று வலிமை பொருந்திய நான்கு திருத்தோள்களை யுடையரா யிருக்கின்றார்; திருமேனி நிறத்தில் கருங்கடலை யொத்திருக்கின்றார்; தீருக்கைகளில் திருவாழியும் திருச்சங்குமாய்த் திகழ்கின்றார்; இப்பெரியவரை இதற்கு முன் எங்குங் கண்டதாக நினைவில்லை; இவரது சிற்சில அம்சங்களுக்கு ஏதோ சிலவற்றை உவமை கூறினேனத்தனை யொழிய அவருடைய வடிவழகு பேச்சுக்கு நிலமன்றுகாண் – எனகிறாள்.

கோழி யென்று உறையூர்க்குப் பெயர்; கூடல் என்று தென்மதுரைக்குப் பெயர். கோவலர் = கோபால; என்னும் வடசொல்லின் விகாரமாகக் கொண்டால் கோபாலக்ருஷ்ணனென்றதாகும்; அன்றி, கோ,வலர் என்று இரண்டு தமிழ்ச் சொற்களாகக் கொண்டால் கோ – அரசர்களுக்குள்ளே, வலர் – வல்லர், (வல்லவர்) ராஜாதிராஜர் என்றபடியாம்.  இவரைப் பார்த்தால் ஸாமாந்ய புருஷராகத் தோன்றவில்லை; உறையூரையும் மதுரையையும் அரசாட்சி புரிகின்ற அரசர்களோ இவர்! என்னும்படி யிருக்கின்றார் என்பதாம்.

இவர் தம்மைப் பண்டுங் கண்டறியோம் = எம்பெருமானை முதன் முதலாகக்காணும் போது திருமுகமண்டலத்தில் தண்ணளி முதலியவற்றைக் கொண்டு ‘இவரை முன் எங்கோ கண்டாற்போலிருக்கிறதே!’ என்று தோன்றும்; அதன் பிறகு எவ்வளவு நெருங்கிப் பழகினாலும் தெகுட்டுதலின்றியே “எப்பொழுதும் நாள் திங்களாண்டூழியூழிதொறும் அப்பொழுதைக் கப்பொழுதென் னாராவமுதமே” என்னும்படியான விஷயமாகையாலே முன்பு எங்குங் கண்டறியாததுபோலவும் அப்பொழுதே அபூர்வமாகக் கண்டு அநுபவிப்பது போலவுந் தோன்றிக்கொண்டேயிருக்கும்.  மற்ற விஷயங்களிற் காட்டில் பகவத்விஷயத்திற்குள்ள வைலக்ஷண்யம் இது என்க.

இந் நிலவுலகத்துக்குத் தகாத இவ்வழகுக்குக் கண்ணெச்சில் வாராமைக்காக இடையில் வாழியரோ என்கிறாள்.  ‘வாழி அரோ’ என்று பிரித்து ‘அரோ’ என்பதை அசைச்சொல்லாகக் கொள்க.  வாழிய என்னும் வியங்கோள் ஈற்றுயிர் மெய்கெட்டு வாழி என நின்றது.  இனி வாழியர் ஓ என்று பிரித்து, வாழியர் என்பதை ரகரமெய்யீற்று வியங்கோள் எனக்கொண்டு ஒகாரத்தை அசையென்றலுமாம்.

English Translation

Was he the cowherd Lord, residing in the temples of Uraiyur and Madurai?  He had four mighty mountain-like arms.  I have never seen him before, bless him!  His frame was the hue of the deep ocean.  He bore a radiant discus and a conch.  Aho, was he beautiful.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain