nalaeram_logo.jpg
(1742)

பெற்றாரும் சுற்றமு மென்றிவை பேணேன்நான்

மற்றாரும் பற்றிலே னாதலால் நின்னடைந்தேன்

உற்றானென் றுள்ளத்து வைத்தருள் செய்கண்டாய்

கற்றார்ச்சேர் கண்ண புரத்துறை யம்மானே.

பதவுரை

கற்றார் சேர்

-

பண்டிதர்கள் சேர்ந்து வாழுமிடமான

கண்ணபுரத்து, உறை அம்மானே!- ;

பெற்றாரும்

-

மாதாபிதாக்களென்ன

சுற்றமும்

-

உறவினரென்ன

என்ற இவை

-

என்று சொல்லப்படுகிற இப்படிப்பட்டவர்களை

நான் பேணேன்

-

நான் உற்றாராக விரும்ப மாட்டேன்;

மற்று ஆரும்

-

மற்று யாரிடத்திலும்

பற்று இலேன்

-

பற்று உடையேனல்லேன்;

ஆதலால்

-

ஆகையாலே

நின் அடைந்தேன்

-

உன்னைவந்து ஆச்ரயித்தேன்;

உள்ளத்து

-

திருவுள்ளத்திலே

உற்றான் என்று வைத்து

-

இவன் நம்முடையவன் என்று அபிமானித்து

அருள் செய்

-

கிருபை பண்ணவேணும்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- காமத்தாலே பெற்றுவிட்டுப் போட்டுப்போகிற தாய்தந்தையரையும், “பொருள் கையுண்டாய்ச் செல்லக்காணில் போற்றியென்றேற்றெழுவர், இருள்கொள் துன்பத்தின்மை காணில் என்னே யென்பாருமில்லை” என்கிறபடியே கையில் துட்டுகாசு நடையாடுங் காலங்களில் உறவு கொண்டாடியும் அஃதில்லாத வறுமையில் விட்டொழிந்தும் போருகிற ஆபாஸபந்துக்களையும், புகலாக நெஞ்சிலும் நினைக்கின்றிலேன்.  விவேகமில்லாமல் வேண்டியபடி வரங்களையளித்துத் தடுமாறியும், ஆபத்காலத்தில் முதுகுகாட்டிஓடியும் போருகிற தேவதாந்தரங்களிடத்திலும் ஒரு பற்றாசு உடையேனல்லேன் ஆக, பரிபூரணமான அநந்யகதித்வத்தையுடையேனான நான் “களைவாய்துன்பங் களையாதொழிவாய் களைகண் மற்றிலேன்” என்றாற்போலே உன்னைவந்து பணிந்தேன்.  ‘எங்கும் புகலற்று நம்மையே பற்றி வந்தானிவன்’ என்று திருவுள்ளம் பற்றி அடியேன்பால் அருள்புரியவேணும்.  இல்லை யாகில், பரமபதம் திருப்பாற்கடல் முதலிய இடங்களைவிட்டுத் திருக்கண்ணபுரத்தே கோயில் கொண்டெழுந்தருளி யிருப்பது பயனற்றதாகுங்காண்.  நீ வர்த்திக்கிற ஊரிலே உள்ளவர்கள் ஸாமாந்யரல்லர்; கலையறக்கற்றுணர்ந்த மாஞானிகள்; வேறு புகலற்று வந்தவனைக் கைக்கொள்வது தகுதியோ? கைவிடுவது தகுதியோ? என்று அவர்களைக் கேட்டாகிலும் நி உணரப்பெறலாம் – என்கிறார்போலும்.  ‘உற்றானென்று’ என்பதற்கு ‘படாதபாடுகளும் பட்டானென்று’ என்றும் பொருளுரைப்பர்.  அதாவது – இக்கலியன் நம்மைவிட்டுப் புறம்பேபுக்குப்  படவேண்டியதெல்லாம் பட்டுவந்தான்; எங்குமுழன்றலைந்து வருந்தி வந்து சேர்ந்த விவனை இனி நாம் பரீக்ஷிக்கத் தேவையில்லை என்று கடுகக் கிருபைசெய்தருளவேணும் என்கை.  உற்றான் – அநர்த்தப்பட்டான் என்றபடி.  இச் சொல்லுக்கு இப்பொருள்படுதலை “மற்றுமோர் தெய்வமுண்டே மதியிலா மானிடங்காள், உற்றபோ தன்றி நீங்கள் ஒருவனென்றுணரமாட்டீர்” என்ற திருமாலைப் பாசுரத்திலுங் காண்க.

English Translation

O Lord of kannapuram where learned ones reside! I have no attachments to parents and relatives. I have no friends either, I have come to you alone.  Hence treat me as belonging to you and grace me, you must!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain