nalaeram_logo.jpg
(1733)

எஞ்சா வெந்நரகத் தழுந்தி நடுங்குகின்றேற்கு,

அஞ்சேலென் றடியேனை ஆட்கொள்ள வல்லானை,

நெஞ்சே நீநினையாது இறைப்பொழுதுமிருத்திகண்டாய்,

மஞ்சார் மாளிகைசூழ் வயலாலி மைந்தனையே.

பதவுரை

எஞ்சா

-

ஒருகாலும் குறைதலில்லாத

வெம் நரகத்து

-

கொடிய நரகத்திலே

அழுந்தி

-

ஆழங்காற்பட்டு

நடுங்குகின்றேற்று அடியேனை

-

நடுங்குகின்ற என்னை

அஞ்சேல் என்று

-

‘பயப்படாதே’ என்று தேற்றி

ஆட்கொள்ள வல்லானை

-

அடிமைகொள்ள வல்லவனும்

மஞ்சு ஆர் மாளிகை சூழ்

-

மேகமண்டலத்தளவும் ஓங்கின திருமாளிகைகளால் சூழப்பட்டு

வயல்

-

வயல்களையுடைத்தான

ஆலி

-

திருவாலியில் எழுந்தருளியிருக்கிற

மைந்தனை

-

ஸ்வாமியுமான ஸ்ரீசௌரிப்பெருமானை

நெஞ்சே

-

மனமே!

நீ

-

நீ

இறைப்பொழுதும்

-

க்ஷணகாலமும்

நினையாது இருத்தி கண்டாய்

-

நினையாமலேயிருக்கிறாயே.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் “உன்னை யென்றும் மறவாமைப் பெற்றேனே” என்றருளிச் செய்தவர்தாமே இப்போது “நெஞ்சே! நீ இறைப்பொழுதும் நினையாது இருத்திகண்டாய்” என்கிறார்; கருத்தெ? ; எம்பெருமான் செய்தருளின பேருதவிக்குத் தம்முடைய மறவாமை ஈடல்ல; அந்த உபகாரத்தின் கனத்தையும் தம்முடைய நினைவையும் ஒத்திட்டுப் பார்க்குமளவில் தம்முடைய மறவாமை அஸத்கல்பமாய்த் தோன்றிற்றுப் போலும்; அதனால் அருளிச் செய்கிறபடி.

பலவகைகளாலும் கனக்கப் பாவங்களைப் பண்ணி அவற்றின் பலன்களை யநுபவிக்கக் கொடிய நரகங்களிலே சென்று நோவுபடுங்கால் ‘தான் பண்ணின பாவங்களின் பலனைத் தான் அநுபவிக்கட்டும்; நமக்கு வந்ததென்ன? என்றிராமல் அங்கே யெழுந்தருளி ‘நாம் இருக்க, நீ பாவங்களின் பலனை அநுபவிக்க ப்ராப்தியுண்டோ? அஞ்சாதே’ என்று அபயப்ரதானம் பண்ணி ரக்ஷித்தருளுமெம்பிரான் என்பன முன்னடிகள்.

நரகத்திலே அழுந்தி நடுங்கும்போது அஞ்சேலென்று ஆட்கொள்வதாகச் சொல்லுகிறவிதற்குக் கருத்து என்? எனில்; *தென்னவன்தமர் செப்பமிலாதார் சேவதக்குவார் போலப்புகுந்து பின்னும் வன்கயிற்றால் பிணித்தெற்றிப் பின்முன்னாக இழுப்பதாகிற யமதண்டனைகளை அனுபவித்துக் கொண்டிருக்கையில் எம்பெருமான் அங்கே வந்து அபயமளித்துக் காத்தருள்கின்றான் என்கிறதன்று; ‘ஐயோ! நாம் எல்லையில்லாத பாவங்களைப் பண்ணிவிட்டோமே! வெவ்விய நரகங்களிலே சென்று கொடிய துன்பங்களை யநுபவிக்க நேருமே, என்செய்வோம்?’ என்று கவலைப்பட்டு வருந்தியிருக்குமிருப்பிலே அபயப்ரதானம் பண்ணும்படியைச் சொன்னவாறு என்க.  இங்கு வெந்நரகமென்றது ஸம்ஸாரத்தை என்று கொள்ளும் பக்ஷத்தில் எளிதாகவே பொருளாகும்.  இப்பொருளே வியாக்கியானத்திற் கிணங்கியது.

English Translation

I was deep in the relentlessly painful hell.  He came and said, "Fear not!" then took me into his service.  O Heart! Never for a moment fail to remember the Lord of Vayalali, surrounded by mansions that touch the clouds.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain