(1667)

கார்மலி கண்ண புரத்தெம் அடிகளை,

பார்மலி மங்கையர் கோன்பர காலன்சொல்,

சீர்மலி பாட லிவைபத்தும் வல்லவர்,

நீர்மலி வையத்து நீடுநிற் பார்களே.

 

பதவுரை

கார் மலி

-

மேகங்கள் நிறைந்திருக்கப்பெற்ற

கண்ணபுரத்து

-

திருக்கண்ணபுரத்தி லெழுந்தருளி யிருக்கிற

எம் அடிகளை

-

எம்பெருமானைக் குறித்து

பார் மலி மங்கையர் கோன் பரகாலன்

-

இப்பூமியெங்கும் புகழ் மிக்க திருமங்கையாழ்வார்

சொல்

-

அருளிச்செய்த

சீர் மலி

-

பகவத்குணங்கள் நிறைந்த

பாடல்

-

பாசுரங்கள்

இவை பத்தும்

-

இத்திருமொழியை

வல்லவர்

-

கற்றுணரவல்லவர்கள்

நீர் மலி

-

கடல் சூழ்ந்த

வையத்து

-

இப் பூண்டலத்திலே

நீடு

-

நீண்டகாலம்

நிற்பார்கள்

-

நிலைநிற்கப் பெறுவர்.

 

English Translation

This garland of excellent Tamil songs on the Lord of rain-abundant kannpuram is by the world-famous Mangai king parakalan.  Those who master it will live long on Earth.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain