(1662)

கண்ணனூர் கண்ண புரம்தொழும் காரிகை,

பெண்மையும் தன்னுடை யுண்மை யுரைக்கின்றாள்,

வெண்ணெயுண் டாப்புண்ட வண்ணம் விளம்பினாள்,

வண்ணமும் பொன்னிற மாவ தொழியுமே.

 

பதவுரை

கண்ணன் ஊர்

-

சௌரிப் பெருமாளுடைய திவ்ய தேசமான

கண்ணபுரம்

-

திருக்கண்ணபுரத்தை

தொழும்

-

தொழுகின்ற

காரிகை

-

இவ்வழகியானவள்

தன்னுடைய

-

தன்னுடைய

உண்மை

-

(வியாமோஹத்தின்) உண்மையை

உரைக்கின்றாள்

-

வாய்விட்டுச் சொல்லுகிறாள்;

பெண்மை என்?

-

இஃது என்ன பெண்மைக்குணம்?

வெண்ணெய் உண்டு

-

(அவன் வெண்ணெயை (க்களவாடி) அமுதுசெய்து

ஆப்புண்ட

-

(தாம்பினால்) கட்டுண்ட

வண்ணம்

-

ஸமாசாரத்தை

விளம்பினால்

-

(யாரேனும் ஏசிச்) சொன்னால்

வண்ணமும்

-

(இவளுடைய) மேனி நிறமும்

பொன் நிறம் ஆவது ஒழியும்

-

பசலை நிறமாயிருக்குமிருப்பு தவிர்ந்து நல்ல நிறமாம்படி (இவள்) ஸந்தோஷப் படுகிறாள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- வண்ணமும் பொன்னிறமாவதொழியுமே = பெண்டிர்க்குப் பிரிவாற்றாமையினால் தோன்றும் பசலைநிறம் பொன்னிறமெனப்படும்; அது வ்யஸநத்திற்கு ஸூசகம்; அந்த நிறம் ஒழிந்த தென்றல் ஸந்தோஷமுண்டாயிற் றென்றபடியாம்.  அவனுடைய திருக்குணங்களைப் பிறர் ஏச்சாகச் சொன்னால் ‘கற்றினம் மேய்க்கலும் மேய்க்கப்பெற்றான் காடுவாழ் சாதியமாகப்பெற்றான், பற்றியுரலிடை ஆப்புமுண்டான் பாவிகாள் உங்களுக் கேச்சுக்கொலோ?’ என்னும் மெய்யன்புடையளாதலால் அந்த திவ்ய கீர்த்தி செவிப்பட்ட மாத்திரத்திலும் அவனோடு தனக்குக் கலவி நேர்ந்ததாகவே கொண்டு வைவர்ணியம் மாறப்பெற்றாளென்க.

 

English Translation

She salutes the Lord's abode of Kannapuram, she speaks openly about her beauty and her femininity.  Her golden colour drains from her checks and breasts when she hears of how her krishna stole butter and was punished!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain