(1660)

அருவிசோர் வேங்கடம் நீர்மலை என்றுவாய்

வெருவினாள் மெய்யம் வினவி யிருக்கின்றாள்,

பெருகுசீர்க் கண்ணபுரம் என்று பேசினாள்

உருகினாள், உள்மெலிந் தாள்இது வென்கொலோ.

 

பதவுரை

இவள்

-

இப்பரகாலநாயகியானவள்

அருவி சோர் வேங்கடம்

-

அருவிகள் சொரிகின்ற திருமலையென்றும்

நீர்மலை என்று

-

திருநீர்மலையென்றும் சொல்லி

வாய் வெருவினாள்

-

வாய் பிதற்றினாள்;

மெய்யம் வினவி

-

திருமெய்யத்தைப் பற்றிக் கேள்விகேட்டு

(அதற்கு ஒருவரும் பதில் சொல்லுவாரில்லாமை யாலே)

இருக்கின்றாள்

-

வாளாவிருக்கிறாள்;

பெருகு சீர்

-

சீர்மை மிகுந்த

கண்ணபுரம் என்று

-

திருக்கண்ணபுரம் என்று

பேசினாள்

-

வாயாற் சொன்னவளாய்க் கொண்டு (உடனே)

உருகினாள்

-

நீர்ப்பண்டமானாள்;

உள் மெலிந்தாள்

-

நெஞ்சி சிதிலகமாகப் பெற்றாள்;

இது என் கொல்

-

இப்படியுமொரு நிலைமை யுண்டாகக் கடவதோ?.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இப்பரகாலநாயகியை நோக்கி ஹிதமாக நான் ஏதேனுஞ் சொன்னால் அதை இவள் செவியேற்பதுமில்லை, அதற்கு மறுமொழி கூறுவதுமில்லை; ‘திருவேங்கடம்’ ‘திருநீர்மலை’ என்றே இவள் எப்போதும் வாய்வெருவிக் கொண்டிரா நின்றாள்; சிலஸமயங்களில், ‘திருமெய்யம்’ என்றொரு திவ்யதேச மிருக்கிறதே, அதற்கு ‘மெய்யம்’ என்று ஏன் திருநாமம் வந்தது?  அடியவர்கட்கு மெய்யே நின்று காரியம் செய்தவிடம் என்கிற காரணத்தினாலோ அத்திருப்பதிக்கு அத்திருநாமமுண்டாயிற்று?’  என்ற அருகிலுள்ளாரைக் கேட்கிறாள்; இதற்கு மறுமொழி கூறுவார் ஆருமில்லாமையாலே பெருமூச்சுவிட்டு வாளாவிருக்கின்றாள்.  சிலஸமயங்களில் ‘திருக்கண்ணபுரம்’ என்று வாய்நிறையப் பேசினவாறே அந்த க்ஷணத்திலேயே நீர்ப்பாண்டமாய் உருகுகின்றாள்; நெஞ்சு தளர்கின்றாள் இப்படி இவள் ஆவதற்கு என்பாபம் தவிர வேறு என்ன காரணமோ அறிகின்றிலேன் என்றாளாயிற்று.

 

English Translation

She blabbered incoherently about cool-streams-Venkatam and waterlogged-Nirmalai.  She inquired about Meyyam, and spoke about wealthy kannapuram.  She melts into tears and grows thinner inside day by day.  Alas, what is this leading to?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain