(1658)

தெள்ளியீர். தேவர்க்கும் தேவர் திருத்தக்கீர்

வெள்ளியீர் வெய்ய விழுநிதி வண்ணர்,ஓ

துள்ளுநீர்க் கண்ண புரம்தொழு தாளிவள் கள்வியோ,

கைவளை கொள்வது தக்கதே?

 

பதவுரை

தெள்ளியீர்

-

தெளிந்த அறிவு உடையவரே!

தேவர்க்கும் தேவர்

-

தேவாதி தேவரே!

திரு தக்கீர்

-

பெரிய பிராட்டியார்க்குத் தகுதி யானவரே!

வெள்ளியீர்

-

சுத்தமான ஸ்வபாவத்தை யுடையவரே!

வெய்ய விழு நிதி வண்ணர்

-

காய்ச்சின சிறந்த பொன் போன்ற நிறமுடையவரே!

ஓ!

-

இஃது என்ன அநியாயம்!.

இவள்

-

இப்பரகால நாயகியானவள்

துள்ளும் நீர்

-

கரைபுரண்டு பெருகுகின்ற நீரை யுடைத்தான

கண்ணபுரம்

-

திருக்கண்ணபுரத்தை

தொழுதாள்

-

கையெடுத்துக் கும்பிட்டாள்

(இவள்) இப்படிப்பட்ட இவள்

கள்வியோ

-

(ஆத்மாபஹாரம் செய்திலளாகை யாலே) கள்வியன்றே;

(அப்படியிருக்க)

கை வளை கொள்வது

-

(அடிச்சியான இவளுடைய) கைவளைகளைக் கொள்ளை கொள்வதானது

தக்கதே

-

உமக்குத் தகுந்ததோ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- என் பெண் பிள்ளை திருக்கண்ணபுரத்தைத் தொழுதாளென்பதையே வியாஜமாகக் கொண்டு இவளுடைய கைவளையைக் கொள்ளை கொள்வது தகுதியோ சொல்வீர் என்று சௌரிப்பெருமாளை மடிபிடிக்கிறாள் திருத்தாய்.  இவளுடைய கைவளைகளை அவர் கொள்வதாவது என்னவெனில், பிரிவாற்றாமையினால் இவள் உடம்பு இளைத்துக் கைவளைகள் கழன்று விழும்படியாவதாம்.  இவளை நீர் இப்படி ஈர்க்கும்போல் இளைத்துப்போம்படி செய்தீரே, இது தகுதிதானோ? நித்ய ஸம்ச்லேஷத்தைக் கொடுத்து இவளுடம்பைப் புஷ்டியாக்குவதன்றோ தகுதி என்றாளென்க.

 

English Translation

O wise one, Lord of gods, Blameless one, Fit person for Sri, Lord of golden hue!  My daughter only folded her hands in the direction of dancing-waters-kannapuram.  Was that a crime? Is it proper to confiscate her bangles?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain