nalaeram_logo.jpg
(1643)

துப்ப னைத்துரங் கம்படச் சீறிய தோன்ற லைச்சுடர் வான்கலன் பெய்ததோர்

செப்பி னை,திரு மங்கைம ணாளனைத் தேவ னைத்திக ழும்பவ ளத்தொளி

ஒப்னை,உல கேழினை யூழியை ஆழி யேந்திய கையனை அந்தணர்

கற்பினை,கழு நீர்மல ரும்வயல் கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே.

பதவுரை

துப்பனை

-

ஸத்யஸங்கல்பனும்

துரங்கம்

-

குதிரைவடிவாய் வந்த அஸுரன்

பட

-

அழியும்படி

சீறிய

-

சீற்றங்கொண்ட

தோன்றலை

-

பெருமையிற்சிறந்தவனும்

சுடர் வான் கலன்பெய்தது

-

ஒளிபொருந்திய சிறந்த ஆபரணங்களை இட்டு வைப்பதற்குரிய

ஓர் செப்பினை

-

ஒரு கரண்டகம் போன்றவனும்

திருமங்கை மணாளனை

-

திருமகள் கொழுநனும்

தேவனை

-

அத்திருமகளுடைய சேர்த்தியால் விளங்குபவனும்

திகழும் பவளத்து ஒளி ஒப்பனை

-

விளங்குகின்ற பவழங்களின் ஒளியை ஒத்திருப்பவனும்

உலகு ஏழினை

-

ஏழுலகங்கட்கும் நியாமகனும்

ஊழியை

-

காலமாய் நிற்பவனும்

ஆழி ஏந்திய கையனை

-

சக்கரமேந்திய திருக்கையை யுடையவனும்

அந்தணர் கற்பினை

-

அந்தணர்களின் கல்விக்கு விஷயமாயிருப்பவனுமான எம்பிரானை

கழுநீர் மலரும் வயல்

-

செங்கழுநீர்ப்பூக்கள் மலரப்பெற்ற வயல்களை யுடைத்தான

கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (துப்பன்.) துப்பு உடையவன் துப்பன்; துப்பாவது நினைத்தபடி செய்து தலைக்கட்டிக் கொள்ளவல்ல ஸாமர்த்தியம்; எம்பெருமானுடைய ஸத்ய ஸங்கல்பத்வத்தைச் சொன்னபடி.  துரங்கம் - வடசொல்; விசையாக நடப்பதென்று குதிரைக்குக் காரணப்பெயர்.  கம்ஸனாலேவப்பட்ட அசுரர்களில் ஒருவனான கேசி யென்பவன் குதிரை யுருவங்கொண்டு ஆயர்களுக்கெல்லாம் மிக்க பயங்கரனாய்க் கனைத்துக்கொண்டு கண்ணபிரான்மேற் பாய்ந்து வர, அப்பெருமான் தன் திருக்கையை நன்றாகப் பெருக்கி நீட்டி அதன் வாயிற் கொடுத்துத் தாக்கிப் பற்களை யுதிர்த்து உதட்டைப் பிளந்து அதனுடம்பையும் இரு பிளவாக வகிர்ந்து தள்ளின னென்ற வரலாறு காண்க.

சுடர் வான் கலன்பெய்ததோர் செப்பினை = ஒளிமிக்க சிறந்த திருவாபரணமிட் வைக்கும் செப்பு என்னலாம் எம்பெருமானை.  “செங்கமலக் கழலில் சிற்றிதழ்போல் விரலில் சேர்திகழாழிகளுங் கிண்கிணியும் அரையில், தங்கிய பொன் வடமும் தாள நன்மாதுளையின் பூவொடு பொன்மணியும் மோதிரமுங்கிறியும், மங்கல வைம்படையுந் தோள்வளையுங் குழையும் மகரமும் வாளிகளும் சுட்டியும்” என்னுந் திருவாபரணங்களை சீர்மை பெறுமிட மென்கை.  அன்றியே, ‘சுடர்வான்கலன்’ என்று பிராட்டியாகிற திருவாபரணத்தைச் சொல்லிற்றாகவுமாம்; இதற்கு விவரணம் ‘திருமங்கை மணாளனை’ என்றது.  ‘தேவனை’ என்றதற்கு – “பிராட்டியுந்தானுமான சேர்த்தியிலே உண்டான ஒற்றுமஞ்சளும் செம்பஞ்சிக் குழம்பும் மாளிகைச் சாந்தின் நாற்றமுமாய்க்கொண்டு திருமேனியில் புகர்தோன்ற நின்ற நிலை” என்ற பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்த வியாக்கியான வாக்கியம் ரஸிக்கத்தக்கது. அந்தணர் கற்பினை = ‘கற்பு’ என்று நீதிநெறிக்கும்  கல்விக்கும் பெயர்.

English Translation

The beautiful one who overpowered the clever horse kesin, the radiant sky, the gold-plated copper, the husband of Sri, the Lord of gods, the radiance of coral, the seven worlds, time, the Lord of discus, the learning of vedic seers, the lotus-growing fields, -I sought and found him in Kannamangai.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain