(1489)

முனையார் சீய மாகி அவுணன் முரண்மார்வம்,

புனைவா ளுகிரால் போழ்பட வீர்ந்த புனிதனூர்

சினையார் தேமாம் செந்தளிர் கோதிக் குயில்கூவும்,

நனையார் சோலை சூழ்ந்தழ காய நறையூரே.

 

பதவுரை

முனை

-

போர்புரிவதில்

ஆர்

-

பொருத்தமுடைய

சீயம் ஆகி

-

நரஸிம்ஹமூர்த்தியாய்த் திருவவதரித்து

அவுணன்

-

(இரணியனென்னும்) அசுரனுடைய

முரண் மார்வம்

-

முரட்டு மார்பை

புனை

-

அழகு பொருந்தி

வாள்

-

ஒளிபொருந்திய

உகிரால்

-

நகங்களினால்

போழ்பட

-

இரண்டு பிளவாகும்படி

ஈர்ந்த

-

கிழித்துப்போட்ட

புனிதன்

-

பரமபவித்திரனான பெருமானுடைய

ஊர்

-

திவ்யதேசம் (எது வென்றால்)

குயில்

-

குயில்களானவை

சினை ஆர் தேமா

-

தழைப்புவாய்ந்த தேன் மா மரங்களுடைய

செம் தளிர்

-

சிவந்த தளிர்களை

கோதி

-

கொந்தி

கூவும்

-

கூவப்பெற்றனவும்

நனை ஆர் சோலை சூழ்ந்து

-

பூ மொட்டுகள் நிறைந்திருக்கப்பெற்றனவுமான சோலைகளால் சூழப்பட்டு

அழகு ஆய

-

ஆழகுடைத்தான

நறையூர்

-

திருநறையூராம்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நல்ல குரல்படைத்த ரஸிகர்கள் ஸ்ரீபாகவதம் ஸ்ரீகிஷ்ணுபுராணம் முதலியவற்றில் அவாஹித்து அநுபவித்து அவ்வர்த்தங்களை உபந்யஸிக்கின்றனர் திருநறையூரில் – என்பது பின்னடிகளின் உள்ளுறை.

 

English Translation

The Lord came as a man-lion, and fore into the chest of the asura with nails claws.  He resides inNaraiyur where cuckoos in groves peck into the red growing tips of Mango trees.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain