(1493)

பகுவாய் வன்பேய் கொங்கை சுவைத்தா ருயிருண்டு,

புகுவாய் நின்ற போதகம் வீழப் பொருதானூர்,

நெகுவாய் நெய்தல் பூமது மாந்திக் கமலத்தின்

நகுவாய் மலர்மே லன்ன முறங்கும் நறையூரே.

 

பதவுரை

பகு வாய்

-

பெரிய வாயை யுடையவளும்

வன

-

மனக்கொடுமையை யுடையவளுமான

பேய்

-

பேய்ச்சியாகிய பூதனையினுடைய

கொங்கை

-

ஸ்தனத்தை

சுவைத்து

-

உறிஞ்சி

ஆர் உயிர் உண்டு

-

(அவளது) அருமையான உயிரை முடித்தவனும்,

புகு வாய்

-

(கம்ஸ னரண்மையினுள்ளே) நுழைய வேண்டிய வாசலில்

நின்ற

-

(மதமூட்டி) நிறுத்தப்பட்டிருந்த

போதகம்

-

(குவலயாபீடமென்னும்) யானை

வீழ

-

சாகும்படியாக

பொருதான்

-

போர்புரிந்தவனுமான பெருமானுடைய

ஊர்

-

திவ்யதேசம் (எதுவென்றால்)

அன்னம்

-

ஹம்ஸங்களானவை

நெகு வாய் நெய்தல் பூ

-

அலர்ந்த வாயையுடைய (விகஸித்த) கரு நெய்தற் பூக்களிலே

மது

-

தேனை

மாந்தி

-

பருகி

கமலத்தின் நகு வாய் மலர்மேல்

-

விரிந்த வாயையுடைய தாமரைப்பூக்களிலே

உறங்கும்

-

கண்வளரப்பெற்ற

நறையூர்

-

திருநறையூர்

 

English Translation

The Lord drank the breast of the wide-gaping ogrees Putana, them smote an elephant and killed it.  He resides in Naraiyur where swans drink nectar from wide-gaping blue lotus blossoms, then fall asleep before red lotuses.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain