(1495)

வெள்ளைப் புரவைத் தேர்விச யற்காய் விறல்வியூகம்

விள்ள, சிந்துக் கோன்விழ வூர்ந்த விமலனூர்,

கொள்ளைக் கொழுமீ னுண்குரு கோடிப் பெடையோடும்,

நள்ளக் கமலத் தேற லுகுக்கும் நறையூரே.

 

பதவுரை

வெள்ளைப்புரவி தேர் விசயற்கு ஆய்

-

வெள்ளைக்குதிரைகள் பூட்டின தேரையுடையனான

விசயற்கு ஆய்

-

அர்ஜுநனுக்காக

விறல் வியூகம் விள்ள

-

(எதிரிகளினுடைய) மிடுக்கையுடைத்தான ஸேனாஸமூஹம் தொலையும்படியாகவும்

சிந்து கோன் விழ

-

ஸிந்து தேசத்தலைவனான ஜயத்ரதன் முடியும்படியாகவும்

ஊர்ந்த

-

(தேரை) நடத்தின

விமலன்

-

பரிசுத்தனான பெருமானுடைய

ஊர்

-

திவ்யதேசம் (எதுவென்றால்)

கொள்ளை கொழுமீன் உண் குருகு ஓடி

-

மிகுதியாகக் கொழுத்த மீன்களைப் பிடித்துண்கிற கொக்குகள் ஓடிச்சென்று

பெடையோடும்

-

தம் பேடைகளோடகூட

நள்ளக் கமலம் தேறல் உருக்கும்

-

செறிந்த இதழ்களைடைய தாமரைப்பூவில் தேனைப் பருகப்பெற்ற

நறையூர்

-

திருநறையூர்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அர்ஜுநனுக்குத் தேர்ப்பாகனாயிருந்து வெற்றிபெறுவித்தவனும் ஸைந்தவனை முடியச்செய்தவனுமான பெருமான் வாழுமிடம் திருநறையூர்.

அர்ஜுநனுடைய தேர்க்குதிரகைள் வெண்ணிறங்கொண்டவை யென்பது “வெள்ளைப்புரவிக்குரக்கு வெல்கொடித்தேர்மிசை முன்புநின்று, கள்ளப் படைத்துளையாகிப் பாரதங் கைசெய்யக் கண்டாருளர்” என்ற பெரியாழ்வாரருளிச்செயலாலும் விளங்கும்.  ‘விஜயன்’ என்பது அர்ஜுநனுடைய நாமங்களுள் ஒன்று.  வியூகம் – என்னும் வடசொல் விகாரம்.

 

English Translation

The Lord then drove the chariot for Arjuna, with white hoses that pounded the ocean-king Jayadratha, and his strong army.  He resides inNaraiyur where white storks eat big fish from waters, then go with their mates to drink nectar from lotuses.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain