(1497)

தாமத் துளப நீண்முடி மாயன் தான்நின்ற

நாமத் திரள்மா மாளிகை சூழ்ந்த நறையூர்மேல்,

காமக் கதிர்வேல் வல்லான் கலிய னொலிமாலை,

சேமத் துணையாம் செப்பு மவர்க்குத் திருமாலே.

 

பதவுரை

துளபம் தாமம் நீள் முடி

-

திருத்துழாயினாலாகிய மாலையை நீண்ட திருமுடியிலே யுடையனான

மாயன் தான் நின்ற

-

ஸர்வேச்வரன் நித்யவாஸம் பண்ணப்பெற்றதும்,

நாமம்

-

புகழ்பெற்றவைகளாய்

திரள் மா மாளிகை

-

நெருங்கியிருக்கின்ற பெரிய திருமாளிகைகளினால்

சூழ்ந்த

-

சூழப்பட்டதுமான

நறையூர்மேல்

-

திருநறையூர் விஷயமாக,-

காமம் கதிர்வேல் வல்லான் கலியன்

-

மிகக் வொளிபொருந்திய வேற்படையைப் பிடிக்க வல்லவரான திருமங்கையாழ்வார்

ஒலி மாலை

-

அருளிச்செய்த இச்சொல் மாலையை

செப்புமவர்க்கு

-

ஓதவல்லவர்களுக்கு

திருமால்

-

திருமகள் கொழுநனான ஸர்வேச்வரன்

சேமம் துணை ஆம்

-

எப்போதும் ரக்ஷகனான ஸஹாயபூதனாக ஆவன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நாமம் – ப்ரஸித்திப் பொருளதான வடசொல் அவ்யயம்.  காமக்கதிர் ‘காமம்’ என்பது மிகுதிப்பொருளதான வடமொழி அவ்யயம்.  விரும்பத்தகுந்த ஒளியையுடைய வேல் என்னவுமாம்.  சேமம் – க்ஷேமம்.

“மாயன் தாள் நின்ற நாமத்திரள் மாமாளிகை” என்று பாடங்கொண்டு எம்பெருமானுடைய ஸ்ரீபாதசின்னம் பொலிகின்ற திருமண்காப்பு விளங்குகின்ற திருமாளிகையென்பாருமுளர்.  திருமாளிகைக் கதவுகளிலே இவ்விலச்சினைகாண்க.

 

English Translation

This song garland by sparking spear wielder Kaliyan is for the Tulasi-wreathed fall-crown Lord who resides in Naraiyur surrounded by famous fall mansions.  Those who master it will secure the abiding grace of Tirumal.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain