nalaeram_logo.jpg

(1588)

(1588)

தந்தை காலில் பெருவி லங்கு தாளவிழ, நள்ளிருட்கண் வந்த

எந்தை பெருமானார் மருவி நின்ற வூர்போலும்,

முந்தி வானம் மழைபொழியும் மூவா வுருவில் மறையாளர்

அந்தி மூன்று மனலோம்பும் அணியார் வீதி அழுந்தூரே.

பதவுரை

வானம்

-

மேகமானது

முந்தி

-

(யாகஞ் செய்வதற்கு) முன்னமே

மழை பொழிய

-

மழை பெய்யப்பெற்றதும்,

மூவா உருவின்

-

கிழத்தனமற்ற உருவத்தை யுடையரான

மறையாளர்

-

பிராமணர்கள்

அந்திமூன்றும்

-

முச்சந்தியும்

அனல் ஓம்பும்

-

அக்நிஹோத்ரம் செய்யப்பெற்றதுமான

அணி ஆர் வீதி

-

அழகுமிக்க திருவீதிகளை யுடைய

அழுந்தூர்

-

திருவழுந்தூரென்னுந் திருப்பதியானது,-

தந்தை

-

தகப்பனாராகிய வஸுதேவருடைய

காலில்

-

காலிலே (பூட்டப்பட்டிருந்த)

பெரு விலங்கு தாள் அவிழ

-

பெரிய விலங்குப்பூட்டு இற்றுவிழும்படியாக

நள் இருள் கண்

-

நடுநிசியிலே

வந்த

-

திருவவதரித்த

எந்தை பெருமானார்

-

எம்பெருமான்

மருவி நின்ற

-

நித்யவாஸஞ் செய்யப்பெற்ற

ஊர்போலும்

-

திவ்யதேசமாகும்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இத்திருமொழியும் மேல்மூன்று திருமொழிகளுமாக நாற்பது பாசுரங்கள் திருவழுந்தூர்ப்பதி விஷயமாக அருளிச் செய்யப்படுமவை.  தனது தவத்தின் வலிமையால் இரதத்துடன் வானத்திற் செல்லுந்தன்மையனான உபரிசரவஸுவென்னும் அரசன் தேவர்கட்கும் முனிவர்கட்கும் நேர்ந்தவிவாதத்தில் பக்ஷபாதமாய்த் தீர்ப்புச் சொன்னது காரணமாக முனிவர்களாற் சபிக்கப்பட்டுப் பூமியில் விழுகையில் அவனது தேர் அழுந்தப்பெற்ற இடமாதல்பற்றி இத்தலத்திற்கு அழுந்தூர் என்றுபெயர்வந்தது என்பர்.  ‘தேரழுந்தூர்’ எனவும் வழங்கப்பெறும்.

இத்தலத்திலெழுந்தருளியிருக்கு மெம்பெருமானுடைய திருநாமம் ‘ஆமருவியப்பன்’ என்பதாதலால் “தந்தைகாலில் பெருவிலங்கு தாளவிழ நள்ளிருட்கண்வந்த வெந்தை பெருமானார் மருவிநின்றவூர்” என்று தொடங்குகின்றார்.

(முந்தினவான மித்யாதி.) இவ்வூரில் நித்யாக்நிஹோத்ரி களான பிராமணர்கள் மலிந்திருப்பார்களென்கிறது. அந்தணர்கள் யஜ்ஞயாகங்கள் செய்தால் நன்றாக மழைபொழிந்து தேசங்கள் ஸுபிக்ஷமாயிருக்குமென்று சொல்லுவர்கள்; திருவழுந்தூரின் நிலைமை எப்படிப்பட்ட தென்னில்; அந்தணர்கள் யாகஞ்செய்யத்தொடங்கு முன்னமே வானம் மழைபொழியப்பெறுகின்றதாம்.  இங்ஙனம் பேசுதல் சபலாதிசயோகத்தியென்றாவது அத்யந்தாதிச யோக்தி யென்றாவது அலங்கார சாஸ்த்ரிகளால் கூறப்படும்.  காரணமுண்டாவதற்கு முன்னமே காரியமுண்டாய்விடுவதாகச் சொல்லுவதன் கருத்து – காரணமுண்டானவுடனே ஒரு நொடிப்பொழுதும் தாமதியாமல் காரியமுண்டாய்விடுகிறது என்பதேயாம்.  இதனால், அவ்விடத்து அந்தணர்கள் செய்யும் யக்ஞங்கள் தவறாது பயனளிப்பவை யென்றதாம்.

மூன்றாமடியின் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தில் “வானமானது முந்தி மழையைப் பொழியுமாய்த்து” என்றிருக்கும் ஸ்ரீஸூக்தியைக் கண்டவாகள் “முந்திவானம் மழைபொழியும்” என்று மூலபாடத்தைக் கற்பித்தனர்; இது அந்வயிக்க அரிதாதலால் “முந்திவானம் மழைபொழிய” என்ற ப்ராசீநபாடமே கொள்ளத்தக்கது.  இதில் வியாக்கியானம் தாத்பர்யரீதியிற் செல்லுதலால்.

மூவாவுருவின் = அங்குள்ள ப்ராஹ்மணர்கள் வைதிககருமங்களை நேர்பட அநுஷ்டிக்கவல்ல சக்திவாய்ந்த யௌவனசாலிகள் என்கை.  அந்திமூன்றும் = ப்ராதஸ்ஸவநம், மாத்யந்திநஸவநம், ஸாயம்ஸவநம் என்ற முப்போதும்.

English Translation

The Lord in the yore took birth in the dead of the night, releasing his father from shackles. He resides in Alundar laid out with beautiful streets where youthful Vedic seers perform fire sacrifices thrice a  day ensuring rain.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain