(1580)

(1580)

மீதோடி வாளெயிறு மின்னிலக முன்விலகு முருவி னாளை

காதோடு கொடிமூக்கன் றுடனறுத்த கைத்தலத்தா என்று நின்று,

தாதோடு வண்டலம்பும் தண்சேறை எம்பெருமான் தாளை யேத்தி,

போதோடு புனல்தூவும் புண்ணியரே விண்ணவரில் பொலிகின் றாரே.


பதவுரை

வாள் எயிறு

-

ஒளி பொருந்திய கோரப்பல்லானது

மீது ஓடி

-

மேல் முகமாக வளர்ந்து

மின் இலக

-

மின்னல்போல் விளங்க

முன் விலகும் உருவினாளை

-

முன்னே வந்து நின்ற உருவத்தை யுடையளான சூர்ப்பணகை யினுடைய

காதோடு

-

காதையும்

கொடி மூக்கு

-

கொடி மூக்கையும்

அன்று

-

அப்போது

உடன்

-

உடனே

அறுத்த

-

அறுத்துவிட்ட

கைத்தலத்தா

-

திருக்கையை யுடையவனே!

என்று நின்று

-

என்று நிலைநின்று,-

வண்டு

-

வண்டுகளானவை

தாதோடு

-

பூந்தாதுகளிலே

அலம்பும்

-

ஆரவாரம் செய்யப்பெற்ற

தண் சேறை

-

குளிர்ந்த திருச்சேறையிலுள்ள

எம்பெருமான்

-

ஸாரநாதப்பெருமாளுடைய

தாளை

-

திருவடிகளை

ஏத்தி

-

துதித்து

போதோடு

-

புஷ்பங்களையும்

புனல்

-

தீர்த்தத்தையும்

தூவும்

-

ஸமர்ப்பிக்கிற

புண்ணியர்

-

பாக்கியசாலிகள்

விண்ணவரில்

-

நித்யஸூரிகளிற் காட்டிலும்

பொலிகின்றார்

-

மேம்பாடுடையார்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எவ்வகையான இடையூறுக்கும் நிலமன்றியே நலமந்த மில்லதோர் நாடாகிய பரமபதத்திலே  யிருந்துகொண்டு பகவதாராதநம் செய்வதில் அருமையொன்றுமில்லை; இருள் தருமா ஞாலமாகிய இந்நிலத்திலிருந்துகொண்டு பகவதாராதநம் செய்வதே அரிதாதலால் அங்ஙனஞ் செய்பவர்கள் நித்தியஸூரிகளிற் காட்டிலும் மேம்பட்டவர்களேயாகக் குறையில்லை யென்க.  பாற்கடல் பாம்பணைமேல் பள்ளி கொண்டருளும் சீதனையே தொழுவார் விண்ணுளாரிலுஞ் சீரியரே” என்ற திருவிருத்தமும் நோக்கத்தக்கது.

 

English Translation

The Lord who cut the nose and ears of the fierce Rakshsai Surpanakha who appeared before him resides amid bee-humming fragrant groves in Tirucherai.  Those who worship him with flowers, pure water and chants are wortheir  than the celestials, see!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain