(1584)

(1584)

பைவிரியும் வரியரவில் படுகடலுள் துயிலமர்ந்த பண்பா. என்றும்,

மைவிரியும் மணி வரைபோல் மாயவனே என்றென்றும், வண்டார் நீலம்

செய்விரியும் தண்சேறை யெம்பெருமான் திருவடியை சிந்தித் தேற்கு,என்

ஐயறிவும் கொண்டானுக் காளானார்க் காளாமென் அன்பு தானே!

 

பதவுரை

படுகடலில்

-

ஆழ்ந்த திருப்பாற்கடலில்

பை விரியும் வரி அரவில்

-

விரிந்த படங்களையும் புள்ளிகளையுமுடைய திருவனந்தாழ்வான் மீது

துயில் அமர்ந்த

-

பள்ளிகொண்ட

பண்பா என்றும்

-

குணசாலியே! என்றும்,

மை விரியும் மணி வரை போல்

-

கருநிறம்மிக்க நீலமணி மயமான மலைபோன்ற (திருமேனியையுடைய)

மாயவனே என்று என்றும்

-

ஆச்சரியனே! என்று பலகால் சொல்லி,

வண்டு ஆர் நீலம்

-

வண்டுகள் படிந்த கரு நெய்தல்களானவை

செய்

-

கழனிகளிலே

விரியும்

-

மலரப்பெற்ற

தண் சேறை

-

குளிர்ந்த திருச்சேறையிலுள்ள

எம்பெருமான்

-

எம்பெருமானுடைய

திரு அடியை

-

திருவடிகளை

சிந்தித்தேற்கு என்

-

தியானம் பண்ணாநின்ற என்னுடைய

ஐ அறிவும் கொண்டானுக்கு

-

ஐம்புலன்களினறிவையும் தன் விஷயத்திலாக்கிக் கொண்ட அப் பெருமானுக்கு

ஆள் ஆனார்க்கு

-

ஆட்பட்ட பாகவதர்களுக்கு

என் அன்பு தான்

-

என்னுடைய ப்ரீதியானது

ஆள் ஆம்

-

உரியதாகும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தாம் எம்பெருமானை விட்டு பாகவதர்களையே பற்றுவதாக அநுஸந்திக்குமித்திரு மொழியில் ‘தண்சேறை யெம்பெருமான் திருவடியைச் சிந்தித்தேற்கு’ என்று சொல்லிக் கொள்ளுதல் தகுமோவென்று சிலர் சங்கிப்பர்கள்; எம்பெருமானுடைய அடியார்களென்னுங் காரணத்தினால் பாகவதர்கள் உத்தேச்யர்களாக ஆகிறாப்போலே ‘பாகவதர்கள் ப்றறுந் தெய்வம்’ என்னுங்காரணத்தினால் எம்பெருமானும் உத்தேச்யனாதல் கூடுமென்க.  “திரிதந்தாகிலுந் தேவபிரானுடைக்கரிய கோலத் திருவுருக்காண்பன் நான், பெரியவண் குருகூர் நகர் நம்பிக்கு ஆளுரியனாய் அடியேன் பெற்ற நன்மையே” என்ற கண்ணிநுண் சிறுத்தாம்பும் அறிக.

“சிந்தித் தேற்கு என்” என்ற விடத்து, வடமொழியில் ஆர்ஷ ப்ரயோகங்களிற்போல உபபத்தி கூறவேண்டும் ‘சிந்தித்தேற்கு’ என்பது ‘சிந்தித்த எனக்கு’ என்று பொருள்பட நின்றாலும், இங்கு அங்ஙனம் பொருள்படாது ‘சிந்தித்த’ என்று விசேஷண மாத்ரமாக நிற்கும்; திருமாலையில் “மழைக்கன்று வரை முனேந்தும்” என்ற பாசுரத்தில் “உழைக்கின்றேற்கு என்னை” என்ற பிரயோகமும் பிறவும் காணத்தக்கன.

 

English Translation

O Lord reclining in the deep ocean on a called serpent bed! O Dark hued gem!  O wonder-Lord! Amid bee-humming lakes with blue waterlilies, the Lord resides in Tiruccherai.  Those who contemplate him and serve him, are my masters, for whom my heart overflows with love.

 

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain