(1585)

(1585)

உண்ணாது வெங்கூற்றம் ஓவாத பாவங்கள் சேரா, மேலை

விண்ணோரும் மண்ணோரும் வந்திறைஞ்சும் மென்தளிர்போ லடியி னானை,

பண்ணார வண்டியம்பும் பைம்பொழில்சூழ் தண்சேறை யம்மான் றன்னை,

கண்ணாரக் கண்டுருகிக் கையாரத் தொழுவாரைக் கருதுங் காலே!

 

பதவுரை

மேலை விண்ணோரும்

-

மேலுலகத்தவர்களான நித்ய ஸூரிகளும்

மண்ணோரும்

-

இம் மண்ணுலகத்திலுள்ளாரும்

வந்து இறைஞ்சும்

-

கிட்டி வணங்கும்படியான

மென் தளிர் போல் அடியினானை

-

மெல்லிய தளிர்போன்ற (ஸூகுமாரமான) திருவடிகளை யுடையவனும்

பண் ஆர வண்டு இயம்பும் பை பொழில் சூழ் தண் சேறை அம்மான் தன்னை

-

பண்கள் நிரம்ப வண்டுகள் பாடப்பெற்ற சோலைகளாற் சூழப்பட்ட குளிர்ந்த திருச்சேறையில் எழுந்தருளியிருப்பவனுமான ஸாரநாதப் பெருமானை

கண் ஆர கண்டு

-

கண்கள் நிறையும்படி ஸேவித்து

உருகி

-

மனம் நெகிழ்ந்து

கை ஆர

-

கைகளின் ஆசை தீரும்படி

தொழுவாரை

-

தொழாநின்ற பாகவதர்களை

கருதுங்கால்

-

சிந்தைசெய்த மாத்திரத்தில்,

வெம்

-

கொடிதான

கூற்றம்

-

யமதேவதையானது

உண்ணாது -

-

நெருங்கமாட்டாது;

ஓவாத பாவங்கள்

-

இடைவிடாத பாவங்களானவை

சேரா

-

கிட்டமாட்டா.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- உண்ணாது வெங்கூற்றம் = ஸ்ரீ வைஷ்ணவர்களைச் சிந்திக்கின்றவர்களை யமன் உண்ண மாட்டான் என்றால் ‘அவர்களுக்கு ஒருநாளும் சாவு இல்லை’ என்று பொருளா? என்று சிலர் சங்கிப்பார்கள்; அது பொருளன்று; யமதண்டனைக்கு அவர்கள் ஆளாகமாட்டார்கள் என்று பொருள் காண்க, அன்றியே, பாகவத பக்தர்கள் மரணத்தைப் பற்றின வருத்தத்தினால் கரையமாட்டார்கள் என்பதாகவும் கருத்துக்கொள்ள இடமுண்டு.  ப்ராயொ ஹ்ருக்ருதக்ருத்யத்வாத் ம்ருத்யோருத்விஜதே ஜந :– க்ருதக்ருத்யா : ப்ரதிக்ஷந்தே ம்ருத்யும ப்ரியமிவாதிதிம்.” என்கிற ச்லோகம் இங்கு உணரத்தக்கது.

 

English Translation

The Lord of petal-soft lotus feet is worshipped by gods above and men on Earth,  He resides amid bees-humming Panns in nectared groves of Tiruccherai. Devotees see him with misty eyes and melting heart, and offer worship with folded hands,  For the mere thought of such devotees the terrible agents of death will never come close, nor past karma cling on.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain