(1587)

பூமாண்சேர் கருங்குழலார் போல்நடந்து வயல்நின்ற பெடையோடு, அன்னம்

தேமாவின் இன்னிழலில் கண்டுயிலும் தண்சேறை யம்மான் றன்னை,

வாமான்தேர்ப் பரகாலன் கலிகன்றி ஒலிமாலை கொண்டு தொண்டீர்,

தூமாண்சேர் பொன்னடிமேல் சூட்டுமின் நும் துணைக்கையால் தொழுது நின்றே.

 

பதவுரை

அன்னம்

-

அன்னப்பறவைகள்

வயல் நின்ற பெடையோடு

-

கழனிகளில் திரிகிற பேடைகளோடு கூட,

பூ மாண் சேர் கரு குழலார் போல் நடந்து

-

பூக்களணிந்து அழகு பெற்ற கறுத்த கூந்தலை யுடைய இளம் பெண்களைப்போல நடந்து (பின்பு)

தே மாவின்

-

தேன் மாமரத்தினுடைய

இன் நிழலில்

-

இனிமையான நிழலில்

கண் துயிலும்

-

கண்ணுறங்கப்பெற்ற

தண் சேறை

-

திருச்சேறையி லெழுந்தருளி யிருக்கிற

அம்மான் தன்னை

-

எம்பெருமான் விஷயமாக,-

வாம்மான் தேர்

-

ஓடிவருகின்ற குதிரைகள் பூண்ட தேரையுடையரான

பரகாலன் கலிகன்றி

-

திருமங்கையாழ்வார்

ஒலி

-

அருளிச் செய்த

மாலை கொண்டு

-

இச் சொல்மாலைகளைக் கொண்டு

தொண்டீர்

-

ஓ பக்தர்களே!,

தூ

-

பரிசுத்தமாய்

மாண் சேர்

-

மாட்சிமை தங்கியதாய்

பொன்

-

விரும்பத்தக்கதான

அடிமேல்

-

(அப்பெருமானது) திருவடிகளின் மேல்

நும் துணை கையால்

-

உங்களுடைய அஞ்ஜலிபந்தமான கைகளினால்

தொழுது நின்று

-

ஸேவித்திருந்து

சூட்டுமின்

-

சூட்டுங்கோள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ் ஒன்பது பாசுரங்களிலம் பாகவத நிஷ்டையைப் பேசியிருந்தும், பயனுரைக்குமிப் பாசுரத்தில் “தண்சேறையம்மான் தன்னை” என்று எம்பெருமான் விஷயமாக இத்திருமொழி அருளிச்செய்யப்பட்ட தென்று தலைக்கட்டுகிறார் – பாகவதர்களுக்கு உத்தேச்யன் என்கிற முறைமையால் எம்பெருமானும் தமக்கு உத்தேச்யன் என்கிற திருவள்ளத்தைக் காட்டுதற்கு.

இத்திருமொழியைத் திருச்சேறைப் பெருமானுடைய திருவடிகளிலே உங்களுடைய கைகளால் கொண்டு சூட்டுங்கள் என்று தொண்டர்களை நோக்கிச் சொல்லுகிறார் – இத்திருமொழிகற்கைக்கு வேறொருபயன் வேண்டா; எம்பெமானுடைய திருவடிகட்கத் தாமரைப்பூப்போல அலங்காரமாயிருக்கத்தக்க இத்திருமொழி ஸ்வயம் போக்யம் என்று காட்டினபடி.  திருச்சேறைப் பெருமானை ஸேவிக்கப்போமவர்கள் *செண்பகமல்லிகையோடு செங்கழுநீரிருவாட்சி யென்னப்டுகிற புஷ்பங்களை ஸமர்ப்பிக்கத் தேடவேண்டா; இத்திருமொழியை அநுஸந்தித்துக் கொண்டு செல்லுமளவிலே பூவிட்டதற்கும் மேலான எம்பெருமானுடைய திருவுள்ளம் உவக்கும் என்பதை உய்த்துணர்க.

மூன்றாமடியில், வாம் – வாவும் என்றபடி; வாவுதல் - தாவுதல்; திருமங்கையாழ்வாருடைய குதிரைக்கு இட்ட விசேஷணம் : செய்யுமெனெச்ச வீற்றுயிர் மெய்சேறலும்” என்ற நன்னூற் சூத்திரத்தால் எச்சத்து உயிர்மெய்கெட்டது.

மான் – குதிரைக்கும் பெயர்.

 

English Translation

This is a garland of songs by war Lord Parkalan, Kalikanri, on the Lord of Tiruccherai, amid groves where swans pairs imitate the gait of coiffured dames, then give up and rest under Mango trees in company.  Devotees, offer this as worship to the Lord's golden feet with folded hands.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain