nalaeram_logo.jpg

(1564)

(1564)

மன்னஞ்ச ஆயிரந்தோள் மழுவில்து ணித்தமைந்தா,

என்நெஞ்சத் துள்ளிருந்திங் கினிப்போய்ப் பிறரொருவர்,

வன்னெஞ்சம் புக்கிருக்க வொட்டேன் வளைத்துவைத்தேன்,

நன்னெஞ்ச அன்னம்மன்னும் நறையூர்நின்ற நம்பீயோ.

பதவுரை

நல் நெஞ்சம்

(அடியார் திறத்தில்) நல்ல ஹ்ருதயத்தை யுடையளான

அன்னம்

அன்ன மென்னடையாளான பிராட்டி

மன்னும்

பொருந்தி வாழ்கிற

நறையூர், நின்ற நம்பீயோ!- ;

மன் அஞ்ச

க்ஷத்திரியர்களெல்லாரும் அஞ்சும்படியாக

ஆயிரம் தோள்

(கார்த்த வீரியார்ஜுநனுடைய) ஆயிரந் தோள்களையும்

மழுவின்

கோடாவிப்படையினால்

துணித்த

அறுத்தொழித்த

மைந்தா

மிடுக்கனே?

என் நெஞ்சத்துள்

எனது நெஞ்சினுள்ளே

இருந்து

இருந்து வைத்து

இனி

இனிமேல்

இங்கு போய்

இங்கு நின்றும் வேறோரிடம்போய்

பிறர் ஒருவர்

வேறொருவருடைய

வல் நெஞ்சம்

கடினமான நெஞ்சிலே

புக்கு இருக்க

புகுந்திருக்க

ஒட்டேன்

ஸம்மதிக்கமாட்டேன்;

வளைத்துவைக்கேன்

தடைசெய்கின்றேன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “என்னெஞ்சினுள்ளே வந்தாயைப்போக வொட்டேன்” என்று நிர்ப்பந்தித்த ஆழ்வாரை மீறிக்கொண்டு புறப்பட்டுப் போகநினைத்த எம்பெருமான் அதற்குறுப்பான தன்மிடுக்கைக் காட்டினான்; ‘அந்தமிடுக்கில் ஒருகுறையுமில்லை, நானறிவேன் பிரானே!’ என்று தாமறிந்த மிடுக்கொன்றை விரித்துரைக்கின்றார் முதலடியில், ராஜலோகமெல்லாம் அஞ்சும்படி அவர்கட்கு வேர்ப்பற்றான ஸஹஸ்ரபாஹ்வர்ஜுநனுடைய தோள்களாயிரத்தையும் மழுவினால் துணித்த மிடுக்கனே!, நீ செய்ய நினைக்குங் காரியத்திற்கு ஒரு இடையூறு நேருமென்று நினைப்பவனல்லேனடியேன்; உன்னுடைய மிடுக்குக்கு இசையாதவனுமல்லேன்; அந்த மிடுக்கை விதேயனான அடியேனிடத்திலே உபயோகிக்க வேண்டாவென்பதே வேண்டுகோள் என்பது உள்ளுறை.

பிறரொருவர் வன்னெஞ்சம் புக்கிருக்கவொட்டேன் = தம்முடைய நெஞ்சு தவிர மற்றை யோருடைய நெஞ்சு எல்லாம் வல்நெஞ்சு என்றும் தம்முடைய நெஞ்சு ஒன்றே மெல்நெஞ்சு என்றும் நினைத்திருக்கிற ராழ்வார்.  உண்மையில், பகவத் விஷயத்தில் இத்தனை உருக்கம் மற்றையோர்க்கு இல்லையிறே.  வளைத்து வைத்தேன் = ஏழைகளா யிருப்பவர் செல்வர் மாளிகை வாசலைப் பற்றிக்கொண்டு ‘யாம் வேண்டுகின்றவற்றை நீ தந்தாலன்றி உன்னைவிட மாட்டோம்’ என்ற உறுதியுடன் அவர்களை வளைமத்துக்கொண்டிருப்பது போலவும், பரதாழ்வான் சித்திரக்கூடத்தேறப் போந்து இராமபிரானை வளைத்துக் கொண்டாற் போலவும்.

நன்னெஞ்ச வன்னமன்னும் நறையூர் = ‘நன்னெஞ்சம் என்ற விசேஷணத்தின் ஸ்வாரஸ்யத்தை நோக்கி ‘அன்னம்’ என்பதற்கு அன்னநடைய அணங்காகிய பெரிய பிராட்டியார் என்று பொருளுரைக்கப்பட்டது.  “நீர் குற்றங் கண்டு கைவிடப் பார்க்குமன்றும் ‘????????????????? – கச்சிந்நாபராத்யதி’ என்னுமவளன்றோ அருகே யிருக்கிறாள்” என்பது பெரிய வாச்சான் பிள்ளை வியாக்கியான வருளிச்செயல்.  பெரிய திருமடலில் “இரும்பொழில்சூழ் மன்னுமறையோர் திருநறையூர் மாமலைபோல், பொன்னியலுமாடக்கவாடம் கடந்துபுக்கு, என்னுடைய கண்களிப்ப நோக்கினேன்” என்றபின் நாச்சியாரைப் பற்றிப் பேசுங்கால், “மன்னுமரதகக் குன்றின் மருங்கே ஓர், இன்னிள வஞ்சிக் கொடியொன்று நின்றதுதான், அன்னமாய்......அன்ன திருவுருவம் நின்றது” என்று பிராட்டியை அன்னமாக அருளிச்செய்தது காண்க.

English Translation

O Lord with an axe that destroyed thousand mighty kings in your!  Leaving my heart if you go to stay in another person's heart, I shall not be party to it, stay put in my heart, Obey! Swan-gait Lady's too with you, Naraiyur Lord-in-residence, O!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain