nalaeram_logo.jpg
(1558)

புள்ளாய் ஏனமுமாய்ப்புகுந்து, என்னை யுள்ளங்கொண்ட

கள்வா என்றலும் என் கண்கள்நீர் சோர்தருமால்,

உள்ளே நின்றுருகி நெஞ்சமுன்னை யுள்ளியக்கால்,

நள்ளே னுன்னையல்லால் நறையூர்நின்ற நம்பீயோ.

பதவுரை

ஓ நறையூர் நின்ற நம்பீ!

புள் ஆய் ஏனமும் ஆய் புகுந்து

‘ஹம்ஸரூபியாயும் வராஹ ரூபியாயும் என்னுள்ளே பிரவேசித்து

என்னை உள்ளம் கொண்ட கள்வா என்றலும்

என உள்ளத்தைக் கவர்ந்து கொண்ட கள்வனே!’ என்று சொன்னவுடனே

என் கண்கள்

எனது கண்களில் நின்றும்

நீர்கள் சோர்தரும்

கண்ணீர் பெருகுகின்றது :

ஆல்

அந்தோ!;

நெஞ்சம்

என்மனமானது

உன்னை

எம்பெருமானான உன்னை

உள்ளியக்கால்

அநுஸந்திக்கப் புகுந்தால்

உள்ளே நின்று உருகி

உள்ளே பிடித்து நீராக உருகிப்போவதனால்

உன்னை அல்லால்

(இப்படிப்பட்ட அன்புக்கு இலக்கான உன்னைத் தவிர்த்து (வேறொருவரையும்)

நள்ளேன்

நேசிக்கமாட்டேன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமான் ‘பிறப்பிலி’ என்று பேர் பெற்றிருக்கச் செய்தேயும் என்றும்  ???????? ????? ??????????  என்றும்  “உயிரளிப்பான் எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தா யிமையோர் தலைவா!” என்றுமு் சொல்லுகிறபடியே பலவகைப்பட்ட யோநிகளிலும் பிறந்தருளுகிறான்; நாம் கருமத்தாலே பிறக்கிறோம், அவன் கருணையாலே பிறக்கிறான் என்னுமிவ்வளவே வாசி.  அப்படி பிறந்தருளிநின்றாலும், சிறந்தவையென்று கொண்டாடப்படுகிற தேவமநுஷ்ய யோநிகளிலே பிறக்குமளவோடு நிற்கலாகாதா?  மிக்க இழிவான பசு பக்ஷி யோநிகளிலும் வந்து பிறக்க வேணுமா? இப்படியும் ஒரு நீர்மையுண்டோ?  என்று சிந்தித்து நெஞ்சு உருகவும் கண்கள் பனிமல்கவும் பெற்றேன்; ஆச்ரிதர்க்குக் காரியஞ்செய்யவேணுமென்று திருவுள்ளத்தில் தோன்றிவிட்டால் ஜந்ம நிகர்ஷங்களையும் கணிசியாதே எந்தப் பிறவியில் வேணுமானாலும் மனமுவந்து பிறந்தருள்கின்ற உன்னையல்லாது வேறொருவரை நேசிக்க மாட்டேன்; இப்படிப்பட்ட திருக்குணங்களைத் திருநறையூரி லெழுந்தருளியிருக்கு மிருப்பிலே விளங்கக் காட்டிக்கொண்டு என்னை அடிமை கொள்ளப் பெறுவதே! என்று உள்குழைந்து பேசுகிறாராயிற்று.

‘புள்ளாயேனமுமாய்ப் புகுந்து’ என்றது – ஹம்ஸரூபியாயும் வராஹரூபியாயும் திருவவதரித்த நீர்மையை என்னெஞ்சிலே தோற்றுவித்து என்றவாறு.  நான்முகனிடமிருந்து  வேதங்களைக் கொள்ளைக்கொண்டு கடலில் மூழ்கி மறைந்து உலகமெங்கும் பேரிருளை மூட்டி நலிந்த மதுகைடபர்களைக், கடலினுள் புக்குக்கொன்று வேதங்களைமீட்டுக் கொணர்ந்து, பாலையும் நீரையும் பிரிக்கவல்ல ஹம்ஸ ரூபியாய் அவ்வேதங்களைப் பிரமனுக்கு உபதேசித்த வரலாறும், முன்னொருகால் பூமியைப்பாயாகச் சுருட்டியெடுத்துக்கொண்டு கடலில் மூழ்கிப்போன ஹிரண்காக்ஷனைத் தேவர் முனிவர் முதலியோரது வேண்டுகோளால் திருமால் மஹாவராஹமாகத் திருவவதரித்துக் கொன்று பூமியைக் கோட்டாற் குத்தியெடுத்துக்கொண்டுவந்து பழைய படி விரித்தருளின வரலாறும் இங்கு அறியத்தக்கன.

என்னையுள்ளங் கொண்ட கள்வா! = இரண்டவதார சேஷ்டிதங்களையும் எனக்குத் தெரிவித்து அம்முகத்தாலே எனது நெஞ்சை எனக்குந் தெரியாமலே அபஹரித்துக்கொண்டவனே! என்று நான் வாய்விட்டுச் சொன்னவாறே ஆநந்த பாஷ்பம் அருவிசோரத் தொடங்கிற்றென்கிறார்.  ஆல் – ஆநந்த மிகுதியைக் காட்டுவதோரிடைச்சொல்.

நள்ளேன் – எதிர்மறைத் தன்மை வினைமுற்று.

English Translation

You came as a boar and bird and took my lowly heart as yours.  Even as I say, "You stealer!" my eyes rain with tears, alas! When I think you my heart is filled with passion, O alas! No more can I wish again Naraiyur Lord-in-residence, O!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain