(1557)

வண்டார் பொழில்சூழ் நறையூர்நம் பிக்கு,

என்றும் தொண்டாய்க் கலிய நொலிசெய் தமிழ்மாலை,

தொண்டீர் இவைபாடு மின்பாடி நின்றாட,

உண்டே விசும்பு உந்தமக்கில் லைதுயரே.

 

பதவுரை

தொண்டீர்

பக்தர்களே!

வண்டு ஆர் பொழில் சூழ் நறையூர் நம்பிக்கு

வண்டுகள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட திருநறையூரி லெழுந்தருளி யிருக்கும் பெருமானுக்கு

என்றும்

எக்காலத்தும்

தொண்டு ஆய்

அடிமைபூண்டு

கலியன்

திருமங்கையாழ்வார்

ஒலி செய்

அருளிச் செய்த

தமிழ் மாலை இவை

இத்தமிழ்ப் பாசுரங்களை

பாடுமின்

பாடுங்கோள்

பாடி நின்று ஆட

(அப்படி) பாடியாடப்பெறில்

உந்தமக்கு

உங்களுக்கு

துயர் இல்லை

ஸம்ஸாரத் துன்பங்கள் இல்லையாய்விடும்;

விசும்பு உண்டு பரமபதம் கிடைக்கும்.


ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அடிவரவு – நறவா வற்றா தாரேன் புள் வில் பனி கதி அத்தா தூயாய் வண்டார் புள்ளாய். ஒளிவிடுகின்ற பூர்ண சந்திரன் போலே ஸகலப்ராணிகளுக்கும் தாய்போன்று அருள்புரிகின்ற குளிர்ந்த செந்தாமரைப் பூப்போன்ற திருக்கண்களை யுடையவனே!கோபாலனே! அலைகடல் சூழ்ந்த ஸப்த லோகங்களையும்முன்னொருகால் அமுது செய்த திருப்பவளத்தை யுடையவனே!இப்படிப்பட்ட வுன்னை நான் எப்படிமறப்பேன்!


English Translation

Devotees!  These are songs of pure Tamil for the Lord of Naraiyur surrounded by bee-humming groves sung by Kaliyan. Those who can master it, sing and dance to it, will enter Vaikunta without despair.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain