(1555)

அத்தா அரியே என்றுன் னையழைக்க,

பித்தா வென்று பேசுகின்றார் பிறரென்னை,

முத்தே மணிமா ணிக்கமே முளைக்கின்ற

வித்தே உன்னைஎங் ஙனம்னான் விடுகேனே.

 

பதவுரை

அத்தா

ஸ்வாமியே!

அரியே

(விரோதிவர்க்கங்களை ஹரிக்குமவனே!

என்று

என்று இப்படிப்பட்ட திருநாமங்களைச் சொல்லி

உன்னை அழைக்க

நான் உன்னை அழைக்குமளவில்

பிறர்

அயலார்

என்னை

இப்படி அழைக்கிற என்னைநோக்கி

பித்தா என்று பேசுகின்றார்

‘அடா பித்தனே!’ என்று சொல்லுகிறார்கள்;

முத்தே

முத்துப்போன்றவனே!

மணி மாணிக்கமே

சிறந்த மாணிக்கம் போன்றவனே!

முளைக்கின்ற வித்தே

முளைக்கின்ற விதைபோலே பயனளிப்பவனே!

உன்னை

இப்படிப்பட்டவுன்னை

நான்

அடியேன்

எங்ஙனம் விடுகேன்

எவ்விதமாக விட்டொழிவேன்?


ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அடியேன் பிராகிருத ஜனங்களைப்போலே ‘உண்டியே உடையே’ என்று கூப்பிடுமவனல்லேன்; எப்போதும் பகவத் விஷயத்தி லீடுபட்டு ‘அத்தா! அரியே’ என்றிப்படி பகவந் நாமங்களைச் சொல்லிக் கூப்பிடுவதே எனக்குப் போது போக்காயிருக்கின்றது. திகம்பரஜநே க்ராமே ஹாஸ்ய : கெளபீந வாந் நர:”  (கோமணங்கட்டாத வூரில் கோமணங்கட்டுமவன் பைத்தியக்காரன்) என்னும் பழமொழிப்படியே *உண்டியே உடையே உகந்தோடு மிம்மண்டலத்தவர்கட்கு நான் பைத்தியக்காரனாகத் தோற்றுகின்றேன்; உன்னைநான் அத்தா! என்றழைத்தவாறே என்னை அவர்கள் பித்தா! என்றழைக்கின்றனர்; இப்படிப்பட்ட பிராகிருத ஜனங்களின் பரிஹாஸத்திற்கு அஞ்சி உன்னை விட்டு விடலாமென்று பார்த்தாலோ, மாட்டுகின்றிலேனே என் செய்வேனென்கிறார்.  “பேயரே யெனக்கியாவரும் யானமோர் பேயனே.............அரங்கா வென்றழைக்கின்றேன், பேயனா யொழிந்தே னெம்பிரானுக்கே” என்ற பெருமாள் திருமொழி இங்கே நினைக்கத்தகும்.

அத்தா – அத்தன் என்பதன் விளி; ஸ்வாமிந்! என்றபடி. அரி – ஹரி.  முளைக்கின்ற வித்தே! ஜகத்காரண பூதனே! என்றவாறு.


English Translation

When I call you, "Lord and Master!", othes call me "Mad, Mad!" O Pearls! O Emerald gem! O Growing seed!  How can I every let you go?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain