(1554)

கதியே லில்லைநின் னருளல் லதெனக்கு,

நிதியே திருநீர் மலைநித் திலத்தொத்தே,

பதியே பரவித் தொழும்தொண் டர்தமக்குக்

கதியே உனைக்கண்டு கொண்டுய்ந் தொழிந்தேனே.

 

பதவுரை

நிதியே

நிதிபோன்றவனே!

திருநீர்மலை

திருநீர்மலையி லெழுந்தருளியிருக்கிற

நித்திலம் தொத்தே

முத்துமாலைபோன்றவனே!

எனக்கு

அடியேனுக்கு

நின் அருள் அல்லது

உன்னுடைய கிருபையைத் தவிர்த்து

கதி இல்லை

வேறொருபுகல் இல்லை;

பதியே பரவி தொழும் தொண்டர் தமக்கு கதியே

திவ்யதேசங்களையே ஏத்தித்தொழுகின்ற பாகவதர்களுக்குக் கதியானவனே!

உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேன்,-


ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- உன்னுடைய திருவருளைத் தவிர்த்து வேறொன்றும் எனக்குப் புகலாவதில்லை; எனக்கு வைத்தமாநிதியும் நீயே; திருநீர்மலை முதலான திருப்பதிகளில் ஸேவை ஸாதிப்பவனும் நீயே; *விண்ணகரம் வெஃகா விரிதிரை நீர்வேங்கடம் மண்ணகரம் மாமாடவேளுக்கை, மண்ணகத்த தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி, கண்டியூரரங்கம் மெய்யம் கச்சிபேர் மல்லை, சீரார் திருவேங்கடமே திருக்கோவலூரே மதிட்கச்சியூரகமே பேரகமேயென்றிப்படி திவ்ய தேசங்களே யாத்திரையாகப்போவது போக்கித் திரியும் என்னோடொத்த பத்தர்கட்குக் கதியாயிருக்கும் பெருமானே! உன்னைக் கண்டுகொண்டு உஜ்ஜீவிக்கப் பெற்றேனென்கிறார்.

கதி – என்னும் வடசொல் விகாரம்.  நிதி – என்னும் வடசொல் விகாரம் திருநறையூர் நம்பிபக்கல் ஈடுபட்டுப் பேசுகிறவர் திருக்கோட்டியூர் திருமூழிக்களம் திருநீர்மலை முதலிய திருப்பதிகளைப் பேசுவதனால் – அந்தந்தத் திருப்பதிகளி லிருப்பை எம்பெருமான் இவர்க்குக் காட்டித் தந்தருளி ஆச்வஸிப்பிக்கிறானென்பது தோன்றும்.

நித்திலம் – வடமொழியில், ‘நிஸ்தலம்’  என்கிற சொல் முத்து என்னும் பொருளதாகக் கவிகளால் பிரயோகிக்கப் படுகின்றது; அதிவித்ருமமஸ்த நிஸ்தலாளீருசம்” என்று வரதராஜ ஸ்தவத்திலே கூரத்தாழ்வானும் பிரயோகித்தருளினர்.  அந்த நிஸ்தல மென்னும் வடசொல்லே தமிழ்ச்சொல் என்பர் சிலர்.  “திருநீர் மலையிலே வந்து, முத்து மாலையை உடம்பிலே அள்ளி எறட்டுக் கொள்ளுமாபோலே குளிர உடம்பிலே எறட்டு அணைத்துக் கொள்ளலாம்படி யிருக்கிறவனே!” என்பது பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸூக்தி.

மூன்றாமடியில். ‘பதியே!’ என்று தனியே ஒரு விளியாகவும் கொண்டு உரைப்பர்; ஆச்ரிதர்க்கு வாஸஸ்தாநமாயுள்ளவனே! என்கை.


English Translation

O My Wealth!  Other than you, I have no refuge.  O Peral necklace of Tirunirmalai, O Resident! O Life-breath of worshipful devotees!  In seeing you my spirit has found its freedom.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain