nalaeram_logo.jpg
(1419)

வாத மாமகன் மர்க்கடம் விலங்கு மற்றோர் சாதியென் றொழிந்திலை, உகந்து

காதல் ஆதரம் கடலினும் பெருகச் செய்த தகவினுக் கில்லைகைம் மாறென்று

கோதில் வாய்மையி னாயொடு முடனே உண்பன் நான் என்ற ஓண்பொருள் எனக்கும்

ஆதல் வேண்டுமென் றடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே.

பதவுரை

அணி பொழில் திரு அரங்கத்து அம்மானே!-;

வாதம் மா மகன்

-

வாயுதேவனது பெரிய குமாரனான அனுமான்

மற்று ஓர் சாதி விலங்கு மற்கடம் என்று ஒழிந்திலை

-

வேறு ஜாதியிற் பிறந்தவனென்றும், அதிலும் பகுத்தறிவில்லாத மிருகமென்றும், அதிலும் பலவகைப் பொல்லாங்குகளையுடைய குரங்கென்றும் (அவனது இழி குணங்களைப் பாராட்டி) விட்டிடாதவனாய்

உகந்து

-

அவனிடம் அன்புவைத்து

காதல் ஆதரம் கடலினும் பெருக

-

அன்பும் ஆசையும் கடலைக் காட்டிலும், அதிகமாக வளர

செய்

-

(நமக்கு இவன்) செய்த

தகவினக்கு

-

உபகாரங்களுக்கு

கைம்மாறு இல்லை

-

பிரதியுபகாரம் இல்லை’

என்று

-

என்று திருவுள்ளம் பற்றி

கோது இல் வாய் மையினாயொடும் உடனே உண்பன் நான்

-

குற்றமற்ற மெய்ம்மொழிகளை யுடையனான உன்னோடு உடனிருந்து உண்பேன்யான்’

என்ற

-

என்று (அவ்வனுமானைக் குறித்துக்) கூறியருளின

ஒண் பொருள்

-

சிறந்த விஷயம்

எனக்கும் ஆதல் வேண்டும் என்று

-

எளியனான அடியேன் விஷயத்திலும் உண்டாகவேண்டும் என்றெண்ணி

அடி இணை அடைந்தேன்--.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- சக்ரவர்த்தி திருமகன் சிறிய திருவடியை ஆதரித்த வரலாற்றை முன்னிட்டுக் கொண்டு சரணம் புகுகிறாரிதில்.  கீழ்ப்பாட்டில் - மநுஷ்யஜாதியிலே குலத்தாலும் குணத்தாலும் குறையநின்ற குஹனிடத்துப் பெருமாள் பேரன்பு காட்டினதைக் கூறிய ஆழ்வார், அப்படி ஸமாந ஜாதியுமன்றி விஷம ஜாதியாயுள்ள விலங்கையுமுட்பட அதன் இழிவு பாராதே ஆட்கொண்டு அதன் பக்கல் விசேஷ கடாக்ஷஞ்செய்த பொருளை இப்பாட்டில் எடுத்துக்கூறி ஈடுபடுகிறார்.  நீ அனுமனிடத்து வரம்புகடந்து அருள்செய்ததுபோல அடியேனிடத்தும் என் இழிவு பாராதே பேரருள் புரியவேண்டுமென்று பிரார்த்திக்கின்றனர்.

ராவண ஸம்ஹாரமானபின்பு விபீஷணன் முதலிய அரக்கர்களோடும் ஹனுமான் ஸுக்ரிவன் முதலிய வானரர்களோடும் ஸீதா லக்ஷ்மணர்களுடனும் புஷ்பக விமானத்திலேறி ஸ்ரீ ராமபிரான் ஆகாயமார்க்கமாக அயோத்தி நோக்கி மீண்டெழுந்து அருளும்போது கங்காநதியும் யமுநாநதியும் சேருமிடமான பிரயாகையில் வஸிக்கின்ற பரத்வாஜமுனிவரது விருப்பத்தின் படி அவராச்சரமத்திலிறங்கி ஸேனைகளுடன் அங்கு விருந்துண்ணச் சம்மதித்து நின்றவளவிலே பரத்வாஜமுனிவர் தமது தவப்பெருமையால், அத்திரளிலுள்ள ரெல்லார்க்கும் வேண்டியவளவு உண்கலங்களையும் உணவுகளையும் தெய்விகமாக வருவித்து வெகு ஸம்ப்ரமமாக விருந்துசெய்தனர்: அங்ஙனம் இராமனும் அவனைச் சார்ந்தவரனைவரும் தம் தமக்கென்று பரிமாறிய வாழையிலையில் உண்ணுகின்ற பொழுது, ஏற்கனவே தவணை கடந்துவிடுகின்றதென்று பரதன் வருந்தித் தீக்குதித்து உயிர் துறந்து விடுவானோ வென்பதைச் சிந்தித்து, தாம் மீண்டுவந்த செய்தியைப் பரதனிடஞ்சொல்லி அவன் கருத்தை உணர்ந்துகொண்டு விரைந்துவருமாறு அனுப்பப்பட்டுப் பரதனிடஞ் சென்றிருந்த அனுமான் செய்தி கூறி மீண்டனனாக, அச்சமயத்தில் அனுமானுக்காக முனிவன் தனியே ஓரிலையை மறுபடியும் வருவிக்க வேண்டாதபடி ஸ்ரீராமன் அனுமானைத் தனது எதிரில் இருந்து தனது இலையிலேயே ஒருபகுதியில் உண்ணும்படி நியமித்து அங்ஙனமே அவனுடன் சிலபழங்களை ஸஹபோஜனஞ் செய்தனன் என்ற வரலாறு இங்கு அறியத் தக்கது.

முன்பெல்லாம் வாiரியிலையில் தாமரையிலையிற் போலவே இடை நரம்பு இல்லாமிலருந்த தென்றும், இப்பொழுது இராமன் அனுமனைத் தமது எதிரில் உட்காரவைத்துத் தனது இலையின் ஒரு பாதியிலேயே அவன் உண்ணுமாறு அவ்விலை நடுவில் தனது கையால் ஒருவரையறை கீறினனாக, அது முதற் சங்கற்பத்தால் அவ்விலையில் இடைநரம்பு ஏற்பட்டதென்றும் கூறுவதுண்டு.  பரதனிடஞ்சென்ற அனுமான் மீண்டு பரத்வாஜாச்ரமத்திற்கு வந்ததாக ஆதிகாவ்யமாகிய ஸ்ரீவால்மீகி ராமாயணத்தில் இல்லையேயாகிலும் புராணாந்தரங்களிலுண்டு. இங்ஙனம் மாறுபடுகின்ற இடங்களில் “இதிஹாஸாந்தர புராணாந்தரங்களிலேயாதல் கல்பாந்தரத்திலேயாதல் உண்டென்றுகொள்ளவேணும்;  மயர்வற மதிநலமருளப்பெற்ற ஆழ்வார் இப்படி அருளிச்செய்கையாலே” என்று பெரியோர் ஸமாதானங் கூறுதல் உணரத்தக்கது.  மற்றோர் இதிஹாஸமாகிய மஹாபாரதத்திலும் பாத்மம் வைஷ்ணவம் கூர்மம் முதலிய புராணங்களிலும் அத்யாத்மராமாயணம் முதலிய நூல்களிலும் ஸ்ரீ ராமசரித்ரம் சிற்சிலவிடத்துவேறுபடக் கூறியிருத்தல் காணலாம்.  பரத்வாஜாத்ரமத்திலிருந்து இராமனாற் பரதனிடம் அனுப்பட்ட அனுமான் அங்குச் செய்தி சொல்லிவிட்டு மீண்டு பரத்வாஜாச்ரமத்திற்கு வந்த பின்பு இராமன் அம்முனிவனளித்த விருந்தை ஏற்றனனென்று பாத்மபுராணம் கூறுகின்றது.  ஒட்டக்கூத்த ருத்தரகாண்டத்து அசுவமேதயாகப் படலத்தில் இராமாயண வரலாற்றைச் சுருக்கிக் கூறுமிடத்து “வரதனு மனுமன்தன்னை வரன்முறையேவலோடும், பரதனையெரிபுகாமற் பண்ணினான் மீண்ட பின்னர், எரி மணி விமானத்தேறி யாவருமிளையகோவும், அரிமலர்க் குழலினாளு மிராமனுமயோத்தி சேர்ந்தார்” என்றதுங்காண்க.

இராமபிரான் அனுமானுடன் ஸஹபோஜனஞ் செய்த வாஸிஷ்ட ராமாயணத்திலுள்ள தென்பர்; (அந்நூல் ஜ்ஞாநவாஸிஷ்டத்தினும் வேறானது; ச்லோகந்தோறும் காயத்ரியின் அக்ஷரங்களை முறையே முதலெழுத்தாகக் கொண்டு தொடங்குவது.)

ஆசார்யஹ்ருதயத்தில் “ம்லேச்சனும் பக்தனானால்” இத்யாதியான பெரிய ஸூத்ரத்தில் “தூது மொழிந்து நடந்து வந்தவர்களுடைய ஸம்யக் ஸகுண ஸஹபோஜநமும்” என்ற விடத்து வியாக்கியானத்தில் - உபகாராய ஸுக்ரிவோ ராஜ்யகாங்க்ஷீ விபீஷண:, நிஷ்காரணாய ஹநுமாந் தத்துல்யம் ஸஹபோஜநம’ என்று திருவுள்ளம்பற்றிக் கோதில் வாய்மையினாயொடு முடனே யுண்பனானென்ற பெருமாளோடு பண்ணின ஸஹபோஜநமும்” என்று மணவாள மாமுனிகளருளிச் செய்த ஸ்ரீஸூக்தியில் உதாஹாரிக்கப்பட்டுள்ள வசநம் வாஸிஷ்டராமாயணத்திலோ பாத்மோத்தரத்திலோ உள்ள தென்று பெரியோர் கூறுவர்.  அந்த வசனத்தின் கருத்தாவது - ஸுக்ரிவன் விபீஷணன் முதலானவர்கள் ஒவ்வொரு பிரதிப்ரயோஜநத்தை விரும்பிச் செய்தார்கள்; அங்ஙனன்றியே அனுமான் ஒருவனே அநந்யப்ரயோஜநனாக உதவினனாதலால் அவனோடு உடனுண்பதே நமக்கு ஏற்றது என்பதாம்.  ஆசார்ய ஹ்ருதயத்தி லருளிச்செய்யும் ரிதியைநோக்குமிடத்து ஸ்ரீராமன் அனுமனோடு ஸஹபோஜநம் செய்தருளினதாகவே நன்கு விளங்கும்.

இப்பாசரத்தின் வியாக்கியானத்தில் பெரியவாச்சான் பிள்ளை, “கோதில் வாய்மையினாயொடு முடனே யுண்பன்நான் என்ற ஒண்பொருள்” என்பதற்கு – ஒருகலத்திலுண்பார் போல உன்னுடனே ஒருநிகராகச் சுகதுக்கங்களை யநுபவிக்கக்கடவேன் யானென்று ஒற்றுமை நயந்தோன்றக்கூறி அவ்வனுமனைத் தழுவிக்கொண்ட சிறந்தவிஷயமென்று வியாக்கியானஞ் செய்தருளினர்.  இந்த யோஜநை வால்மீகி ராமாயணத்திற்கு இணங்கியதாகும்.

ஒண்பொருள் எனக்குமாதல் வேண்டுமென்று அடியிணையடைந்தேன் திருவடி பெற்ற பெரிய பேற்றை எளியனானயானும் பெற விரும்புவது வெறும் ஆசையின் காரியமேயாயினும் சரணாகதியினால்; ஸாத்யமாகாதது எதுவுமில்லை யென்று தாம் கருதியமை தோன்றும்.

English Translation

"Son of wind, just a monkey and animal", not addressing the different Hanuman, you Gave your love that was more than the ocean, saying that nothing could repay him for service. May your pure lotus-feet be my refuge, may I too stand by and always enjoy you.  Ocean-hued Lord, I've come to your lotus feet, O Lord surroudned by groves in Arangam!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஏழாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

எட்டாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஒன்பதாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பத்தாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain