nalaeram_logo.jpg
(1420)

கடிகொள் பூம்பொழில் காமரு பொய்கை வைகு தாமரை வாங்கிய வேழம்,

முடியும் வண்ணமோர் முழுவலி முதலை பற்ற மற்றது நின்சரண் நினைப்ப

கொடிய வாய்விலங் கின்னுயிர்மலங்கக் கொண்டசீற்றமொன் றுண்டுள தறிந்து,உன்

அடிய னேனும்வந் தடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே,

பதவுரை

அணி பொழில் திரு அரங்கத்து அம்மானே;-

கடி கொள் பூ பொழில் காமரு பொய்கை வைகுதாமரை வாங்கிய வேழம்

-

நறுமணங்கொண்ட மலர்கள் நிறைந்த சோலைகளாற் சூழப்பட்ட அழகிய பொய்கையிலே பொருந்திய தாமரைமலரை (அர்ச்சனைக்காகப்) பறித்த யானை யானது

முடியும் வண்ணம்

-

மிகுந்த ஆபத்தையடையும்படி

ஓர் முழு வலி முதலை பற்ற

-

மிக்க வலிமையையுடைய தொரு முதலையானது பிடித்துக்கொள்ள

அது நின் சரண் நினைப்ப

-

அதனால் வருந்திய அந்த யானையானது (தன்வலிமையால் விடுவித்துக்கொள்ள முடியாமல்) உனது திருவடிகளைத் தியானிக்க,)

(அப்பொழுது நீ)

கோடிய வாய் விலங்கின் உயிர் மலங்க

-

கொடுந்தன்மையுள்ள வாயையுடைய முதலையின் பிராணன் சிதையும் படி

கொண்ட

-

வருவித்துக்கொண்ட

சீற்றம் ஒன்று

-

ஒரு கோபம்

உண்டு உளது

-

உண்டாயுள்ளதை

அறிந்து

-

தெரிந்து கொண்டு (உன் அடியனேனும் வந்து அடி இணை அடந்தேன்.)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கொண்டசீற்றம்’ என்றதனால் எம்பெருமானுக்குக் கோபம் இயற்கைக் குணமல்லாமல் செயற்கையாகக் காரியகாலங்களில் வேண்டுமென்று வருவித்து ஏறிட்டுக் கொண்ட தென்பது தோன்றும்.  கடல்கடக்க உபாயஞ் சொல்லவேணுமென்று சரணாகதிபண்ணின விடத்தும் விமுகனாயிருந்த கடலரசன் விஷயத்தில் பெருமான் கோபங்கொண்டதைச் சொல்லுமிடத்து “க்ரோகமாஹாரயத்தீவ்ரம்” (கடுங்கோபத்தை வரவழைத்துக்கொண்டார்) என்று வால்மீகி பணித்தது இங்கு ஸ்மரிக்கத்தகும்.

தனது அடியாரின் எதிரிகள் விஷயமாகப் பெருமான் கொள்ளுங் கோபத்தையே ஆழ்வார் தாம் வாழ்வதற்குச் சாதனமாக ஆபத்தனம் போலக் கருதியமைதோன்ற “கொண்ட சீற்ற மொன்றுண்டுளதறிந்து” என்றார்.  கஜேந்திராழ்வானைக் காத்தருளும் பொருட்டு மடுவின்கரைதேடி ஓடிவந்தது போல வரவேண்டாமல், நானிருக்கிற இந்த நிலவுலகத்திலே கோயில் கொண்டுள்ளாயென்பார் அணி பொழில் திருவரங்கத்தம்மானே!’ என விளித்தார்.

கொடியவாய்விலங்கு = யானையின் காலையே யன்றி அதற்கு இறைவனான எம்பெருமானது மனத்தையும் புண்படுத்திய கொடியவாயையுடையதொரு திர்யக் ஜாதி என்றபடி.

பாட்டடியில், கடி – உரிச்சொல்.  காமரு = ‘காமம்தரு’ என்பது ‘காமரு’ என மருவிற்று.  காமம் - விருப்பம்; விருப்பத்தைத் தருகின்ற என்றது – எல்லாராலும் விரும்பப்படுந் தன்மைவாய்ந்த என்றவாறு. எனவே, அழகிய என்ற தாயிற்று.  ‘காமமருவு’ என்பது ‘காமரு’ என விகாரப்பட்ட தென்பாருமுளர்.  இலக்கணையால், எல்லாராலும் விரும்பப்படுந் தன்மையாகிய அழகு பொருந்திய என்கை.  பொய்கை – மானிடராக்காத நீர்நிலை.  “நெடும் புனலுள் வெல்லும் முதலை” என்றபடி தனது இடமாகிய நீரில் முதலைக்கு உள்ள பூர்ணபலம் விளங்க ‘முழுவலி முதலை’ எனப்பட்டது.  ஆனதுபற்றியே, அது மிக்க வலிமையுள்ள பெரிய யானையையும் தப்பவொண்ணாதபடி வாயினாற் பற்றியிழுக்கலாயிற்று.  சரண் - சரணமென்ற வடசொல்லின் விகாரம்.  “முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா” என்றபடி வாயினாற் பிடித்தபிடி விடாத கொடிய இயல்பினதாதலால் ‘கொடியவாய் விலங்கு’ எனப்பட்டது.

“விலங்கின்னுயிர் மலங்க” என்று விரித்தல் விகாரமான பாடம் ஓசை நயத்திற்குச் சேரும்.

English Translation

"Son of wind, just a monkey and animal", not addressing the different Hanuman, you Gave your love that was more than the ocean, saying that nothing could repay him for service. May your pure lotus-feet be my refuge, may I too stand by and always enjoy you.  Ocean-hued Lord, I've come to your lotus feet, O Lord surrounded by groves in Arangam!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain