nalaeram_logo.jpg
(1421)

நஞ்சு சோர்வதோர் வெஞ்சின அரவம் வெருவி வந்துநின் சரணெனச் சரணா

நெஞ்சிற் கொண்டுநின் னஞ்சிறைப் பறவைக்  கடைக்க லம்கொடுத் தருள்செய்த தறிந்து

வெஞ்சொ லாளர்கள் நமன்றமர் கடியர் கொடிய செய்வன வுளஅதற் கடியேன்

அஞ்சி வந்துநின் னடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே,

பதவுரை

அணி பொழில் திரு அரங்கத்து அம்மானே-;

நஞ்சு சோர்வது

-

விஷத்தை உமிழ்வதும்

வெம் சினம்

-

கொடிய கோபத்தையுடையதுமான

ஓர் அரவம்

-

(சுமுகனென்னும்) ஒரு பாம்பானது

வெருவி

-

(தன்னைக்கொல்ல விருக்கின்ற கருடனுக்கு) அஞ்சி

வந்து

-

உன்னிடத்தில் வந்து

நின் சரண் என

-

‘உனக்கு அடைக்கலப் பொருளாகின்றேன் யான்’ என்று சொல்லி உன்னைச் சரணமடைய,

சரண் ஆய்

-

நீ அதற்கு ரக்ஷகனாகி

நெஞ்சில் கொண்டு

-

(அவனுக்கு நெர்ந்த துன்ப நிலையையும் அவன் சொல்லையும்) உன் திருவுள்ளத்திற்கொண்டு

நின் அம் சிறை பறவைக்கு அடைக்கலம் கொடுத்து அருள் செய்தது

-

உனது அடியவனான அழகிய இறகுகளையுடைய கருடனிடத்தில் (அப்பாம்பை) அடைக்கலப் பொருளாக நீ ஒப்பித்துப் பாதுகாத்தருளிய திறத்தை

அடியேன் அறிந்து

-

அடியேன் தெரிந்து கொண்டு,

வெம் சொலாளர்கள்

-

கொடிய சொற்களைச் சொல்பவர்களான

நமன் தமர்

-

யமதூதர்கள்

கடியர்

-

பயங்கரமான தோற்றமுடையவர்களாய்

செய்வன

-

(மரணகாலத்திலும் மறுமையிலும்) செய்பவையான

கொடிய

-

கொடுந்தொழில்கள்

உள்

-

பலவுளவன்றோ;

அதற்கு அஞ்சி வந்து நின் அடி இணை அடைந்தேன்--.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஸுமுகனென்னும் நாககுமாரனை எம்பெருமான் பாதுகாத்தருளியதை முன்னிட்டுக்கொண்டு சரணம் புகுகிறாரிதில்.  ஸுமுகனக்குக் கருடனால் வந்த அச்சத்தைத் தவிர்த்தருளியதுபோல, அடியேனுக்கு யமபாதை நிமித்தமாக நேர்ந்த அச்சத்தைத் தவிர்த்தருள வேணுமென்கிறார்.  சரணமடைபவர் தம்தமது தாழ்வுகளை முன்னிட்டுக்கொண்டு சரணம் புகுதல் இயல்பு; அவ்வாறே தமது தீவினைப் பயனாய்வரும் யமதண்டனையைச் சொல்லிக்கொண்டு அடைக்கலமடைகின்றனர்.

தேவேந்திரனுக்கு நண்பனும் மந்திரியும் ஸாரதியுமான மாதலியானவன் அழகிலும் குணத்திலும் மிகச்சிறந்த தன் புத்திரியான குணகேசியென்னுங் கன்னிகைக்குத் தக்கவரனைத் தேடுபவனாய்ப் புறப்பட்டு வழியில் நாரதமுனிவரைச் சந்தித்துத் துணையாகக்கொண்டு பலவுலகங்களிற் சென்றுபார்த்துத் தக்க வரனைக் காணாமல் பாதாளலோகத்தில் வாஸுகியினாலாளப்படுகின்ற போகவதி யென்னுஞ் சிறந்த நகரத்தையடைந்து அங்கேயிருக்கின்ற அனேக நாககுமாரர்களைப் பார்க்கின்ற பொழுது ஸுமுகனென்னும் நாககுமாரனை நோக்கி அவனது ரூபலாவண்யங்களி லீடுபட்டு அவனுக்குத் தன்மகளைக் கொடுக்கக்கருதி அவனது பாட்டனாரைக்கண்டு பேச, அவர் மகிழ்ச்சியோடு துயரமுங் கொண்டவராய் ‘இவனது தந்தையைக் கருடன் பக்ஷரித்து இந்த ஸுமுகனையும் ஒருமாதத்திற்குள் பக்ஷரிப்பேனென்று சொல்லியிருக்கின்றானாதலால் இவனுக்கு மணஞ்செய்தல் ஏற்றதன்று’ என்று தெரிவித்தார்.  அது கேட்டமாதலி ‘என்னால் மருமகனாக வரிக்கப்பட்ட உனது பௌத்திரன் எங்களுடன் வந்து தேவேந்திரனைக் காண்பனாயின் இவனுக்கு ஆயுளைத் தந்து கருடனைத்தடுக்க முயல்வேன்’ என்று சொல்லி ஸுமுகனை யழைத்துக்கொண்டு இந்திரனிடஞ் சென்று சேர, அங்கு இந்திரனுடனே உபேந்திர மூர்த்தியான திருமாலும் வீற்றிருக்கையில், நிகழ்ந்த செய்திகளையெல்லாம் நாரத முனிவர் சொல்லக் கேட்ட திருமால் இந்திரனை நோக்கி ‘இவனுக்கு அமிர்தத்தைக் கொடுக்கலாம்; அதனால் இவர்கள் இஷ்டஸித்தியடைந்தவராவர்’ என்று சொல்லியருள, இந்திரன் கருடனது பராக்ரமத்தை ஆலோசித்துத் திருமாலை நோக்கி ‘தேவரீரே இவனுக்கு அமுதத்தையும் ஆயுளையுந் தந்தருள்க’ என்றதற்கு, திருமால் ‘ஸகலலோகாதிபதியான நீ கொடுப்பதே போதும்’ அதனை மாற்றுபவர் யார்?’ என்று கூற, பிறகு இந்திரன் ஸுமுகனுக்கு அமிர்தமுண்பியாமல் நீண்ட ஆயுளை வரமளிக்க, உடனே மாதலி ஸுமுகனுக்குத் தன்மகளை மணம்புரிவித்தான்.  இச்செய்தியைக் கேள்வியுற்ற கருடன் கோபங்கொண்டு இந்திரனோடு மாறுபட்டுத் தனது இரையை அவன் தடுத்துவிட்டதற்காகப் பலபல நிஷ்டூர வார்த்தைகள் கூறுகையில், ஸுமுகன் தான் நீண்ட ஆயுளை வரம்பெற்றிருந்தாலும் கருடனுடைய கறுவுதலைக் கண்டஞ்சிப் பாம்புவடிவமாய்த் திருமாலினருகிற் சேர்ந்து அப்பெருமானது கட்டிலின் காலைக்கட்டிக்கொண்டு சரண்புக, பின்பு கருடன் திருமாலை நோக்கி ‘ஸகல தேவர்களினுள்ளும் மஹாபலசாலியானவுன்னைச் சிறிதும் சிரமமின்றி இறகு முனையாற் சுமக்கின்ற என்னினும் வலிமையுடையார் யார்? இதனைச்சற்று ஆலோசித்துப்பார்’ என்று செருக்கிப்பேச, அக்கடுஞ்சொற்கேட்ட திருமால் கருடனை நோக்கி ‘மிகவும் துர்ப்பலனான நீ தன்னைத்தானே மஹாபலசாலியாக எண்ணி எமது முன்னிலையில் தற்புகழ்ச்சி செய்துகொண்டது போதும்; மூவுலகமும் எனது உடம்பை எனது உடம்பை வஹிக்கமுடியாதே; யானே எனது சக்தியால் என்னை வஹித்துக்கொண்டு உன்னையும் வஹிக்கின்றேன்; எனது இந்த வலக்கையொன்றை மாத்திரமாவது நீ தாங்கவல்லையாயின் உனது செருக்குமொழி பயன்பட்டதாகும்’ என்று சொல்லிக் கருடனது தோளில் தனது வலக்கையை வைத்தமாத்திரத்தில் அவன் அதன் அதிபாரத்தைத் தாங்கமாட்டாமல் வருந்தி வலிமை யொழிந்து மூர்ச்சித்து விழுந்து, பின்னர் அரிதில் தெளிந்து திருமாலை வணங்கிப் பலவாறு பணிமொழிகூறி ‘என்பிழையைப் பொறுத்தருளவேண்டு’ மென்று பிரார்த்திக்க, திருமால் திருவுள்ளமிரங்கி அவனுக்கு ஸமாதானங்கூறித் தனது திருவடியின் பெருவிரலால் ஸுமுகனையெடுத்துக் கருடன் தோளிலிட்டு ‘இவனை நீ உனது அடைக்கலமாகக்கொண்டு பாதுகாக்கக்கடவை’ என்று குறிப்பிக்க, அது முதல் கருடன் ஸுமுகனோடு நண்புகொண்டு அவனைத் தோளில்தரிக்க, அவனும் அச்சமின்றி ‘கருடா! ஸுகமா?’ என்று க்ஷேமம் விசாரிப்பவனாயினன் என்ற வரலாறு இங்கு அறியத்தக்கது.  முதல் திருவந்தாதியில் “அடுத்த கடும்பகைஞற்கு” என்ற பாட்டிலும், நான்முகன் திருவந்தாதியில் “பதிப்பகைஞற்காற்றாது” என்ற பாசுரத்திலும் இந்த இதிஹாஸம் அருளிச்செய்யப் பட்டமையுங்காண்க.

“நஞ்சுசோர்வது” “வெஞ்சினம்” என்ற அடைமொழிகள் பாம்பின் இயற்கைக் கொடுமையை விளக்குவன.  இதனால், சரணாகதி செய்ய அதிகாரிகளாகாதாரில்லை யென்பது தோன்றும்.

நெஞ்சில்கொண்டு =  ‘இவனுக்கு நாமல்லது வேறுகதியில்லை’ என்பதைத் திருவுள்ளத்திற்கொண்டு என்னவுமாம்.  இது எம்பெருமானது குளிர்ந்த திருவுள்ளத்தைக்காட்டும்.

‘எனது அடியாரின் எதிரிகளை ஒருகாலும் க்ஷமிக்கமாட்டேன்’ என்றும் ‘என்னைச் சரணம்புக்கவரை எவ்விதத்திலும்; கைவிடேன்’ என்றும் எம்பெருமான் கொண்டள்ள ஸங்கல்பமிரண்டும் மாறுபடாமல் நிறைவேறுமாறு, அப்பெருமான் தன்னைச் சரணமடைந்த ஸுமுகனைத் தான் நோரில் ரக்ஷரியாமல் அவனுக்குப் பகையான கருடன் கையிலேயே காட்டிக்கொடுத்து அவனைக் கொண்ட பாதுகாத்தருளிய அருமைத்திறத்தைப் பாராட்டி “நின் அஞ்சிறைப்பறவைக்கு அடைக்கலங் கொடுத்து அருள்செய்தது” என்றார்.  முன்பு தமக்குள் பகைமையிருந்தாலும் எம்பெருமானைச் சரணமடைந்தாற் பின்பு அப்பகைமை தவிர்ந்து நண்பராவரென்ற உண்மை இங்குப்புலனாம்.

வெஞ்சொலாளர்கள் =  யமபடர் தாம் செய்யும் தண்டனைகளைக் காட்டிலும் சொல்லும் கடுஞ்சொற்கள் மிகக் கொடியவையா யிருக்குமென்க.  தமது தீவினைகள் பலவென்பது தோன்ற “கொடிய செய்வனவுள” என்று பன்மையாகக் கூறினார்; பாபங்களின் பன்மைக்குத் தக்கபடி தண்டனைகளுக்கும் பன்மையுண்டே.  கொடிய செய்வன = கொடியவையாகச் செய்பவை.  அவை பலவற்றையுந் தொகுத்துச் சாதியொருமையால் ‘அதற்கு’ என்றனர்: அவர்கள் செய்யும் கொடுந் தொழில்களுக்கு என்றபடி.

அடியேன் அஞ்சிவந்து என்ற சொற்சேர்க்கையினால் - உனக்கு அடிமைப் பட்ட பின்பும் யான் யமனுக்கு அஞ்சலாமோ? என்பது குறிப்பிடப்பட்டதாகும்.

அடைக்கலம் - பாதுகாக்கப்படும் பொருள்; ரக்ஷ்யவஸ்து.

English Translation

In the beautiful fragrant flower-tank, stood an aged elephant with lotus caught in jaws of a crocodile terrible loudly bellowing for help from the Quarters.  How you came and you wielded your discus, slicing open the mouth of the tyrant! Ocean-hued Lord, I've come to your lotus feet, O Lord surrounded by groves in Arangam!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஏழாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

எட்டாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஒன்பதாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பத்தாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain