(1424)

ஓது வாய்மையும் உவனியப் பிறப்பும் உனக்கு முன்தந்த அந்தண னொருவன்,

காத லென்மகன் புகலிடங் காணேன், கண்டு நீதரு வாயெனக் கென்று,

கோதில் வாய்மையி னானுனை வேண்டிய குறைமு டித்தவன் சிறுவனைக் கொடுத்தாய்,

ஆத லால்வந்துன் அடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே,

 

பதவுரை

அணி பொழில் திரு அரங்கத்து அம்மானே!--;

ஓது

-

ஓதியுணர்தற்கு உரிய

வாய்மையும்

-

ஸத்யவசநமான வேதத்தையும்

உவனியம் பிறப்பும்

-

(அதனை ஓதுதற்கு அதிகார முண்டாம்படி) உபநயனஞ் செய்தலால் வரும் (இரண்டாவது) பிறப்பையும்

முன்

-

முன்பு

உனக்கு தந்த

-

உனக்கு அளித்தவனும்

கோது இல் வாய்மையினால்

-

(சாபாநுக்ரஹ சக்தியினால்) பழுதுபடுதலில்லாத  மெய்ம் மொழிகளையுடையவனுமான

அந்தணன் ஒருவன்

-

(ஸாந்தீபிநியென்னும்) ஒரு பிராமணன்

காதல் என் மகன் புகல் இடம் காணேன்

-

‘(எனது) அன்புக்கு இடமான புத்திரன் சென்ற இடத்தை அறியேன்;

கண்டு நீ எனக்கு தருவாய் என்று

-

நீ (அவனிருக்கின்ற இடத்தை) நாடி யுணர்ந்து அந்த மகனை எனக்குக் கொடுக்கவேணும்’ என்று

உனை வேண்டிய

-

உன்னைப் பிரார்த்தித்த

குறை

-

அவனது வேண்டுகோளை

முடித்து

-

நீ தலைக்கட்டி

அவன் சிறுவனை கொடுத்தாய்

-

அவன் மகனை (அவனுக்குக்) கொணர்ந்து கொடுத்தருளினாய்;

ஆதலால்

-

(இங்ஙனம் செயற்கரிய செயல் செய்து அன்பர் குறையைத் தீர்த்து அவர் வேண்டியதை வேண்டியபடி தந்தருள்பவன் நீ) ஆகையால்

வந்து உன் அடி இணை அடைந்தேன்--.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஸாந்தீபினிக்கு எம்பெருமான் திருவருள்செய்ததை முன்னிட்டுக்கொண்டு சரணம்புகுகிறாரிதில்.  ஸாந்தீபினியின் வேண்டுகோளைப் பூர்த்திசெய்ததுபோல அடியேன் வேண்டுகோளையும் நிறைவேற்ற வேண்டுமென வேண்டுகின்றாராயிற்று.

இடைப்பிள்ளையான கண்ணபிரான் ஸாந்தீபினியிடத்தில் வேதமோதின னென்பதும் உபநயநஸம்ஸ்சாரம் பெற்றனனென்பதும் எங்ஙனே சேருமென்று சிலர் சங்கிப்பர்; ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவிலொருத்தி மகனா யொளித்து வளர்ந்தவனான கண்ணன் க்ஷத்ரிய ஜாதியிற் பிறந்தவன்.  பிராமணர் க்ஷத்ரியர் வைசியர் என்னும் மூன்று ஜாதியாரும் தேஹோத்பத்தியாகிய இயற்கைப் பிறப்புடனே செயற்கைப் பிறப்பாக உபநயனமென்கிற ஸம்ஸ்காரத்தாலாகும் ஜ்ஞாநஜந்மத்தையுங்கொண்டு இருபிறப்பாளராய் ‘த்விஜர்’ எனப்படுவரென்க.

உவனியம் - உபநயனமென்ற வடசொல்லின் சிதைவு.  பூணூல் தரிக்குஞ்சடங்கு.  மாணாக்கனை ஆசாரியள் தன்னிடத்தே வைத்துக்கொள்ளுதல் என்று பதப்பொருள்.

“அந்தணனொருவன்” என்ற விடத்துப் பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானத்திலே--. “முற்பட த்வயத்தைக்கேட்டு இதிஹாஸ புராணங்களையுமதிகரித்து, பரபக்ஷப்ரதி க்ஷேபத்துக்குடலாக ந்யாயமீமாம்ஸைகளு மதிகரித்து, போதுபோக்கும் அருளிச்செயலிலேயாம்படி 1.பிள்ளையைப்போலே அதிகரிப்பிக்க வல்லவனையிறே ‘ஒருவன்’ என்பது” என்றருளிச் செய்யப்பட்டுள்ள வாக்கியம் நெஞ்சிலே தேனூறி யெப்பொழுதும் தித்திக்கும்.

காதல் என்மகன் = எனது அன்பே ஓருருவங்கொண்டது என்னும்படியான புத்திரன் என்றுரைக்கவுமாம்.  என்மகன் புகலிடம் காணேன் = என்புத்திரன் கடலிலே புக்கான்; அவன் நகரத்திலிருக்கின்றானோ? கர்ப்பத்திலிருக்கின்றானோ? எங்கே போயிருக்கின்றானென்று அறிகின்றிலேன் என்றவாறு.

கடலில் மூழ்கிய குமாரனை மீட்டுக்கொடுத்தருளியதுபோல, ஸம்ஸாரஸாகரத்தில் மூழ்கிய என்னை மீட்டுப் பாதுகாத்தருள வேண்டுமென்பது இப்பாட்டுக்குக் கருத்தாகக் கொள்ளத்தகும்.

பிள்ளை – ‘நம்பிள்ளை’ என்கிற ஜகதாச்சார்யர்.

 

English Translation

Then in yore the most learned Rishi begot Markandeya whom yama had a claim on, Fearing whom the child prayed to your lotus feet, when you gave him Abhayam and then rescued him. Then you gave him the shade of your lotus-feet abidingly sought by the seeker.  Ocean-hued Lord. I've come to your lotus feet, O Lord surrounded by groves in Arangam!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain