nalaeram_logo.jpg
(1425)

வேத வாய்மொழி யந்தண னொருவன் எந்தை நின்சர ணென்னுடை மனைவி,

காதல் மக்களைப் பயத்தலும் காணாள் கடியதோர் தெய்வங்கொண் டொளிக்கும், என்றழைப்ப

ஏத லார்முன்னே யின்னரு ளவர்க்குச் செய்துன் மக்கள்மற் றிவரென்று கொடுத்தாய்,

ஆத லால்வந்துன் அடியிணை யடைந்தேன் அணிபொ ழில்திரு வரங்கத்தம் மானே,

பதவுரை

அணி பொழில் திரு அரங்கத்து அம்மானே!;

வேதம் வாய் மொழி

-

வேதங்களையே வாய்ப்பேச்சாகவுடையவனான

அந்தணன் ஒருவன்

-

ஒரு வைதிகப்ராமணன் (உன்னை அடுத்து)

எந்தை

-

‘எமது தலைவனே!

நின் சரண்

-

உனக்கு அடைக்கலப் பொருளாகிறேன் யான்;

என்னுடை மனைவி

-

எனது மனைவியானவள்

காதல் மக்களை

-

தான் ஆசையுடன் பெறுகின்ற பிள்ளைகளை

பயத்தலும் காணாள்

-

பெற்றவளவிலே காணப்பெறுகின்றாளில்லை;

கடியது ஓர் தெய்வம்

-

கொடுந் தன்மையுடையதான ஒரு தெய்வமானது

கொண்டு ஒளிக்கும்

-

(அப்பிள்ளைகளைக்) கொண்டு போய் ஒளித்து விடுகின்றது’

என்று

-

என்று (தன் குறையைச்) சொல்லி

அழைப்ப

-

அதற்குப் பரிஹாரம் செய்வதற்கு உன்னை யழைக்க

ஏதலார் முன்னே

-

(அவளைப் பரிஹாஸித்துக் கொண்டிருந்த) பகைவர்களது முன்னிலையிலே

அவற்கு

-

அந்த வைதிகனுக்கு

இன் அருள் செய்து

-

இனிமையான கருணையைச் செய்து

இவர் உன் மக்கள் என்று கொடுத்தாய்

-

‘நான் அழைத்துக் கொண்டு வந்த இவர்கள் உன் பிள்ளைகள்’ என்று சொல்லிக் கொணர்ந்து கொடுத்தருளினாய்;

ஆதலால்

-

(இப்படி செயற்கரியன செய்து சரணாகதரக்ஷணம் செய்தருள்பவன் நீ) ஆதலால்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- வைதிகனொருவன் எம்பெருமானருள் செய்ததை முன்னிட்டுக்கொண்டு சரணம் புகுகிறாரிதில்.  வைதிகனது வேண்டுகோளை அருளினாற்போல என் வேண்டுகோளையும் அருள்வாய் என வேண்டுகின்றார்.

வேதவாய்மொழியந்தணன்   = “பொய்ம்மை மொழி புகன்றறியேன் புகலமன மெண்ணுகினும், மெய்ம்மையலதுரையாநா வேதநவில்பயிற்சியால்” என்றாற்போலக் கொள்ளலாம்.  வேதமோதினவனாகையாலே வாய்மை (ஸத்வம்) பொருந்திய மொழிகளை யுடையான் என்கை.  வேதம்போலப் பயன்நிறைந்த வார்த்தையளையுடையான் என்றுமாம்.

எந்தை - இயல்பாகிய அண்மைவிளி; எனது பரமபிதாவே! என்றபடி.  புத்திரனைப் பிதா காப்பதுபோல என்னை நீ காக்கக்டவை என்ற குறிப்பு.  காதல் மக்களை = மறுமையில தாய்தந்தையர்க்கு ‘புத்;’ என்ற நரகத்தை இல்லாதபடி செய்தலும், இம்மையிலும் “மக்கள் மெய்தீண்டலுடற்கின்பம் மற்று அவர் சொற்கேட்டலின்பஞ்செவிக்கு” என்றபடி பலவகையின்பந்தருதலும் பற்றி விரும்பப்படுகின்ற புதல்வர் என்கை.  மக்கள் - பன்மைப்பெயர்.  பயத்தலும் - இறந்தகாலவினையெச்சம்.

கடியதோர் தெய்வங்கொண்டொளிக்கும் = இப்படியிருப்பதொரு தேவதையை இதுக்கு முன்பு நான் கண்டறியேன்.  யமனும் உடலை இங்கேவிட்டு உயிரையன்றோ கவர்ந்துகொண்டு போவது; பெற்று முகத்திலே விழிப்பதற்கு முன்னே உடலோடே கொண்டுபோய் ஒளியா நின்ற தெய்வம் இன்னதென்று தெரியவில்லையே! என்றான்.  “கடியதோர் தெய்வம்” என்னாதே ‘கடியதெய்வம்’ என்னும் பாடமும் வழங்கிவருகின்றது; இது நன்கு பொருந்தும்; முன் பின்னடிகளோடு அளவொத்ததாம்.

ஏதலார்முன்னே – ஏதலார் என்று சத்துருக்களுக்குப் பேர்: எப்படிப்பட்ட அருமையான காரியமும் எம்பெருமானருளால் கைகூடுமென்கிற கருத்தின்றியே அஹங்கார மமகாரமுடையராய்த் தம் முயற்சியாலேயே யாவும் ஆகுமென்னும் எண்ணமுடையாரை இங்கு சத்துரக்களென்கிறது.  “பிறந்த குழந்தைகள் செத்து எத்தனையோ வருஷங்களாயினவாம்; அவை இன்னவிடத்திலே போயினவென்று தெரியாதாம்; இப்படியிருக்க கிருஷ்ணனைக் கொண்டு மீட்டுக் கொள்ளப் புகுகிறானாம்” என்று ஏசுகின்றவர்கள் கண்முன்னே என்றவாறு.

English Translation

Then in yore you did go to the learned Vedic seer for your schooling and training.  When the seer said he wanted his only son come to life from his long-drowned-in-sea-abode, you did go to the sea in the West and bring his son as he was and returned him.  Ocean-hued Lord, I've come to your lotus feet, O Lord surrounded by groves in Arangam!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain