(1380)

பண்டிவ் வைய மளப்பான் சென்றுமாவலி கையில்நீர்

கொண்ட ஆழித் தடக்கைக் குறளனிட மென்பரால்,

வண்டு பாடும் மதுவார் புனல்வந்திழி காவிரி

அண்ட நாறும் பொழில்சூழ்ந்து அழகார்தென் னரங்கமே.

 

பதவுரை

வண்டு பாடும் மது வார் புனல் வந்து இழி காவிரி

-

வண்டுகள் பாடப்பெற்ற தென் ஒழுகுகின்ற தீர்த்தமானது வந்து பிரவஹிக்கின்ற திருக்காவேரியினாலும்

அண்டம் நாறும் பொழில்

-

ஆகாச மெங்கும் பரிமளிக்கின்ற சோலைகளாலும்

சூழ்ந்து அழகு ஆர்

-

சூழப்பட்டு அழகு பொருந்தியதான

தென் அரங்கம்;

பண்டு

-

முன்பொருகால்

இ வையம் அளப்பான் சென்று -

-

இப்பூமியை அளந்து வசப்படுத்திக் கொள்வதற்காகப் போய்

மாவலி கையில்

-

மஹாபலியினுடை கையில் நின்றும் தாந ஜலத்தை

ஆழி தடம் கை கொண்ட

-

திருவாழியை யேந்தவல்ல தடக்கையாலே ஏற்றுக்கொண்ட

குறளன்

-

வாமநமூர்த்தியினது

இடம் என்பர்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- திருக்காவிரித் தீர்த்தம் மதுவோடுகூடிப் பெருகும்; மதுவில் நசையாலே வண்டுகள் வந்து மொய்க்கும்: 1. “ஈக்கள் வண்டொடு மொய்ப்ப வரம்பிகந்து, ஊக்கமேமிகுந்து உள் தெளிவின்றியே, தேக்கெறிந்து வருதலிற்றீம்புனல், வாக்கு தேனுகர் மாக்களை மானுமே” என்றது காண்க

 

English Translation

Oh, they say the Southern Arangam, -Surrounded by waters that flow through beautiful groves wafting their fragrance everywhere, buzzing with bees that drink nectar and sing, -in the abode of the discus-wielding Lord who came as a manikin to Mabali's sacrifice and took the Earth as a gift from him

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain