(1381)

விளைத்த வெம்போர் விறல்வா ளரக்கன்நகர் பாழ்பட,

வளைத்த வல்வில் தடக்கை யவனுக்கிட மென்பரால்,

துளைக்கை யானை மருப்பு மகிலும்கொணர்ந் துந்தி,முன்

திளைக்கும் செல்வப் புனல்கா விரிசூழ்தென் னரங்கமே,

 

பதவுரை

துளைக்கை யானை மருப்பும் அகிலும் கொணர்ந்து மன் உச்சி திளைக்கும்

-

துதிக்கையையுடைய யானைகளின் தந்தங்களையும் அகில் மரங்களையும் அடித்துக் கொண்டுவந்து முன்னே தள்ளி லீலாரஸமனுபவிக்கின்ற

செல்வம் புனல் காவிரி சூழ்

-

திவ்யமான தீர்த்தத்தையுடைய காவேரியினால் சூழப்பட்ட

தென் அரங்கம்

வெம் போர் விளைத்த விறல் வாள் அரக்கன் நகர் பாழ்பட

-

கடுமையான யுத்தத்தை உண்டாக்கின பலிஷ்டனான வாட்படைவல்லனான இராவணனுடைய நகரமாகிய லங்கை பாழாகும்படியாக

வளைத்த வல்வில் தட கையவனுக்கு

-

வளைக்கப்பட்ட வலியவில்லைத் தடக்கையிலே உடையவனான பெருமானுக்கு

இடம் எனபர்

 

English Translation

Oh, they say the Soutehrn Arangam, -Surrounded by waters that wash a wealth of elephant-fusks and fragrant Agli wood, is the abode of the Lord who wielded his heavy bow and destroyed the city of the Rakshasas.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain