(1382)

வம்புலாம் கூந்தல் மண்டோதரி காதலன் வான்புக,

அம்பு தன்னால் முனிந்த அழகனிட மென்பரால்,

உம்பர் கோனு முலகேழும் வந்தீண்டி வணங்கும்,நல்

செம்பொ னாரும் மதிள்சூழ்ந்து அழகார்தென் னரங்கமே.


பதவுரை

உம்பர் கோனும் உலகு ஏழும் வந்து ஈண்டி வணங்கும்

-

தேவர்களுக்கு நிர்வாஹகனான பிரமனும் ஸப்த லோகங்களும் கிட்டி திரண்டு வணங்கப்பெற்றதாய்

நல் செம் பொன் ஆரும் மதிள் சூழ்ந்து அழகு ஆர்

-

நல்ல செம்பொன்னோடு ஒத்த மதிள்களால் சூழப்பட்டு அழகு பொருந்தியதான

தென் அரங்கம்;

வம்பு உலாம் கூந்தல் மண்டோதரி கதாலன் வான் புக

-

வாஸனை உலாவுகின்ற கூந்தலை யுடையளான மந்தோதரிக்குக் கணவனான இராவணன் வீர ஸ்வர்க்கமடையும்படியாக

அம்பு தன்னால் முனிந்த அழகன்

-

பாணங்களினால் சீறிக்கொன்றொழித்த வீரச்ரியையுடையனான இராமபிரானது.

இடம் என்பர்

 

English Translation

Oh, they say the Southern Arangam, -surrounded by golden walls, where Indra the king of gods leads the celestials in offering worship, -Is the abode of the beautiful Lord who rained arrows and despatched beautiful Mandadari's husband to heaven.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain