(1383)

கலையு டுத்த அகலல்குல் வன்பேய்மகள் தாயென,

முலைகொ டுத்தா ளுயிருண் டவன்வாழுமிட மென்பரால்,

குலையெ டுத்த கதலிப் பொழிலூடும் வந்துந்தி, முன்

அலையெ டுக்கும் புனற்கா விரிசூழ்தென் னரங்கமே,

 

பதவுரை

குலை எடுத்த கதலி பொழில் ஊடும் வந்து

-

குலைகள் ஓங்கியிருக்கப் பெற்ற வாழைத்தோப்பு களினுள்ளே புகுந்து

(அம்மரங்களை வேரோடே பறித்துக்கொண்டு)

முன் உந்தி அலை எடுக்கும் புனல் காவிரி சூழ்

-

முன்னே தள்ளி அலைவீசியடியாநின்ற தீர்த்தத்தையுடைத்தான காவேரியினால் சூழப்பட்ட

தென் அரங்கம்;

கலை உடுத்த அகல் அல்குல் தாய் என

-

பட்டாடையணிந்த அகன்ற நிதம்பத்தையுடையளான தாயாகிய யசோதைபோல (வந்து)

முலை கொடுத்தாள் வன் பேய்மகள்

-

முலையுண்ணக் கொடுத்தவளான வலிய (பூதனையென்னும்) பேய்ச்சியினுடைய

உயிர் உண்டவன் வாழ்இடம் என்பர்

-

பிராணனை உறிஞ்சி உண்ட கண்ணபிரான் வாழும் திவ்யதேசம் என்று சொல்லுவர்

 

English Translation

Oh, they say the Southern Arangam, -surrounded by the swift waters of the Kaveri that flows through banana plantations and carries away the fruit in its laps, -is the abode of the Lord who took the life of the ogress who came disguised as a beautiful nurse and gave the child suck from her poisoned breast.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain