(1384)

கஞ்சன் நெஞ்சும் கடுமல் லரும்சகடமுங்காலினால்,

துஞ்ச வென்ற சுடராழி யான்வாழுமிட மென்பரால்,

மஞ்சு சேர்மா ளிகைநீ டகில்புகையும், மறையோர்

செஞ்சொல் வேள்விப் புகையும் கமழும்தென் னரங்கமே,

 

பதவுரை

மஞ்சு சேர் மாளிகை நீடு அகில் புகையும்

-

மேகமண்டலத்தை அளாவியிருக்கிற மாளிகைகளிலுண்டான அதிகமான அகிற்புகையும்

மா மறையோர் செம் சொல் வேள்வி புயையும் கமழும்

-

சிறந்த வைதிக ப்ராமணர்கள் வேதங்களிற் விதிப்படியே நடத்துகிற யாகங்களிலுண்டான ஹோமதூமமும் (சேர்ந்து) பரிமளிக்கப்பெற்ற

தென் அரங்கம்

-

திருவரங்கமானது, -

கஞ்சன் நெஞ்சும் கடு மல்லரும் சகடமும் துஞ்ச

-

கம்ஸனுடைய மனமும் கடிய மல்லர்களும் சகடாஸுரனும் தொலையும்படி

காலினால் வென்ற

-

திருவடியாலே வென்றொழித்த உஜ்வலமான திருவாழியையுடைய பெருமான் ரித்யவாஸம் பண்ணுமிடம் என்று சொல்லுவார்கள்

 

English Translation

Oh, they say the Southern Arnagam, -surrounded by mansions that touch the clouds, where the fragrance of Agli smoke and the fire altar of Vedic seers fills the sky, -is the abode of the discus-wielding Lord who destroyed.   Kamsa, the rough wrestlers, and the bedevilled cart with his foot.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain