(1386)

சேய னென்றும் மிகப்பெரியன் நுண்ணேர்மையி னாய, இம்

மாயையை ஆரு மறியா வகையானிட மென்பரால்,

வேயின் முத்தும் மணியும் கொணர்ந்தார்ப்புனற் காவிரி,

ஆய பொன்மா மதிள்சூழ்ந் தழகார்தென் னரங்கமே,

 

பதவுரை

வேயின் முத்தும் மணியும் கொணர்ந்து

-

மூங்கில்களில் நின்று முதிர்ந்த முத்துக்களையும் ரத்னங்களையும் தள்ளிகொண்டுவந்து

ஆர் புனல் காவிரி

-

நிறைந்திருக்கிற தீர்த்தத்தையுடைய திருக்காவேரியாலும்

ஆய பொன் மா மதிள் சூழ்ந்து

-

தகுதியான அழகிய பெரிய திருமதிற்களாலும் சூழப்பட்டு

அழகு ஆர்

-

அழகு பொருந்தியிருப்பதான

தென் அரங்கம்;

என்றும்சேயன்

-

எந்நாளும் எட்டாமலிருப்பவன்

மிக பெரியன்

-

மஹாபுருஷன்;

நுண் நேர்மையன்

-

ஸூக்ஷ்மமான பொருள்களிற் காட்டிலும் ஸூக்ஷ்மத்தன்மை வாய்ந்தவன்,

ஆய

-

என்றிப்படி சொல்லக்கூடியதான

இ மாயை

-

இவ்வாச்சரியத்தை

அரும் அறியா வகையான்

-

ஒருவரும் அறியக் கூடாதபடியிருப்பவனான ஸர்வேச்வரனுடைய

இடம் என்பர்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- சேயனென்று ஆய இம்மாயை ஆருமறியாவகையான், - மிகப் பெரியனென்னு ஆய இம்மாயை ஆருமறியாவகையான். – நுண்ணேர்மையன் என்று ஆய இம்மாயை ஆருமறியாவகையான் - என்று இங்ஙனே கூட்டி மூன்றுவாக்கியமாக அநுஸந்தித்தால் பொருள் நன்கு விறங்கும்.  சேயன் என்றால் தூரத்திலிருப்பவன் என்று பொருள்; பரமபதத்தில் வீற்றிருக்கு மிருப்பைச் சொல்லுகிறது.  இவ்விருப்பின் ஆச்சரியத்தை யாரும் அறிய முடியாமை சொன்னபடி.  மிகப்பெரியன் என்றது – “தோள்களாயிரத்தாய் முடிகாளயிரத்தாய் துணைமலர்க்கண்களாயிரத்தாய், தாள்களாயிரத்தாய்” என்று சொல்லப்பட்ட விராட் ஸ்வரூபநிலைமையைச் சொன்னபடி இவவாச்சரியமம் ஒருவராலும் அறியமுடியாதபடி உள்ளவன் என்கை.

நுண்ணேர்மையன் என்றது ஸூக்ஷ்ம வஸ்துக்களிற் காட்டிலும் மிகவும் ஸூக்ஷ்ம ஸ்வரூபனாக வுள்ளவன் என்றபடி.  1. “பரந்த தண்பரவையுள் நீர் தொறும் பரந்துளன், பரந்த வண்டமிதென நில விசும்பொழிவறக், கரந்த சிலிடந்தொறும் இடந்திகழ் பொருள் தொறும், கரந்தெங்கும் பரந்துளன்” என்கிறபடியே அதிஸூக்ஷ்மமான பதார்த்தங்களெங்கும் வியாபித்துத் தரித்துக்கொண்டு நிற்கையாகிற இந்த சக்தியோகமும் ஆர்க்கும் அறிய வொண்ணாக தென்கை.  நேர்மை – நுட்பம். (“நுண்ணேர்மையினாய” என்று ஓதுவர்.) இப்படிப்பட்ட விசித்ர சக்தியுக்தனான பெருமான் வாழுமிடம் தென்னரங்கம் நவமணிகளைக் கொண்டு தள்ளுகின்ற திருக்காவிரியாலும் அழகிய திருமதிள்களாலும் சூழ்ப்பெற்றதாம் இது திருவாய்மொழி 1-1-10.

 

English Translation

Oh, they say the Southern Arangam, -surrounded by the swilling waters of Kaveri that wash pearls and gems against the golden walls of the temple, -is the abode of the Lord afar, the Lord over all, residing in every pore, a wonder which no one will ever understand.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain