(1387)

அல்லி மாத ரமரும் திருமார்வ னரங்கத்தை,

கல்லின் மன்னு மதிள்மங் கையர்கோன்கலி கன்றிசொல்,

நல்லிசை மாலைகள் நாலி ரண்டுமிரண் டுமுடன்,

வல்லவர் தாமுல காண்டு பின்வானுல காள்வரே.

 

பதவுரை

அல்லி மாதர் அமரும் திருமார்வன் அரங்கத்தை

-

பூவிற் பிறந்த பெரியபிராட்டியா பொருந்தி வாழப்பெற்ற திருமார்வையுடையனான ஸர்வேச்வரனுடைய திருவரங்கம் விஷயமாக,

கல்லின் மன்னு மதிள் மங்கையர் கோன் கலிகன்றி

-

கல்லாலே கட்டப்பட்ட திடமாயிக்கிற  மதிளையுடைத்தான திருமங்கை நகரில் உள்ளவர்களுக்கு தலைவரான ஆழ்வார்

சொல் நல் இசை மாலைகள்

-

அருளிச்செய்த நல்ல இசையோடு கூடின சொல் மாலையாகிய

நாலிரண்டும் இரண்டும்

-

இப்பத்துப்பாட்டுக்களையும்

உடன் வல்லவர்தாம்

-

கருத்தோடுகூட ஓதவல்லவர்கள்

உலகு ஆண்டு

-

இவ்வுலகில் (கோயில் வாழ்ச்சியை) அநுபவித்து

பின் வான் உலகு ஆள்வர்

-

பரமபதாநுபவத்தைப் பெறக்கடவர்.

 

English Translation

This garland of sweet Tamil songs is on the Lord of Arangam with lotus-lady Lakshmi on the his chest, by the strong walled Mangai king Kalikanri, -those who master it will rule the Earth, then rule the sky as well.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain