nalaeram_logo.jpg
(1476)

சொல்லாய் திருமார்வா உனக்காகித் தொண்டுபட்ட

நல்லே னை வினைகள் நலியாமை நம்புநம்பீ,

மல்லாகுடமாடி. மதுசூத னே உலகில் செல்லா

நல்லிசையாய் திருவிண் ணகரானே.

பதவுரை

திரு விண்ணகரானே!

மல்லா

-

மிடுக்குடையவனே!

குடம் ஆடீ

-

குடக்கூத்தாடினவனே!

மதுசூதனே

-

மதுவென்னும் அசுரனைக் கொன்றவனே!

உலகில் செல்லா

-

லோகத்தில் நடையாடாத (அபூர்வமான)

நல் இசையாய்

-

நல்ல கீர்த்தியை யுடையவனே!.

நம்பீ

-

பரிபூர்ணனே!,

திருமார்பா

-

பிராட்டியை மார்வில் உடையவனே!

சொல்லாய்

-

அடியேனுக்கு மறுமொழி கூறியருளவேணும்;

உனக்கு ஆகி

-

உன்விஷயத்தில்

தொண்டுபட்ட

-

அடிமைபூண்ட

நல்லேனை

-

விலக்ஷணனானவென்னை

வினைகள் நலியாமை

-

பாவங்கள் தொந்தரவு செய்யாதபடி

நம்பு

-

ஆதரித்தருளாய்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

அடியேனுடைய குற்றங்களையும் நற்றமாக உபபாதிக்கவல்ல பிராட்டி இணைபிரியாதிருக்கும்போது அடியேனுக்கு என்னகுறை? திருமாலே! மிடுக்குடையவனே! மிடுக்குக்குப் போக்குவீடாகக் குடக்கூத்தாடினவனே! பரிபூரணனே! மதுவைக் கொன்றவனே! கேலாவிலக்ஷணமான புகழையுடைய திருவிண்ணகரப்பனே! சோதிவாய்திறந்து ஒருவார்த்தையருளிச் செய்யவேணும்; தேவரீருக்கே அடிமைப்பட்டிருக்கையாகிற நன்மையையுடைய அடியேனைக் கருமங்கள் நெருக்காதபடி ஆதரித்தருளவேணுமென்கிறார்.

திருவாய்மொழியில் (10-2-1.) “கெடுமிடராயவெல்லாம்” என்ற பாசுரத்தின் ஈடு முப்பத்தாறாயிரப்படியில் பட்டருடைய ஐதி்ஹ்யமொன்று அருளிச்செய்யப்ட்டுள்ளது.  அது இங்கே அநுஸந்திக்கவுரியது; அதாவது – ஒருநாள் அழகியமணவாளன் வேட்டைத்திருநாளுக்காக ஓர் ஆற்றங்கரையிலே எழுந்தருளியிருந்தார்; அங்கே பல ஸ்ரீவைஷ்ணவர்களும் தாமுமாய்ப் பட்டர் எழுந்தருளியிருந்து பெருமாள் வடிவழகிலே ஈடுபட்டு அழகிய ஸ்ரீஸூக்திகளை அருளிச்செய்து கொண்டிருக்கையில், சில அரஸிகர்கள் வந்து ‘ஸந்த்யாகாலமாயிற்று’ என்று விண்ணப்பம் செய்தார்கள்;  ஸந்த்யாவந்தநம் அநுஷ்டிக்கவேணுமாகையாலே அதற்கு இடையூறாயிருக்கும் உபந்யாசத்தை நிறுத்தியருளவேணுமென்பது அவர்களுடைய கருத்துப்போலும்; அப்போது ‘பட்டர் நாம் பெருமாளழகிலே துவக்குண்டு இன்றொருநாள் அநுஷ்டாநத்தில் சிறிது விளம்பித்தோமென்றால் யமனுடைய ஓலையிலே இது ஒரு குற்றமாக ஏறமாட்டாதுகாணும்; உனக்காதித் தொண்டுபட்ட நல்லேனை வினைகள் நலியாமை நம்பு நம்பீ என்று திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பாசுரம் அறியீர்களோ? அவனுக்காகத் தொண்டுபட்டுப் போதுபோக்குமவர்களை வினைகள் நலியுமோ?’ இத்யாதிகள் அருளிச் செய்தாராம்.

மூன்றாமடியில், “மல்லார் குடமாடீ” “மல்லாற் குடமாடீ” “மல்லா குடமாடீ” என மூன்று பாடங்கள் உண்டு; மல்லா! என விளியான பாடமே மிக வழங்குவது.  குடமாடி! = தலையில் குடங்களை வரிசையாக அடுக்கிவைத்துக்கொண்டு அவை அசையாமல் நர்த்தனம் செய்வது குடக்கூத்தாம்

English Translation

O Lord of Tiruvinnagar!  O pot-dancer lord!  Madhusudana speak to me.  O Perfect one whose glory the world will never sing enough!  Lord with Sri on chest!  Pray ensure the safety and well being of this servant of yours.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain