nalaeram_logo.jpg
(1330)

பேசு கின்ற திதுவே வைய மீரடி யாலளந்த,

மூசி வண்டு முரலும கண்ணி முடியீர், உம்மைக்காணும்

ஆசை யென்னும் கடலில் வீழ்ந்திங் கயர்ந்தோம், அயலாரும்

ஏசு கின்ற திதுவே காணும் இந்த ளூரீரே.

பதவுரை

வையம் ஈர் அடியால் அளந்து

-

உலகங்களை இரண்டு அடிகளாலே அளந்து கொண்டவராயும்

வண்டு மூசி முரலும் கண்ணி முடியீர்

-

வண்டுகளானவை மொய்த்துக்கொண்டு ரீங்காரம் செய்யப்பெற்ற மாலையை திருமுடியில் அணிந்து கொண்டவராயுமிருக்கிற

இந்தளூரீர்

-

திருவிந்தளூர் நாதரே!,

இங்கு

-

இவ்வுலகில்

உம்மை காணும் ஆசை என்னும் கடலில் வீழ்ந்து

-

உம்மை ஸேவிக்க வேணுமென்கிற ஆசையாகிற கடலிலே விழுந்து

அயர்த்தோம் v

-

அறிவு கெட்டோம்;

அயலாரும் ஏசுகின்றது இதுவே காணும்

-

பிறகும் பரிஹஸிப்பது இவ்விஷயத்தைப் பற்றியேகிடீர்;

பேசுகின்றது இதுவே

-

உமக்கொரு பழியில்லாமலிருக்கவேணு மென்பதே நாம் சொல்லுவது.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இந்தளூரெம்பிரானே ! உன்னை நான் ஸேவித்தாலும் ஸேவிக்கிறேன், இழந்தாலும் இழக்கிறேன்; இஃது ஒரு பெரிய விஷயமன்று; முக்கியமாக ஒன்று சொல்லுகிறேன் கேளாய்; நீ குணசாலியென்று பேர்படைப்பதற்குப் படாதபாடுகள் பட்டிருக்கிறாய்; மாவலியிடம் குறளுருவாய்ச்சென்று மூவடிமண் இரந்துபெற்று த்ரிவிக்ரமனாகி மூவுலகங்களையுமளந்து இத்தனைபாடுகள் பட்டுப் பெரியகுணம் ஸம்பாதித்தாய்; என்னொருவனை உபெக்ஷிப்பதனால் அக்குணத்தை இழக்கப்போகிறாய்; ஒருவரும் அபேக்ஷியாதிருக்கச்செய்தேயும் எல்லார் தலையிலும் திருவடியை வைத்தருளின நீ, பல்பன்னிரண்டுங் காட்டி யாசிக்கின்ற என்னுடைய விருப்பத்தை நிறைவேற்றாவிடில் குணக்கேடுவிளையாதோ? இதனை ஆராய்ந்தருள் என்கிறார்.

உம்மைக் காணுமாசை யென்னுங் கடலில் வீழ்ந்து இங்கு அயர்த்தோம் - ‘திருமங்கை மன்னன் திருவிந்தளூர்ப் பெருமானைக்காண ஆசைப்பட்டு அதுபெறாதே முடிந்தான்’ என்று நாற்சந்தியிலே வார்த்தை கிளம்பினால் இதனில் மிக்க அவத்யமுண்டோ? ‘அயலார் ஏசுகின்றதும் இதுவே, நான் பேசுகின்றதும் இதுவே, என்று முடிவையும் முதலையுங் கூட்டி யோஜித்துக்கொள்க. ‘ஒருவர் ஆசைப்பட்ட அழகையும் ஒருவர் அந்த ஆசைக்கு முகங்காட்டின அழகையும் என்ன சொல்லுவோம்!, ஸர்வரக்ஷகன் படி இப்படியன்றோ இருப்பது!’ என்று அயலார் ஏசுவார்கள்; அப்படிப்பட்ட ஏச்சுக்கு இடமாகும்படி நடந்துகொள்ளவேண்டாம் என்பதே அடியேன் சொல்லுவது.

English Translation

O Lord of indalur!  You took the Earth in two strides and wore the crown of bee-humming Tulasi garland, I feel into the ocean of a desire to see you here, and despaired.  Others too are complaining about the same thing.  This is what I say.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain