nalaeram_logo.jpg
(13)

வண்ண மாடங்கள் சூழ்திருக் கோட்டியூர்

கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்

எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக்

கண்ணன் முற்றம் கலந்துஅள ராயிற்றே.

பதவுரை

வண்ணம்

-

அழகு பொருந்திய

மாடங்கள்

-

மாடங்களாலே

சூழ்

-

சூழப்பட்ட

திருக்கோட்டியூர்

-

திருக்கோட்டியூரில் (எழுந்தருளியுள்ள)

கேசவன்

-

கேசவனென்ற திருநாமமுடையனாய்

நம்பி

-

கல்யாணகுண பரிபூர்ணனான

கண்ணன்

-

ஸ்ரீக்ருஷ்ணன்

இன் இல்

-

(நந்தகோபருடைய) இனிய திருமாளிகையிலே

பிறந்து

-

திருவவதிரித்தருளின வளவிலே,

(திருவாய்ப்பாடியிலுள்ளார்)

எண்ணெய்

-

எண்ணெயையும்

சுண்ணம்

-

மஞ்சள் பொடியையும்

எதிர் எதிர் தூவிட

-

(ஸந்தோஷத்தாலே ஒருவர்க்கொருவர்) எதிர்த்துத்தூவ,

கண்டக்கினிய

-

விசாலமாய்

கல்

-

விலக்ஷ்ணமான

முற்றம்

-

(நந்தகோபர் திருமாளிகையில்) திருமுற்றமானது

கலந்து

-

(எண்ணெயும் மஞ்சள் பொடியும்    துகையுண்டு) தன்னிலே சேர்ந்து

அளறு ஆயிற்று

-

சேறாய்விட்டது.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** - திருக்கோட்டியூரில் எழுந்தருளியிருக்கிற எம்பெருமான் திருவாய்ப்படியில் நந்தகோபர் திருமாளிகையில் ஸ்ரீக்ருஷ்ணனாக அவதரித்தவளவில் அங்குள்ளவர்கள் எல்லோரும் அளவுகடந்த ஆநந்தமடைந்து, எண்ணையையும் மஞ்சள் பொடியையும் ஒருவர்மேல் ஒருவர் தூவிக் கொள்ளவே அவ்விரண்டும் கீழேவிழுந்து ஒன்று சேர்ந்து அந்தத் திருமாளிகையின் முற்றம் முழுவதையும் சேறுமயமாக ஆக்கிவிட்டன.

‘‘------  நாராயண:. . . . . . . . . . .  (ஸ்ரீமந்நாராயணன் திருப்பாற்கடலில் சேஷசயனத்தை விட்டு நீங்கி வடமதுரையில் வந்து பிறந்தான்) இதியாதி பிரமாணங்களாலே க்ஷீராப்தியிலிருந்து எம்பெருமான் கண்ணனாக அவதரித்தமை விளங்காநிற்க, இங்கே திருக்கோட்டியூரில் நின்றும் அவதரித்ததாகச் சொல்லுகிறது என்னவெனில், முன்பு இரணியன் மூவுலகங்களையும் அரசாண்டபோது தேவதைகள் அவ்வசுரனை முடிப்பதற்கு வேண்டிய உபாயத்தை ஆலோசிப்பதற்குத் தகுதியானதும் அசுரர்களின் உபத்ரவமற்றதுமான இடத்தைத் தேடுமளவில், கதம்பமுனியின் சாபத்தினால் துஷ்டரொருவரும் கிட்டவர முடியாமலிருந்த இந்த (திருக்கோட்டியூர்) க்ஷேத்திரம் க்ஷீராப்தி போலவே ஆலோசிப்பதற்கு ஏகாந்தஸ்தாகமாய் இருந்தபடியாலும், தேவதைகளின் கூட்டத்தில் எழுந்தருளி அவர்களை ரக்ஷிக்க வேண்டிய ரீதியைச் சிந்திக்கின்ற க்ஷீராப்தி நாதன் போலவே இந்த க்ஷேத்திரத்து எம்பெருமானும் சேஷசாயியாய் இருப்பதனாலும், தமக்கு மங்களாசாசநத்துக்குக் கூட்டுறவான செல்வநம்பியைப் பற்றிச் சொல்லும்போது   ஸ்மரிக்கநேர்ந்த இந்த திவ்ய தேசத்தினிடத்தில் தமக்குள்ள அன்புமிகுதியினாலும் இப்படி ஐக்கியமாக அருளிச்செய்தாரென்று கொள்க.  தேவர்கள் கூட்டமாயிருந்து ஆலோசித்தஸ்தலமென்கிற காரணம் பற்றியே இதற்கு கோஷ்டீபுரம் என்று திருநாமமாயிற்று.  அதுவே தமிழில் கோட்டியூர் என்றாயிற்று.

கண்ணபிரான் வடமதுரையில் கம்ஸனுடைய சிறைக்கூடத்திலே பிறந்திருக்க, நந்தகோபருடைய திருமாளிகையிற் பிறந்ததாகச் சொன்னது -  கம்ஸனுக்குத் தப்பி கோகுலத்தில் பிரவேசித்த பின்புதான் இவன் பிறந்ததாக நினைத்திருக்கையாலே.

பிறந்தினில் -  இதை முழுச் சொல்லாகக் கொண்டு ‘பிறந்தவளவில்’ என்றுமுரைக்கலாம்.

‘‘பிறந்து இன் இல்’’ என்று பிரித்துக் கொண்டால் பிறந்து ‘பிறக்க’ என்னும் செயவெனச்சத்தின் திரிபாம்.  ‘‘சொல்திரியினும் பொருள் திரியாவினைக்குறை’’ என்னும் நன்னூற் சூத்திரமறிக.  இனி, ‘பிறந்த இன் இல் என்றும் பிரிக்கலாம்.  பிறந்த போக்யமான க்ருஹத்திலே என்றபடி.

எள் + நெய் = எண்ணெய்.  ‘சூர்ணம்’ என்ற வடசொல் சுண்ணமெனத் திரிந்தது.  தூவிட -  தூவியிட.

கண்ணன் முற்றம் -  கண்ணன் பிறந்தபோதே அவனையே திருமாளிகைக்குத் தலைவனாக நந்தகோபர் அபிமானித்ததனால் ‘கண்ணபிரானுடைய முற்றம்’ என்கிறார் என்றுமுரைக்கலாம்.  ‘கண் நல் முற்றம்’ என்றும் பிரிக்கலாம்.

English Translation

When the Lord Sri Krishna Kesava was born in Tirukkottiyur of beautiful mansions they spilled oil and turmeric powder on one another, slushing the portico of Krishna’s house.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain